உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வுக்கலங்கள்‌ 43

உலகில் 60 நாடுகளுக்கு மேல் தனித்தனியே ஆய்வுக் கலங்களை வைத்திருக்கின்றன. அவற்றில் அமெரிக்க நாட்டிற்குச் சொந்தமான பலகிலோமீட்டர்கள் ஆழத்திற்கு ஆழ்கடலில் துளையிடும் கிளோமர் சேலஞ்சர் (Glomar challenger) என்னும் கலம் குறிப் பிடத்தக்கதாகும். இக்கலம் உலகின் பல ஆழ்கடற் பகுதிகளிலும் 500க்கும் அதிகமான ஆழ்துளைகளை யிட்டுக் கடற்பரப்பில் காணப்படும் படிவுப்பாறை களின் இயல்பையும், காலத்தையும் கணித்து நிலமேல் தட்டுப் பெயர்ச்சிக் (plate tectonic) கோட்பாட்டின் உண்மையை ஆதர்ரத்துடன் அறிய உதவியுள்ளது. கடல் ஆய்வில் மிகுதியாக ஈடுபடுத்தப்பட்டுள்ள கப்பல்களில் ஆஸ்த்திரேலியாவின் எச்.எம்.ஏ.எஸ். டயமன்ட்டினாவும் (H.M.A.S. Diamantina), கனடா வின் ஹட்சனும் (Hudson) பிரான்சின் ஜீன் சார் லெட்டும் (Jeancharlet), மேற்கு ஜெர்மனியின் மீட்டி யார் (Meteor),வல்டிவா (Valdiva), சோனே (Sonne), ஆகியவையும் ஜப்பானின் கோயோமேரியும் (Koyo- mary), போர்த்துகீசின் அல்ஃபோன்சா அல்புக்கெர்க் கும் (Alfonsa Albuquerque) தென் ஆப்பிரிக்காவின் ஆஃபிரிக்கானாவும் (Afrikana), சுவீடனின் ஆலியும் (Alie), சோவியத்து நாட்டின் வித்யாசும் (Vityaz), ஓபும்,(Ob),இங்கிலாந்தின் டிஸ்க்கவரியும் (Disco- very), சக்கல்டனும் (Schakelton), அமெரிக்க நாட்டின் ப்ரொஃபைலரும் (Profiler), ஓசனோ கிராபரும் (Oceanographer), வேமாவும் (Vema), இந்தியாவின் கலேஷனியும் (Gaveshani), கன்யாவும் (Sagarkanya) குறிப்பிடத்தக்கன. சாகர் இந்தியக் கடலாய்வின் படிமலர்ச்சியும் ஆய்வுக்கலங் களும். இந்தியாவில் கடல் ஆய்வு 1875 ஆம் ஆண்டு இராயல் இந்தியக் கடல் (Royal Indian Marine) அளவாய்வுத்துறை இன்வெஸ்ட்டிகேட்டர் (Investiga- tor) என்னும் ஆய்வுக்கலத்தின் மூலம் தொடங்கப் பட்டதாகத் தெரியவருகிறது. அதன் மூலம் பேரியம் கனிம முடிச்சுக்களும்(barite nodules)பாஸ்ஃபரைட்டு கனிமத்திரள்களும் (phosphorite concreation) கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இம் முயற்சிக்குப்பின் இந்தியக் கப்பற்படையினது கொங்கன் (konkan), சென்னை (Madras), வங்காளம் (Bengal), ராஜபுதனம் (Rajpu- tana), ரோஹில்கண்டு (Rohilkhand), சர்க்கார்(Circar போன்ற அளவாய்வுப் போர்க்கலங்களைப் பயன் படுத்தி அவ்வப்பொழுது ஆய்வு செய்யப்பட்டு வந்துள்ளது. இதை அடுத்து ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் 1950 இல் பெருங்கடல் ஆய்வுத்துறை தோற்றுவிக்கப்பட்டது. இதன் பலனாக 1959 இலிருந்து 1965 வரை நடந்த அனைத்துலக இந்தியப் பெருங்கடல் ஆய்வுப் பயண முயற்சியில் இந்தியா தனது கப்பற்படையின் கிருஷ்ணா (INS krishna) என்னும் அளவாய்வுக் கலத்தைப் பயன்படுத்தப் பெரும்பங்கு ஏற்றது. அதன்பின் கடல் ஆய்வின் இன்றியமையாமையை உணர்ந்து தேசியக் ஆய்வுக்கலங்கள் 43 லியல் கழகத்தை (National Institute of Ocea nography) இந்திய அரசு நிறுவியது. இது முதலில் இந்தியக் கப்பற்படையின் அளவாய்வுக் கல மாகிய தர்க்கைக் (INS Dharshak) கொண்டு கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து வடகிழக்கு அரபிக்கடலின் பகுதி யினை ஆராயும் (Oceanovax expedition) பணியை மேற்கொண்டு வெற்றி கரமாக முடித்தது. இதே தரு ணத்தில் மறுபக்கத்தில் நமது நாட்டின் உணவுப் பொருள் பெருக்கத் திட்டத்தின் கீழ் உருவான கடல் மீன் மேம்பாட்டுத் திட்ட ஆய்வு நிறுவனங்கள் பல, சிறிய ஆய்வுக்கலங்களைப் பயன்படுத்திக் கடலோரப் பகுதியில் ஆய்வுகளைப் பெருக்கின. அதே சமயத்தில் எண்ணெய், இயற்கை வளிம ஆணையம், (Oil and Natural Gas Commission), இந்தியநில இயல் அள வாய்வுக் கழகம் (Geological Survey of India), தேசியக் கடலியல் கழகம் ஆகியவை சேர்ந்து இந்தியக் கடற்பகுதிகளில் கிடைக்கும் உயிர்வழியல்லாத கனிமப்பொருள்களின் இருப்பினை அளவிட்டறியும் திட்டமொன்றை உருவாக்கின. அத்தருணத்தில் மத்தியக் கிழக்கு நாடுகள் பாறை எண்ணெயின் (Petrol) விலையை எதிர்பாராத அளவுக்குத் திடீரென உயர்த்தியதன் விளைவாக இந்திய அரசு கடற்பகுதிகளில் எண்ணெய்க் கண்டுபிடிப்பை விரைவுபடுத்த எண்ணியது. அதன்பொருட்டு பாறை எண்ணெய், இயற்கை வளிம ஆணையம் எண்ணெய் இருப்பைக் கண்டறிய உதவும் அன் வேஷக் (Anveshak) என்னும் நிலநடுக்கத்தைப் பதிவு செய்யும் (seismic) கலத்தையும், எண்ணெய் இருப்பினைத் துளையிட்டு அறிய உதவும் துளை யிடும் கலமாகிய சாகர் சாம்ராட்டையும் (Sagar samrat) பெற்றது. அதைத் தொடர்ந்து அறிவியல் தொழிலக ஆய்வுக் கழகம், கல்கத்தா துறை முகத்தில் சரக்குமாற்றுக் கலமாக இருந்த ஒன்றைக் கார்டன்ரீச் பட்டறையில் (gardenrech workshop) புதுமைக் கருவிகளைப் பொருத்திக் கவேஷனிஎன்னும் பெயரில் 1976 ஆம் ஆண்டு கடல் ஆய்வுக்குப் பயன் படுத்தியது. இதன் பின் இந்திய நாட்டின் கடல் ஆய் வுத்திறன் பன்மடங்காகப் பெருகியது. ஆழ்கடலில் மங்கனீசு கனிம முடிச்சுக்களை 1981 ஆம் ஆண்டு வெளிக் கொணர்ந்தது. அரபிக்கடலில் உண்டாகும் தென்மேற்குப் பருவக் காற்றுத் தொடர்பான செய்தி களை அறிய அனைத்துலகப் பருவக்காற்று ஆய்வுப் Monsoon Expedition) பயணத்தில் (International பங்கேற்றது. நில எண்ணெய் மற்றும் இயற்கை நில வளிம ஆணையத்திற்குப் பம்பாய்த் திட்டினின்று (Bombay high) ஊரான் (Uran) வரை போடப்பட்ட எண்ணெய் கடத்துக்குழாய்ப் பதிப்பு வழியைச் சரிவரக் கணித்திடச் செய்த அளவாய்வுப் பயணம் இவ்வாய்வுக் கலம் செய்த சிறப்பான பணி கட யாகும்.