உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 ஆறுகள்‌

ராக்கியலைத் தொடர் 638ஆறுகள் வதாக இடம் பெறுவது தென் அமெரிக்காவில் பாயும் அமேசான் ஆறு ஆகும். உலக முக்கிய ஆற்றுச் சமவெளிகள் ஆறுகள் பாய்ந்து வளப்படுத்தும் நிலப்பரப்புகள் ஆற்றுச் சமவெளிகள் எனப்படும். உலகில் ஒரே சமயத்தில் தோன்றிய நாகரிகங்களெல்லாம் ஆற்றுச் சமவெளிகளில்தான் முதன் முதல் தோன்றின. எடுத் துக்காட்டாகச் சிந்து சமவெளி நாகரிகம், டைகிரீசு யூப்ரடீசு ஆற்றுச் சமவெளி நாகரிகம் என்பன (அது மெசப்டோமியா என்றழைக்கப்பட்டது). ஆற்றுச் சமவெளிகள், அவை பாயும் நாடுகளின் பொருளா தார முன்னேற்றத்தில் இன்றியமையாத பங்கு பெற் றுள்ளன. வட அமெரிக்காவிலுள்ள மிசிசிப்பி, மிசௌரி ஆற்றுச் சமவெளிகள், தென் அமெரிக் காலிலுள்ள அமேசான் ஆற்றுச் சமவெளி, இங்கி லாந்தில் தேம்ஸ் ஆற்றுச் சமவெளி, ஆப்பிரிக்காவில் நைல் ஆற்றுச் சமவெளி, ஐரோப்பாவின் ரோம் ஆற்றுச் சமவெளி, ஒல்கா, செவர்ன் டான்யூப் ஆற்றுச் சமவெளிகள், ஆசியாவின் சிந்து, கங்கை பிரம்மபுத்திரா ஆற்றுச் சமவெளிகள், பர்மாவின் ஐராவதி ஆற்றுச் சமவெளிகள், சீனாவில் யாங்சி, உவாங்கோ ஆற்றுச் சமவெளிகள், ஆஸ்திரேலி யாவில் மாரே-டார்லிங் ஆற்றுச் சமவெளி ஆகிய அமெரிக்கா யாவும் உலகில் மிக முக்கியமான பெரிய வளங் கொழிக்கும் ஆற்றுச் சமவெளிகளாகும். மேற்கூறிய ஆற்றுச் சமவெளிகளில் முக்கியமான நகரங் கள் காணப்படுகின்றன. மிசௌரி மிசிசிபி ஆறுகள் 1,243,700 சதுர மைல் சமவெளிப் பரப்பை வளப் படுத்துகின்றன. அமேசான் ஆறு 2,722,000 சதுர மைல் பரப்பை வளப்படுத்துகின்றது. நைல் ஆறு 1,812,500 சதுர மைல்களை வளப்படுத்துகின்றது. சுங்கை, பிரம்மபுத்திரா ஆறுகள் 777,000 சதுர கிலோ மீட்டர் பரப்பை வளப்படுத்துகின்றன. மிசிசிபி-மிசௌரி ஆற்றுச் சமவெளி, வட அமெரிக் காவில் 90 விழுக்காடு நிலப்பரப்பை, இந்த ஆற்றுச் சமவெளி வளப்படுத்துகின்றது. இச்சமவெளி மேற்கே ராக்கி மலையடிவாரத்திலிருந்து கிழக்கே அப்பலேச் சியன் மலையடிவாரப் பகுதிவரை பரந்து விரிந்து காணப்படுகின்றது. மேலே உள்ள படத்திலுள்ளது போல் மிசிசிபி ஆறு சுப்பீரியர் ஏரிக்கு மேற்கே சில கிலோமீட்டர் தொலைவில் தொடங்கி வட அமெரிக் காவின் மையப் பகுதியில் ஓடி இறுதியில் மெக்சிகன் வளைகுடா கடலில் கலக்கிறது. இதன் மிகப் பெரிய துணை ஆறான மிசெளரி மேற்கே இராக்கி மலைத் தொடரில் பிறந்து மையச் சமவெளியில் பாய்ந்து மிசிசிபியுடன் செயின்ட் லூயிசு நகரில் சேர்ந்துவிடு கிறது. இச்சமவெளியின் வளங்கள் சொல்லிலடங்கா கனடா மிசௌரி படம் 9. மக்சிசுன் வளைகுடா செயின்ட் லுாயிஸ் நியூ ஆர்லியன்ஸ் மிசிசிபி - மிசௌரி ஆற்றுக் கழிமு கம் பெரிய ஏரிகள்] அப்பலேச்சியன் அடலாச் பெருங்கடன் செயின்ட் லாரன்ஸ் ஆறு மலைகள்