உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636 ஆறுகள்‌

636 ஆறுகள் எவ்விடத்தினின்று கிளையாறுகள் (distributories) பிரியத் தொடங்குகின்றனவோ அல்விடமே கழிமுகத் தின் தலைப்புறம். ஆற்றின் பாதை வண்டலால் அடைக்கப்படுவதால் ஆறு கரைகளை உடைத்துக் கொண்டு பல கிளைகளாகப் பிரிந்து பாயும். கழி முகப் பகுதியில் பல ஆற்று வளைவுகளால் பின்ன லைப் போன்று ஆறுகள் பின்னப்பட்டுப் பாய்வது இயற்கையான காட்சியாகும். இந்நிலையில் வேகம் குறைவதால் சில ஆறுகள் தலைமை ஆறுகளினின்று துண்டிக்கப்படலாம். இவ்வாறு துண்டிக்கப்பட்ட ஆற்றின் பகுதிகள் ஏரிகளாகவும், சதுப்பு நிலங்களாக வும், அடர் சேற்று நிலங்களாகவும் (swamps) மாற லாம். ஆற்றின் இந்த இறுதி நிலையில் காணப்படும் மற்ற நிலத் தோற்றங்களைப் பின் கூறப்படும் விளக் கங்களால் தெளிவுபடுத்தாலம். கடற்கரையில் ஆற் றுப்படிவுகள் சில இடங்களில் மணல் தடைகளாகக் (sand bars) காணப்படும். இவை நிலப்புறத்தில் ஏரிகள், காயல்கள் (lagoons) உருவில் உள்ள நீர்த்தேக்கங் களைப் போன்றவை. மேலே கூறிய கழிமுகத்தின் மேற்புற விரிவு பலகாரணங்களால் சிதைவடைந்து மேலும் விரிவடையலாம். கடலில் அமைந்த கழிமுகங் களில் அலைகளாலும், நீரோட்டங்களாலும் மாற்றம் உண்டாகும். எடுத்துக்காட்டாக, வட அமெரிக்கா வின் தென்பகுதியிலுள்ள மிசிசிபி ஆற்றுக் கழிமுகம் பறவைக்கால் (birds foot delta) போன்ற அமைப்பைக் கொண்டது. சில ஆறுகள் கடலில் சேருமிடத்தில் கழிமுகம் தோன்றுவதில்லை. அவற்றின் போக்கு, படிதலின்றி ஆழமாய் அமைந்துள்ளது. கடல் மட்டத்தின் கீழ். ஆழத்தில் படிவு உண்டாகிறது. ஆற்றில் சுமையளவு குறைவாக இருக்கும்போது திறன்மிக்க கடலின் ஓத நீரோட்டம் (tidal current) ஆற்றுக் கழிமுகத்தை வண்டலின்றி அமைக்கும். ஆழமான பல நீரோட்ட வழிகளுடனிருக்கும் இவை, ஓதம் பொங்கு கழிமுகம் (estuaries) எனப்படும். இதனால் ஆற்றுப் பாதை களின் வழியாகக் கப்பல் உள் நாட்டிற்குச் செல்ல முடியும். எனவேதான் இதன் கரையோரங்களில் துறை முகங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வட அமெரிக்காவிலுள்ள மிசிசிபியின் துறைமுகங்கள், செயிண்ட் லாரன்சு ஆற்றின் கரையோரத் துறை முகங்கள், இந்தியாவில் கங்கை ஆற்றுக் கழிமுகத் திலமைந்த கல்கத்தா துறைமுகம், நைல் பேராற்றின் கழிமுகத்திலமைந்த அலெக்சாந்திரியா துறைமுகம் ஆகியவற்றைக் கூறலாம். நில இயல் அறிஞர்களும் மற்ற அறிஞர்களும் ஆறுகளின் நீளத்தையும், ஆறுகள் வளப்படுத்தும் பரப்புகளையும் கருத்திற்கொண்டு உலக முக்கிய ஆறுகள் இவையென வரையறுத்தனர். உலகி லேயே மிக நீளமான ஆறுகள் என்ற வரிசையில் நிலக்கோளத்தில் கிழக்கு அரைப்பகுதியிலும் மேற்கு அரைப் பகுதியிலும் உள்ள ஆறுகளைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம். மேற்கூறிய இடங்களில் காணப்படும் ஆறுகளில் மிக நீளமான பேராறு நைல் ஆறே ஆகும். இரண்டா (அலெக்சாந்திரியா கெய்ரோ படம் 8. நைல் ஆற்றுக் கழிமுகம் துறைமுகம் சையது சூயஸ் கால்வாய்