ஆன்டிமோனேட்டுகள் 657
ஆன்டிமோனேட்டுகள் 657 விளங்கும் தட்டுகள், கோப்பைகள், சமையல் பாத்தி ரங்கள் முதலியன செய்யப் பயன்படுகின்றன. சேர்மங்கள்.6,000 ஆண்டுகட்கு முன்பே, எகிப்து நாட்டில், கண் இமைகளுக்கும், புருவங்களுக்கும் வண் ணம் தீட்ட, கருமை நிறமுள்ள ஸ்டிபுனைட்டு (Sb,S,) பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது. தற்காலத் தில் தீப்பெட்டிகள் தயாரிக்கவும் வெடிமருந்துகள் செய்யவும் கண்ணாடிக்கு ஆரஞ்சு வண்ணம் அளிக் கவும் ஆன்ட்டிமனி (III) சல்ஃபைடு பயன்படுகிறது. ரப்பர் (rubber) உற்பத்தி முறையில் வலிவூட்டும் பொருளாக (vulcanizing agent) ஆன்ட்டிமனி (v) சலஃபைடு உதவுகிறது. வெண்ணிறமுள்ள ஆன்ட்டிமனி (III) ஆக்சைடு பீங்கான் அல்லது உலோகப் பொருள்களின் மீது ஒளிபுகா மேற் பூச்சாகப் (enamel} பயன்படுகிறது. மேலும், வெள்ளை வர்ணங்கள் செய்யவும் களைத் தீப்பிடிக்காமல் பாதுகாக்கவும் ஆக்சைடு பயன்படுகிறது. துணி இந்த டார்ட்டார் எமெட்டிக் (tartar emetic) என்னும் பெயருடைய பொட்டாசியம் ஆனட்டிமொனைல் டார்ட்ரேட்டு (K.SbO. C, H, O) மருத்துவத்துறை யில், மார்புச் சளியை வெளிப்படுத்தவும், நச்சுப் பொருள் உட்கொண்டவர்களை வாந்தி எடுக்கச் செய்யவும் உதவுகிறது. 99.999% அளவு தூய்மை செய்யப்பட்ட ஆன்ட் டிமனி, மின் அணு இயல் துறையில் ஓரளவு பயன் படுத்தப்படுகிறது. சிலிக்கான் அல்லது ஜெர்மேனியத் துடன் (germanium) மிகச் சிறிதளவு ஆன்ட்டிமனி யைச் சேர்த்தால், n வகைக் பகுதிக்கடத்தி (n type semiconductor) கிடைக்கிறது. மேலும் இண்டியம், அலுமினியம், கேலியம் (gallium) ஆகிய உலோகங்க ளின் ஆன்ட்டிமொனைடுகளும், சிறந்த பகுதிக்கடத்தி களாகச் செயல்படுகின்றன. இவ்வாறு பெறப்படும் பகுதிக்கடத்திகள், திரிதடையங்களாகப் (tranisistors ) பலவகை மின் அணுச் சாதனங்களில் பெரிதும் பயன் படுகின்றன. பகுப்பாய்வு. ஆர்செனிக்கை மார்ஷ் ஆய்வின் (marsh test) மூலம் கண்ட றிவது போலவே ஆன்ட்டி மணியும் கண்டறியப்படுகிறது. ஸ்டினைட்டு 150°C வெப்பநிலைக்குச் சூடாக்கப்பட்ட குழாய் வழியாகச் செலுத்தும்போது கருப்பு நிற ஆடிபோல் (black mirror) படிகிறது. ஆன்ட்டிமனியை ஆன்ட்டிமனி டெட்ராக்சை டாக அல்லது ஆன்ட்டிமனி (III) சல்ஃபைடாசுக் கண்டறியலாம். ஆன்ட்டிமனி (III ) சல்ஃபைடு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் வீழ்படியச் செய்து பின் வடிகட்டிக், கழுவி 110°C வெப்பநிலையில் உலர்த்தப்படுகிறது. பின் இதிலிருந்து அதன் எடை அ.க. 3-42 யறிப்பட்டு ஆன்ட்டிமனியின் அளவு கணக்கிடப்படு கிறது. ஆன்ட்டிமோனேட்டுகள், நெ.சு.ஞானப்பிரகாசம் ஆக்ஸிஜன் உப்புக் கனிம வகையில் அடங்கிய கனிமங்களில் ஆன்ட்டிமனியை உட்கூறாகக் கொண்ட கனிமங்களை ஆன்ட்டிமோனேட்டுகள் என்று வகைப்படுத்தியுள்ளனர். இவ் வான்ட்டிமனி இயற் கையில் பல வகைப்பட்ட கனிமங்களுடன் உ னிணைந்த (associated) கனிமமாக இயற்கையில் காணப்படுகிறது. இதில் பிண்டினிமைட்டு (bindineimite) என்பது ஓர் ஈய ஹைடிரஸ் ஆன்ட்டியோனேட்டு. இக்கனிமம் இயற்கையில் துகள் நிலையிலும் சிறுநீரக வடிவி லும் மேற்படிவுகளில் காணப்படுகின்றன. இதன் நிறம் பழுப்பு, சாம்பல் பழுப்பு, மஞ்சள் ஆகியன வாகும். மற்ற வகை ஆன்ட்டிமனி கனிமங்கள் வானிலையால் வேதிச்சிதைவு அடையும்போது இரண்டாம் தரக் கனிமமாகக் கிடைக்கின்றன. இதன் ஒளி விலகல் எண் 1.84 முதல் 1.87 வரை மாறும். இவை உலகில் டிரான்ஸ்பைக்கிலாவிலும் (transbaiklia) நெர்ச்சின்ஸ்க்கிலும் (Nerchinsk) ஸ்பெயினில் சிரியா அல்மாஜிராவிலுள்ள கிரான் விலும் அமெரிக்க ஒன்றிய நாடுகளில் அரகான்ஸ் மலையிலும் தெற்கு டக்கோட்டாவிலும் காணப் படுகின்றன. மற்றொரு வகை கால்சியம் ஆன்ட்டிமோனேட்டு என்ற தனிமத்தை ரோமியைட்டு (romeite) என அழைப்பர். இதன் வேதியியல் உட்கூறு Ca,Sb, O20 என்பதாகும். இது ஒரு போலி செஞ்சமச்சதுரப் படிகத் தொகுதியில் நுண்ணிய எண்முகப் பட்டகத் தொகுதியில் படிகமாகிறது. இதன் கடினத் தன்மை 5.5; அடர்த்தி 4.7 முதல் 5.1 வரை மாறும். இதன் நிறம் மஞ்சளாகவும் தேன் மஞ்சளாகவும் இருக்கும். இதன் ஒளி விலகல் எண் 1.83 முதல் 1.87 வரை மாறுபடும். இக் கனிமம் டீடுமாண்டில் செயிண்ட் மார்சல் என்ற இடத்திலும் இத்தாலியிலும் பிரேசி லில் அட்டோப்பைட்டு (atopite) என்ற கனிமத்துடன் உடனிணைந்து மிகுல் பர்னியரிலும் (miguel burnier) காணப்படுகிறது. வெஸ்லினைட்டு (weslienite). இது ஒருவகைச் சோடியம், கால்சியம் இரும்பு ஆன்ட்டிமோனேட்டு (Na, FeCa3 Sb4 0,). இது செஞ்சமச்சதுரப் படிகத் தொகுதியில் எண் பட்டக வகையாகப் படிகமாகிறது. இது நுண்படிக நிலையும் பிறழ்நிலை இரட்டை ஒளி விலகலும் (anomalous double refraction) உடையது; ஒளி இயலாக நேர்மறைக் கனிமம். அதிக அளவு ஒளி யியல் கோணம் கொண்டது. இதன் ஒளிவிலகல் எண்