உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறறுப பொறியியல்‌ 625

ஆற்றுப் பொறியியல் 625 திறந்தும் அடித்தரையில் படிந்துள்ள வண்டலை நீரோட்டம் அடித்துச்செல்லுமாறு செய்யலாம். நீர்ப் பாசனக் கால்வாய்களில் படியும் வண்டலை அகற்ற அதன் ஒரு கரையில் வாய்க்காலை வெட்டி, அதன் வழியே நீர் விரைவாக வெளியேறுமாறு அமைத் தால், நீரோட்டத்தின் வேகத்தால் படிந்துள்ள வண்டல் அடித்துச் செல்லப்படும். வண்டலை நீக்குவது போலவே சில சமயங்களில் வண்டலைப் படியச் செய்வதும் தேவைப்படலாம். இவ்வாறு செய்வதால் நீர் தெளிவாகும். நீரோட்டம் ஒரு பெரிய ஏரி அல்லது குளத்திற்குள் வந்து விழு மாறு அமைத்தால், அதை அடைந்ததும் நீரின் வேகம் குறைகிறது. இதனால் நீரிலுள்ள வண்டல் அதிகம் படிந்துவிடும். அதன் மறுமுனையிலிருந்து நீர் வெளியேறுமாறு அமைத்தால், வெளியேறும் நீர் தெளிவாக இருக்கும். சரிவு அதிகமான நிலங் களில் விரைவாகப் படியும் வண்டலை அகற்ற அடித் தரையில் குழிகளைத் தோண்டி, அதில் வண்டல் படியுமாறு செய்யலாம். இக்குழிகளில் படியும் வண்டலை அடிக்கடி அகற்றி, அவை நிறைந்து தூர்ந்து விடாமற் கொள்ளலாம். பார்த்துக் வண்டல் படிய வேண்டிய இடங்களில் கலிங்குகளை (weirs) அமைத்து, நீரைத் தடைசெய்து, அங்கு வண்டல் படியுமாறு செய்யலாம். பாசனக் கால்வாய் களில் நீரின் வண்டலை அகற்ற, ஆங்காங்கு இத் தகைய வண்டற்பொறிகள் (silt traps) அமைக்கப் படுகின்றன. கட்டுக்கரைகளின் இடையேயுள்ள கால் வாய்கள் போன்ற நீரோட்டங்களின் கரைகளைப் பின்னால் தள்ளி அமைப்பதாலும் நீரிலுள்ள வண்டல் கரைகளில் படியும். ஓரிடம் ஆற்றடி நீரோட்டத்தினால் தேய்வடை யாமல் தடுக்க, அதன் அடியில் மரக்கட்டைகளையும் சிறு சுவர்களையும் போன்ற தடைகளை அமைக்க வேண்டும். கல், செங்கல், கற்காரை ஆகிய பொருள் களால் ஆற்றடியைப் பாவி, அதன் தேய்வைத் தடுப் பதும் உண்டு. முதன்மைக் கால்வாயிலிருந்து அதன் கிளைகளுக்குத் தண்ணீர் பாயும்போது. கிளைகளின் மேற்புறத்தில் வண்டல் படிந்து தொல்லை கொடுப் பதைத் தடுக்க, அவ்விடத்தில் ஒரு தடையை அமைத் துக் கால்வாயின் பரப்பிலிருந்து மட்டும் கிளையில் நீர் பாயுமாறு அமைக்கலாம். இத்தடையின் உயரத் தைக் கால்வாயின் நீர்மத்திற்கேற்றவாறு சரிப்படுத் தலாம். இம்முறை இந்தியாவின் பாசன அமைப்புக் களில் பயன்படுகிறது. ஆற்றின் கரை அரிபடாமற் பாதுகாப்பதும் மிகவும் அவசியமாகும். கரைகளை உறுதியான பொருள்களால் பாவியோ சமத்தொலைவுகளில் நீரோட்டத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் கிளை மேடு களை (spurs) அமைத்தோ இதைச் செய்யலாம். புல் பூண்டுகளைக் கரைகளில் நட்டு வளர்த்தும் கரை அ.க 3-40 டு கி படம் 2. அரிக்காதபடி ஆற்றின் கரையைப் பாது காக்கும் முறை தேயாது பாதுகாக்கலாம். சிறு மரக் கட்டைகளை த்தகைய மேடுகளாக அமைத்துப் பஞ்சாபிலுள்ள ஆறுகளில் கரைகளைப் பாதுகாத்து வந்தார்கள். நீண்ட கிளைகளைக் கொண்டும், கோரைப் புல்லி னால் ஆன பாய்களை அமைத்தும், ஆற்றின் மேற் புறத்தில் பல கழிகளை வரிசையாக ஊன்றியும் கரை களைப் பாதுகாக்கலாம். கழிகளை அடுக்கிக் கோரைப் பாய்களை அவற்றின்மேல் விரித்துக் கட்டி, இவற்றின் நடுவே உள்ள இடைவெளியில் வண்டல் படியு மாறு செய்து அவற்றைப் பாதுகாப்பதுமுண்டு. ள நீரோட்டத்தைக் கட்டுப்படுத்தல். ஆற்றின் நீரோட் டப்போக்கைக் கட்டுப்படுத்தப் பலவகையான முறை களைக் கையாளலாம். இவற்றுள் அதில் வெட்டப் படும் குறுக்கு வழிகள் முக்கியமானவை. இத்தகைய குறுக்குவழியை அமைத்து நீரோட்டத்தின் பழைய பாதையை அடைத்துவிட்டால் அதன் அடித்தரையில் மாறுதல்கள் நிகழும். குறுக்கு வழிக்கு மேலுள்ள இடத்தில் ஆற்றடியில் தேய்வு நேரும். அதன் கீழே வண்டல் படியும். இதனால் நீரோட்டத்தின் சரிவு மாறும்.இம்மாறுதல்களால் நீரோட்டத்தின் தன்மை மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடித்தரை உறுதியற்றதாயின் புதுவழியை அமைக்கக் குறுக லான பாதையொன்றை அமைத்து விட்டாலே போது மானது. ஆற்றடியில் நிகழும் தேய்வினால் அதன் பாதை தானாக அகன்று பெரிதாகும். இத்தகைய வழிகளை அமைக்கும் போது முன்னர்க் கூறிய கிளைமேடுகளைத் தக்க இடங்களில் அமைத்து, நீரோட்டம் தேவையான பாதையை விட்டு விலகாமற் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது ஆற்றின் பழைய பாதையின் மேல்முனையை மூடிக் கீழ்ப்புறத் திலிருந்து நீர் அதில் பாய்ந்து, வண்டலைப் படிவித்து அதைத் தூற்றிவிடுமாறு செய்யலாம். ரவி நதியின் நீரோட்டப் போக்கை இவ்வாறு குறுக்கு வழிகளா லும், கிளை மேடுகளாலும் மாற்றியமைத்தார்கள். கிளை பாயும் ஆற்றின் குறுக்கே அணை கட்டும்போது அதன் இரு கரைகளிலும் கட்டிடம் கட்டத் தொடங்கி, அந்த இரு பகுதிகளையும் கட்டிக்கொண் டே வந்து, இடைவெளியைச் சிறிதாக்கிக் கடைசியாக