ஆற்றுப் பொறியியல் 623
வாதம் (goat), மூட்டுவாதம் (rheumatism) ஆகிய வற்றிற்குப் பற்றாகப் (poultic) போடப்படுகின்றது. மிலார்களிலிருந்து எடுக்கப்பட்ட சாறு பசியின்மை, வீக்கம் ஆகியவற்றைப் போக்குவதற்கு மருந்தாகின் றது. இக்கனியின் இனிப்பான சதைப்பற்றுள்ள பகுதி உண்ணப்படுகின்றது. நூலோதி எ. கோ. 1. Gamble, J. S., FI. Press Madras. Adlard & Son Ltd., London, 1925. 2. The Wealth of India, CSIR Publication, New Delhi, 1984. ஆற்றுப் பொறியியல் ஆறுகள், கால்வாய்கள் ஆகியவற்றின் நீரோட்டச் சிறப்பியல்புகளை ஆராயவும், மனிதன் தன் நலங் களுக்காகவும், தனக்குத் தீமை தாராமல் காக்கும் பொருட்டும் தேவைப்பட்ட போது தேவையான டங்களில் ஆறு கால்வாய்களைச் சீரமைக்கவும் அவற்றின் போக்கினை மாற்றியமைக்கவும் அவற்றில் நீரைத் தேக்கவும் தேவைப்படும் திட்டங்களை வடிவ மைத்துச் செயலாக்கவும் உதவும் இன்றியமையாத பொறியியல் ஆற்றுப்பொறியியல் ஆகும். இது உள் நாட்டு நீர்ப் போக்குவரத்துப் பொறியியலின் ஒரு பிரிவாகும். இயற்கை நீரின் வேகத்தை எதிர்த்துப் போராட வேண்டியிருப்பதால் இப்பொறிபியல் துறை வடிவமைப்பின்போதும் செயல்படுத்தும் போதும் மிக்க கவனத்துடன் செயலாற்ற வேண்டிய துறையாகும். இந்திய நாட்டில் பல நீர் வற்றா ஆறுகளும் வெள்ளக் காலங்களில் மட்டும் பெருவெள்ளம் கொண்டு வந்து மற்ற காலங்களில் வறண்டிருக்கும் காட்டாறுகளும், அகன்ற, குறுகிய ஆறுகளும் தரை மட்டத்திற்கு மேலே பல மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் செலுத்தும் முரட்டு ஆறுகளும் அமைதி யாகத் தரைமட்ட அளவிலேயே நீர் ஓடும் ஆறுகளும் பல கிளைகளாகக் கூடல் முகத்தில் பிரிந்து ஏராள மான சிக்கல்களை உருவாக்கும் ஆறுகளும் பெரு படுகைகளும் உள்ளன. மளவு உற்பத் ஆறு வீழ்ச்சி எனவும், தியாகும் இடத்தருகே ஓடை, சமவெளிக்கு வருங்கால் பெருகும் (aggrading) வகை, தவழும் (degrading) வகை, நிலைப்பு (stable) வகை எனவும் கடலோடு கூடுமுகத்தருகே வருங்கால் ஒத வகை (tidal), கழிமுகம் (delta) எனவும் ஆற்றில் பாயும் நீரின் அளவைப் பொறுத்து பெரு வீச்சு வகை (flashy), கன்னி வகை (virgin) எனவும் பலவித மாகப் பாகுபடுததி வழங்கப்படுகிறது. மேலும் ஆற் பல பகுதிகள் மனித றிற்கென்றே விடப்பட்ட வாழ்க்கைக்காகக் கைப்பற்றிக் கொள்ளப்படுவதாவ் ஆற்றுப் பொறியியல் 623 ஆறுகளைத் தொடர்ந்து அடக்கி ஓடச் செய்வது ஓர் இன்றியமையாத பணியாகும். ஆறுகளில் நிகழ்த்தப்படும் பொறியியல் வேலை கள் பல நோக்கங்களுக்காகச் செயல்படுத்தப்படுகின் றன. போக்குவரத்து, போக்கு வரத்து விரிவாக் கம், மின் ஆக்கம், நீர்ப்பாசனம், வடிகால் பெறல் ஆற்றுநீரின் தீமைகளைக்குறைத்தல் ஆகிய பல நோக் கங்களுக்காக நிறைவேற்றப்படும் ஆற்றுப் பள்ளத் தாக்குத் திட்டங்கள் பல். காண்க, பலநோக்கத் திட்டங்கள். ஓர் ஆற்றில் இத்தகைய வேலையொன்றைத் தொடங்கும் திட்டத்தை முடிவு செய்வதற்கு முன்னர் அதன் ஓட்டத்தையும், போக்கையும், அவற்றின் பெரும, சிறுமப் பாய்வு அளவுகளையும், நெடுநாட் கள் தொடர்ந்து ஆராய வேண்டும். இவற்றைச் செய்த பின்னரே திட்டத்தை நடைமுறையில் நிறை வேற்ற முடியுமா என்பதையும் அவ்வாறு நிறை வேற்றினால் விளையத்தக்க பயன்களையும் முடிவு செய்ய இயலும். வடிகால் அமைப்பு, நீர்ப்பாசனம், நீர்த்தேக்கல், வெள்ளக் கட்டுப்பாடு முதலிய திட்டங் களுக்கு ஆற்று வடிநிலத்தின் மழையின் அளவையும், அது கடத்தும் படிவுகளின் அளவையும் தன்மையை யும் அறிதல் இன்றியமையாதது. இத்தகைய ஆராய்ச் சிகளையும் அளவுகளையும் செய்த பின்னரே ஆற்றில் வேலையைத் தொடங்கமுடியும். ஆற்றின் சிறப்பியல்புகள். கால்வாயின் முக்கிய அளவு ஓரளவு நிலையானதாகவும் படுகை சரிவற்ற தாகவும் அமையவேண்டும். அதாவது, படுகை உயரா மலும் தாழாமலும் அமைந்தால் அத்தகைய கால் வாயில் ஓடும் ஓடை ஒழுங்கோடை எனப்படும் (regimen). இதன் கால்வாய் ஒரே இருப்பில் என்றும் அமைய வேண்டிய தேவையில்லை. ஒழுங்கோடை யின் நீரோட்டப் பாதை இடம் மாறிக்கொண்டே இருக்கும். அதன் ஒரு புறத்தில் கரை அரித்தால் அதே அளவுக்கு மறுபுறத்தில் தரையை உருவாக்கும். காண்க, ஆறுகள், வண்டல் அரிப்பு நில வடிவங் கள். இயற்கையில் நிலவும் பெரும்பாலான ஓடைகள் ஒழுங்கோடைகளேயாகும். கரைகளை எளிதாக அரிக்க முடிந்தால் அத்தகைய ஓடைகள் அகலமான வையாகவும் அரிப்பிற்குக் கரைகள் எதிர்ப்புத் தந்தால் அத்தகைய ஓடைகள் ஆழமானவையாகவும் அமையும். பாய்தல், கரையையும் படுகையையும் அரித்தல், படிவுகளைச் சுமந்துச் செல்லல் ஆகிய பல் வேறு கூறுகளுக்கிடையே உள்ள ஆற்றல் பங்கீடு சமநிலை உடையதாகவே அமைவதால் ஓடைகள் ஒழுங்கோடையாக அமைகின்றன. இத்தகைய ஓடைகளின் கால்வாய்கள் நேரானவை யாகவோ, வளைந்து, வளைந்து செல்பவையாகேவா. பின்னிய (braided) அமைப்புடையனவாகவோ