உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றுச்சங்கலை 615

தாயத்தின் ஆற்றல் தேவையை நிறைவு செய்ய இப் புதிய ஆற்றல் மூலங்கள் பெருந்துணை புரிகின்றன. நூலோதி வி.சீனிவாசன் 1. F. Bueche, Understanding the World of Physics, McGraw-Hill International Book Company, New York, 1981. ஆற்றுச் சங்கலை இது இருவித்திலைப் பிரிவிலுள்ள அல்லி இணையா ஃபிளக்கோர்த்தியேசி (flacourtiaceae) குடும்பத் திலுள்ளது. முன்பு பிக்சேசி (bixaceae) குடும் பத்தில் வைக்கப்பட்டது. இதற்குத் தாவரவியலில் ஹிட்னோகார்ப்புஸ் ஆல்ப்பீனா (hydnocarpus alpina Wt.) என்று பெயர். இதை உதகமண்டலப் பகுதியில் மரத்தட்டி (maratatte) என்று கூறுவர். இது மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் 2,000 மீ. உயரம் வரையிலும், உதகமண்டல மலைகளில் ஈரமுள்ள பள்ளத்தாக்குகளிலும், இலங்கையிலும் காணப்படு கின்றது. ஆற்றுச்சங்கலை 615 சிறப்புப்பண்புகள். இது 25முதல்35 மீ. வரை உயரத் தையும், ஏறக்குறைய 6 மீ. குறுக்களவையும் பெற்று வளரக் கூடிய ஒருபாலின மரமாகும். இலைகள் மாற் றிலை அமைவு கொண்டவை, சரிந்த நீள்சதுரமானவை அல்லது ஈட்டிவடிவானவை; வெவ்வேறு வடிவம் கொண்டலை; இளந்தளிர்கள் சிவப்பு நிறத்தையும், முதிர்ந்த இலைகள் அடர்த்தியான பசுமை நிறத்தை யும் பெற்றிருக்கும். இலைகள் கேசங்களற்றவை; 10-17.5 × 3.5-6 செ.மீ, அளவுடையவை. பூக்கள் குறைந்த அளவில் கதிர்வகை (raceme) மஞ்சரியில் இலைக்கோணங்களில் அமைந்திருக்கும்; பூக்காம்பும். (pedicel), மஞ்சரிக்காம்பும் (peduncle) உண்டு; மஞ்சரிக் காம்பு தடிப்பாக இருக்கும்; பூக்காம்புகள் 2.5 முதல் 3.5 செ.மீ. வரை நீளமிருக்கும். பூக்கள் ஏறக் குறைய 2.5 செ.மீ. அகலமுடையவை. புல்லி இதழ் கள் 5. சமமானவை; ஒழுங்கற்ற திருகுமுறையில் அமைந்தவை. அல்லி இதழ்கள் 5, பசுமையானவை; கேசங்களுடையவை; ஒவ்வொன்றும் நீள்சதுர ஈட்டி போன்றும், அதன் எதிர்ப்புறத்தில் ஒத்தநீளத்தை யுடைய சிதலையும் பெற்றிருக்கும். ஆண்பூக்களில் மகரந்தத்தாள்கள் 5 முதல் 8 வரை இருக்கும்; அவை அல்லி இதழ்களைவிடக் குட்டையானவை; மகரந் தப்பை சிறுநீரக வடிவத்தில் (reniform) இருக்கும். 1. சூலகத்தின் நீள்வெட்டுத் தோற்றம் 2. சூல் 7.மிலார் 8. பெண் பூ 9. மலட்டு மகரந்தத்தாள் 10. 3. 12 10 9. ஆற்றுச்சங்கலை சூல்கமுடி 4. மகரந்தத்தாள் 5. முழுக்கனி 6. நிலைத்த புல்லி வட்டம் பிளவுற்ற குலம் முடி கனியின் குறுக்குவெட்டுத் தோற்றம் 12 விதை 11.