ஆற்றல், ஹைடிரஜன் எரிபொருள் 609
மின் ஆக்கும் நிலையங்களிலிருந்து (generating stations ) சுமை மைய (load centres) இடங்களுக்கு மின்சாரத்தைச் செலுத்துவற்கான உயர் வோல்ட் அழுத்தம கொண்ட காப்பிடப்பட்ட மின்கம்பி வடங்களின் தேவையால் செலவு மிகும். தலைக்கு மேல் செல்லக்கூடிய மின் கம்பிகள் அமைப்பதற் கான செலவைக் காட்டிலும் பெரிய அளவுகளிலான மின்சாரத்தைக் காப்பிடப்பட்ட நிலத்தடி மின்கம்பி வடங்களில் செலுத்துவதற்கு ஆகும் செலவு 9 முதல் 20 மடங்கு வரை அதிகம் ஆகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. தாழ்வெப்ப நிலைக்கான மிகைக்கடத் தும் தன்மை வாய்ந்த காப்பிடப்பட்ட மின்கம்பி வடங்களைப் (cryogenic superconducting cable) பயன்படுத்துவதால் நிலத்தடியில் அவற்றைப் புதைப் பதற்கான செலவினைப் (under ground costs) பெரி தும் குறைத்துவிடலாம். ஆனால் இதுபற்றி மேலும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. குழாய்வழியாகப் பேரளவு எரிபொருளைக் கடத்த வேண்டியுள்ளதால் புதையுண்ட குழாய் வழிக்கான கட்டுமானம், பராமரிப்பு, இயங்கிடும் செலவுகள், கடத்தப்படும் திறன் விலை இவற்றை நோக்கும்போது, மிகவும் குறைவாகவே உள்ளன. 1970 நடுவில் நிலவிய விலை ஏற்றத்திற்கு முன் னர் இருந்த நீர்ம, வளிம எரிபொருள்களின் (liquid and gaseous fuels) குறைந்த விலையில் கூடக் குழாய் வழியாகச் செலுத்தும் முறை (pipe line operations) இலாபகரமாக இருந்தது. குழாய் வழித் தொழில் நுட்பம் (pipe line technology) நன்கு நிலை நிறுத்தப் பட்டதாகும். அமெரிக்க ஒன்றிய நாட்டில் பல நூறு ஆயிரம் கி.மீ. நடுமையக் குழாய்கள்(trunk lines)நிறு வப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக் குழாய் வழிகள் 23 பத்தாயிரம் கோடி (டிரில்லியன்) பரு மீ. வளிமத்தினைக் கொண்டு செல்கின்றன. குழாய் வழிகள் 120 செ.மீ. விட்டத்தைக் கொண் டும் 900 முதல் 1600 கி. மீ. வரை நீளத்தைக் கொண் டும் அமைக்கப்பட்டுள்ளன. குழாய் அழுத்தங்கள் 40 முதல் 55 ksem கொண்டுள்ளன. இவ்வழுத்தம் 65 kscm வரையளவில் கூட செல்லும்.ஓர் எடுத்துக் காட்டாக 90 செ.மீ. விட்டமுள்ள குழாய் வழியில் ஒரு மணிக்கு 37500 மில்லியன் பி. வெ. அலகுக்குச் சமமான வளிம் எரிபொருள் (gaseous fuel) செல் கிறது என்பதைக் காணலாம். இதற்குச் சமமான மின்திறன் 11,000 மெகாவாட்டுகளாகும். இது ஒற்றைச் சுற்றுவழியில் (single circuit) தலைக்கு மேலுள்ள மின்திறனைச் செலுத்தும் 500 கிலோ வோல்ட் மேனிலைமின்தொழில் (over head transmiss- ion line) செல்லும் மின்திறன் போன்று 10 மடங்கு பெரியதாகும். தூய ஹைடிரஜனைக் குழாய் வழியில் செலுத் தும் முறையில் கிடைக்கும் அளவு கணிசமாக இல்லாதபோதிலும் மின்செலுத்தச் செலவுடன் அ.க. 3-39 ஆற்றல், ஹைடிரஜன் எரிபொருள் 609 (electric transmission costs) ஒப்பிடும்போது மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ஹைடிரஜனுக்கான குழாய் வழிச் செலுத்தும் செலவுகள் இயற்கை வளி மத்தைக் காட்டிலும் 30% முதல் 50% வரை கூடு தலாகும் என்பது ஓர் ஆய்வால் தெரிய வருகிறது. இப்போதுள்ள இயற்கை வளிமத்துக்கான குழாய் வழியினை ஹைடிரஜனுக்காக மாற்றும் அமுக்கியின் கொள்ளளவுக் கூறினை (capacity) 3.8 இற்கு உயர்த்த வேண்டி உள்ளது. மேலும் இவ்வமுக்கியின் குதிரைத் திறன் (horse power) கொள்ளளவை 5,5 ஆக உயர்த்த வேண்டியுள்ளது. ஹைடிரஜனைச் செலுத்தும் செலவுகள் மொத்த அமைப்புச் செலவில் ஒரு பகுதியே ஆகும். முதலாவ தாக ஏற்படும் ஹைடிரஜன் ஆக்கத்திற்கான செலவு களும் ஹைடிரஜனை மின்சாரமாக மாற்றும் செய்வு களும், மிகவும் உயர்ந்த அளவில் அமையும்போது ஹைடிரஜன் திறனைக் குழாய் வழியாகச் செலுத்து வதனால் உண்டாகும் செலவு மிச்சத்தை, ஆய்வள வில் மட்டும் அறிவது போதுமானதாகும். ஹைடிரஜன் மூலங்கள். பல ஆண்டுகளாக இயற்கை வளிமம் ஹைடிரஜனின் மூலமாக இருந்தது. வேதியியல் தேவைகளை மட்டும் கருத்தில் கொண்டு பொருளாதாரக் கூறுகள் சாதகமாய் அமைய வேண்டுமாயின் இயற்கை வளிமம் நம் தேவையை நன்கு நிறைவு செய்யும். மொத்த ஆற்றல் தேக் conservation) கத்தைக் (total energy கருத்தில் கொண்டு புதைபடிவு எரிபொருள் மூலங்களைத் (fossil fuel sources ) தேக்குதற்குரிய வழியாக ஹைடி ரஜனைக் கருதினால், செலவு குறைந்த, ஹைடிரஜன் அடங்கிய மூலப்பொருளாக உதவுவது நீர் ஒன்று தான். ஹைடிரோக் கார்பன்கள் இயற்கையாகக் கிடைக்காத இடங்களில் நீரினை மின்னாற்பகுப்புச் செய்யும் பெரிய அமைப்புகளை நிறுவலாம், குறைந்த மின் ஆக்கச் செலவுள்ள இடங்களில் அவற்றை அமைக்க வேண்டும். நீரினை மின்னாற்பகுப்புச் செய்யும் முறையுடன் ஹைடிரஜனை வெப்ப வேதியியல் முறையில் நீரி லிருந்தும் பிரிப்பதும் (thermo chemical splitting) முதன்மையாகக் கருதப்படுகிறது. சிலவகையான அணுக்கரு உலைகளிலிருந்து (nucleara rectiors) வீணாகச் செல்லும் வெப்பமும் அதன் உயர் வெப்ப நிலையும் வேதிவினைகள் புரிந்து (chemical reactions ) நீரிலிருந்து ஹைடிரஜனையும் ஆக்சிஜனையும் பிரித்து விடுவிக்கும் ஆய்வுகள் இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளன. பிணைப்பு உலையிலுள்ள (fusion reactor) பிளாஸ்மாவிலிருந்து கிடைக்கும் கீழ்ப்புற ஊதாக் கதிர்வீச்சினைப் (ultra violet radiation) பயன்படுத்தி நீராவியினை நேரடியான ஒளிப்பகுப்பு முறையில் (direct photolysis) பிரிப் பதும், மேலும் சிலவகை ஆல்காக்களைப் (algas)