உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 ஆறுகள்‌

640 ஆறுகள் வட அமெரிக்காவின் நடுச்சமவெளி {centreplain) முழுதும் மிசிசிபி, மிசௌரி ஆறுகளால் வளப்படுத் தப்படுகிறது. இவ்வாறுகளின் துணை ஆறுகள் அரக் கான் சாஸ், சிவப்பு ஆறு, ஓகியோ என்பன ஆகும். தலைமை ஆறு இறுதியில் மெக்சிகன் வளைகுடாக் கடலில் கலக்கிறது. சிறிய ஆறுகளான அட்சல், மோகாங்கு, டிலாவார், பொடாமக்கு என்பவை மேற்கிலிருந்து, கிழக்காக ஓடி அட்லாண்டிக் பெருங் கடலில் கலக்கிறது. தென் அமெரிக்க ஆறுகள் இங்கு ஐந்து முக்கிய ஆறுகள் ஓடுகின்றன. அவை ஓரினாகோ ஆறு, அமேசான் பேராறு, பரானா, பராகுவே ஆறுகள் காகாமக்ட்லீனா ஆறுகள் ஆகும். ஆப்பிரிக்காக் கண்ட ஆறுகள். ஆப்பிரிக்க ஆறு கள் உலக ஆறுகளை விடச் சற்று வேறுபட்டவை. ஏறக்குறைய எல்லா ஆறுகளுமே மேட்டு நிலப் பகுதியின்(platecu) மேலே பாய்கின்றன. எல்லா ஆறு சளிலும் கப்பல், படகுப் போக்குவரத்துக்கள் இயல் பாகத் தடங்கலின்றி நடைபெறுகின்றன. இவற்றில் முக்கிய ஆறு நைல்.இது நடுத்தரைக் கடலில் போய்ச் சேருகிறது. செனீகல், நைசர், காங்கோ, ஆரஞ்சு அறுகள் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலில் போய்ச் சேருகின்றன. லிம்போபோ, சாம்பசி ஆறு கள் இந்தியப் பெருங்கடலில் போய்ச்சேருகின்றன. இவற்றுள் காங்கோ ஆற்றுச் சமவெளி வளங் கொழிக்கும் மிக முக்கியமான சமவெளியாகும். மற் றும் சகாரா பாலைவனத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் எகிப்து, நைல் ஆற்றுச் சமவெளி யால் செழித்துப் பேரரசாக. விளங்கி வருகிறது. இந்த நைல் பேராற்றுச் சமவெளியின் கழிமுகத் துறைமுகம் பற்றிச் சற்று விரிவாகக் காணலாம். நைல் பேராற்றின் கழிமுகப் பகுதியின் அமைப்பு. இது வளைவுக் கழிமுகம் எனப்படும். பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை இந்தக் கழிமுகப் பகுதி வளப்படுத்துகிறது. இப்பேராறு எகிப்திற்கு இயற்கை தந்த அழிவிலாப் பரிசு ஆகும். நைல் பேராறு நிலக்கோட்டுப் பகுதியில் அயர் லாத்தைவிடப் பெரிய பரப்பளவைக் கொண்ட விக் டோரியா ஏரியில் தோன்றி வடக்கு நோக்கி ஓடி வருகிறது. இந்த ஏரியின் வடக்கே உகாண்டா நாடு உள்ளது. ஆண்டு முழுதும் வெப்ப மண்டல மழையை இந்த ஏரி பெறுவதால் நைல் ஆற்றில் வற்றாத நீரோட்டத்தைக் காண முடிகிறது. இப்பேராற்றின் குறுக்கே ஓவன் நீர்வீழ்ச்சி அணை, அசுவானிலேயில் இரண்டு அணைகள், நீல நைல் மீது ஒரு அணை எனப் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. வடக்கு நோக்கிச் சகாராப் பாலைவனத்தினூடே பாய்ந்து பெரிய கழிமுகத்தை அமைத்துக் கொண்டு இறுதி யில் நடுத்தரைக் கடலில் போய்ச் சேருகிறது. நைல் ஆற்றுடன் வெள்ளை நைல், நீல நைல், கறுப்பு நைல் ஆகிய துணை ஆறுகள் சேருகின்றன. நைல் ஆற்றுக் கழிமுகப் பகுதியின் தொடக்கத்தில் தான் எகிப்தின் தலைநகரமான கெய்ரோ நகரம் அமைந் துள்ளது. சோளம், கோதுமை, அரிசி பருத்தி, பழ வகைகள், காய்கறிகள் பெருமளவில் நைல் ஆற்றுக் கழிமுகப் பகுதியில் விளைகின்றன. தேவைக்குப் போக மீதியை எகிப்து அரசு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. இதற்கு நைல் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்த இயற்கைத் துறைமுகங் அலெக்சாந்திரியாவும், சைட்கும் முக்கிய பங்கு கொள்கின்றன. அலெக்சாந்திரியா தொன்று தொட்ட மிகப் பழைய துறைமுகமாகும். களான மான பிரிவு ஆஸ்திரேலியாக் கண்ட ஆறுகள். பெரிய மலைப்பகுதி (great dividing range) என்றழைக்கப் படும். ஆஸ்திரேலியாவின் கிழக்கே வடக்குத் தெற் காக அமைந்திருக்கும் மலைத் தொடரிலிருந்து பிறந்த மாரே - டார்லிங்கு ஆறுகள் தாம் இக்கண்டத்தின் முக்கிய ஆறுகளாகும். இவை மேற்காக ஓடிவந்து தெற்கே திரும்பி இறுதியில் தென் பசிபிக் பெருங் கடலில் கலக்கின்றன. இந்த இரு ஆறுகளும் மிகப் பெரிய ஆற்றுச் சமவெளியை உண்டாக்கி வளப் படுத்தியுள்ளன. பாசன வசதியையும் பெருக்கி யுள்ளன. இந்த ஆறுகள் கடலுடன் கலக்குமிடத்தில் தான் அடிலெய்டு என்ற துறைமுகப்பட்டினம் அமைந் துள்ளது. இந்திய ஆறுகள் இந்தியாவின் ஆறுகளை வட இந்திய, தென்னித் திய ஆறுகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். வட இந்திய ஆறுகளை வற்றாத ஆறுகள் (perennial stream| என்றும், தென்னிந்திய ஆறுகளைப் பருவ கால ஆறுகள் (ephemeral stream) என்றும் வழங்கு வர். வட இந்திய ஆறுகள். வட இந்தியாவின் பெரும் பாலான ஆறுகள் பனிமூடிய இமயமலைத் தொடரி லிருந்து தோன்றுவதால் வற்றாத நீரோட்டம் உள்ள ஆறுகளாக இருக்கின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத் திரா ஆகியவை முக்கியமான வட இந்திய ஆறுகளா கும். சிந்து. இந்த ஆறு 2900 கி.மீ. நீளமுள்ளது. இது இமய மலையிலுள்ள கைலாய மலையில் மான சரோவர் என்ற ஏரியில் உற்பத்தியாகிச் சிந்துமா நிலத்தின் வழியே பாய்ந்து அரபிக் கடலில் கலக் கிறது. இந்த ஆற்றின் முக்கியாமான துணையாறுகள் ஜீலம், சீனாப்பு, ராவி, பியாஸ், சட்லெட்ஜ் ஆகும். கங்கை இந்த ஆற்றின் நீளம் 2500 கிலோ மீட்டர் ஆகும். இது இமயமலைத் தொடரிலுள்ள ள கங்கோத்ரி என்னும் பனிக்குகையில் தோன்றி ஹரித்து வாரில் சமவெளியை அடைந்து வட இந்திய நடுச்சம நிலத்தின் வழியாகப் பாய்ந்து, பாகீரதி, பத்மா என