606 ஆற்றல், ஹைடிரஜன் எரிபொருள்
606 ஆற்றல், ஹைடிரஜன் எரிபொருள் சென்று குழாய் வழியாக ஹைடிரஜனை ஓரிடத்திலி ருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு சென்று பகிர்ந்தளிப்பதற்கான செலவு மின்திறனை ஓரிடத் திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு பகிர்ந்தளிப்பதற்கான செலவைவிடக் குறைவு என்பதை ஆய்வு தெரிவிக்கிறது. தற் போதுள்ள இயற்கை வளிமத்தைச் செலுத்திடும் குழாய் வழியையும் அதன் பகிர்வு அமைப்புகளையும் பயன்பாட்டிற்குப் ஹைடிரஜன் பயன்படுமாறு செய்யலாம். மீத்தேனினுடைய வெப்ப மதிப்பான 913 பி. வெ. அ. கள்/பருமன் அடி உடன் ஒப்பிடும் போது, ஹைடிரஜனுடைய நிகர வெப்ப மதிப்பு 275 பி. வெ. அ. கள்/பருமன் அடி ஆகும். ஆனால் ஹைடிரஜனுடைய குறைந்த அடர்த்தியும் பிசுப்புத் தன்மையும் மீத்தேனைப் போன்ற அதே அளவு வெப்ப ஆற்றலைக் குழாய் வழியாக வழங்க வழி வகுக்கும். ஆனால் அதிக அழுத்தம் செய்வதற்காகக் கூடுதல் செலவு செய்ய வேண்டும். வீட்டில் வெப் பம் பெறுவதற்காக இயற்கை எரிவாயுவைக் காட்டிலும் ஹைடிரஜனுடைய வெப்ப ஆற்றலை மிகவும் திறம்படப் பயன்படுத்தலாம். ஏனெனில் காற்றுத் துளையற்ற வெப்பப்படுத்தும் களில் வெப்ப இழப்பின்றி ஹைடிரஜனை எரிக்க லாம். இதற்கான காரணம் அதனை எரித்த பின் கிடைக்கும் ஒரே ஒரு விளைபொருள் நீர் என்பதே. சுடரற்ற இயக்கத்தை ஊக்கவைக்கும் வெப்பப் படுத்தும் அமைப்புகளைப் பயன்படுத்தி நைட்ரஜன் ஆக்சைடு தோன்றுதலைத் தவிர்க்கலாம். இருப் பினும் ஆக்சிஜனும் குறைவாக உள்ள மூடிய இடங் கள் அபாயத்தைத் தோற்றுவிக்கும். அமைப்பு மின்சாரத்தைக் காட்டிலும் ஹைடிரஜனை வெப்ப மூலமாகப் பயன்படுத்துவதில் நன்மை யாதெனில் இதனைப் பிற்காலப் பயன்பாட்டிற்குத் தேக்கலாம். ஆனால் மின்சாரத்தை ஆக்கும்போதே பயன்படுத்திட வேண்டும். ஹைடிரஜனையும் இயற்கை வளிமத்தைப் போன்றே நீர்மமாகச் செய்து. தேக்கி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லலாம். அல்லது நிலத்தடி அமைப்பு களில் அழுத்தப்பட்ட வளிமமாகத் தேக்கலாம். மக னீசியம் ஹைடிரடைப் போன்று உலோக ஹைடிரை டாக ஹைடிரஜனைத் தேக்கலாம், அல்லது லேந்தனம், நியோபியம் போன்ற அரிய மண் உலோகத்துடனும் நிக்கலுடனும் சேர்ந்த ஹைட்ரைடாகச் சேமிக்க லாம். இவ்வகையான சேமிப்பில் அதன் திறமை யைக் குறைப்பதற்கான கூறுகளாவன, உலோகத் தினால் ஹைடிரஜனை உட்கவரும்போது வெப்பம் வெளியிடப்படுகின்றது. எனவே இதற்காக அதைக் குளிரச்செய்வது தேவைப்படுகின்றது, மேலும் ஹைடிரஜனை மீளவும் வெப்பம் தேவையாகின்றது. வெளிப்படுத்துவதற்கு அட்டவணை 2 இல் மதிப்பிடப்பட்ட எடை களும் கொள்ளளவுகளும் அதே அளவு ஆற்றலைக் கொண்ட கேசோலினைச் சார்ந்து தொகுக்கப் பட்டவை. சார்பு எடை கொள்கலனின் எடையை யும் உள்ளடக்கியது. இக் குறிப்பிலிருந்து அறிவது யாதெனில் மகனீசியம் ஹைட்ரைடு, 4.6 அளவில் எடை மேம்பாடு குறைந்தது. அதனால் வழக்கமான தானியங்கி ஊர்தியில் பயன்படுத்தும் கேசொலின் கொள்கலனுடன் ஒப்பிடும்போது அதைப்போல நான்கு மடங்குள்ள கொள்கலன் தேவையாகின்றது என்பது. இதற்குச் சமமாக, வழக்கமான ஊர்தியி லுள்ள 20 காலன் கேசொலின் தொட்டியைக் காட்டி லும் 450 பவுண்டுகள் கூடுதலான ஊர்தி எடையும் மேலும் 60 காலன்களுக்கும் அதிகமான (2 2 2 அடி தேக்கம் கொள்ளும் அளவும் தேவைப்படுகின்றன. தற்போது கிடைக்கும் 306 காலன் வரை தாங்கக் கூடிய திறமை படைத்த கொள்கலன்களைப் பயன் படுத்துவதால் நீர்மத் தேக்கக் கொள்கலம் மோதுதலி னால் ஏற்படும் வெடித்தலினின்று காக்கப்படுகிறது. ஆற்றல் சார்ந்த ஹைடிரஜன் பயன்பாடுகள். பிற்கால ஆற்றல் தொழில் நுட்பத்தில் ஹைடிரஜனுடன் நிகழக் கூடிய செயல்முறையினை இரண்டு பெரிய வகைகளாகப் பிரிக்கலாம். அவை, மற்ற வகை ஆற்றல் வடிவத்தில் மாற்றாமல் ஹைடிரஜனை நேரடியாக எரிபொருளாக்குதல் அதாவது வெப்பம் ஆற்றல், ஒளி ஆகியவற்றின் மூலமாகப் பயன்படுத்து தல், மறைமுகமாக மொத்த ஆற்றல் அமைப்பில் ஹைடிரஜன் முதன்மைக் கூறாகச் செயல்படுதல். அவ் வாற்றலை இறுதிப் பயன்பாட்டிற்கு முன்னர் மாற்றம் செய்து ஹைடிரஜன் வேதியியல் முறையில் உள் ளடக்கி செயற்கை எரிபொருளாகவோ மாற்று இயற்கை வளிமமாகவோ இறுதியாகப் பயன்படத் தக்க மின் திறனாகவோ மாற்றம் செய்யப்படுதல். என்பனவாகும். ஹைடிரஜனுக்கு எடுத்துக் கூறப் பட்ட மறைமுகமான அல்லது இரண்டாம் பெரும் பங்குயாதெனில் ஆற்றலை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் போக்குவரத்து செய்ய இயன்றதாய் அமையும் இயல்பாகும். மற்ற எல்லா வகையான ஆற்றல்களையும் ஒரு செயற்பாட்டின் கீழ் ஹைடி ரஜனாக ஆக்கிப் பின்னர் அதைக் குழாய்வழியாகச் செலுத்தித் தொலைவில் உள்ள இடங்களில் தேக்கி வைத்து அதனை மறுபடியும் மாற்றி மின் திறனாக வும் செய்யலாம். இயக்கத்துக்கான ஆற்றல் மூலமாகப் ஹைடிரஜனைப் பயன்படுத்துதல். திறன் ஊர்திகளில் எளிமையாகக் கையாளுதற்கும் டம் விட்டு இடம் கொண்டு செல்வதற்கும் ஹைடிரோக் கார்பன் எரிபொருள் களில் குறிப்பிடத்தக்கவையாகக் கேசொலினும் மண்ணெண்ணையும் அவற்றிற்கான குறைந்த செலவுகளைக் கருதாமல் இருப்பினும் வசதியாக க அமைந்துள்ளன. அவ்வாறே ஹைடிரஜன் சரியான விலையில் கிடைக்க வழியுள்ளது. மற்றொரு பெரும்