உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664 ஆனைப்பலா

664 ஆனைப்பலா வதற்கு இதன் வேர்களைக் கசக்கி எண்ணெயில் வறுத்துப் பயன்படுத்துகின்றார்கள். இலைச்சாற்றில் குளித்தால் வலிப்பு நீங்குகின்றது. தண்டின் துண்டு களைக கற்பூரத்துடன் சேர்த்து இளைப்பு நோயைக் குணப்படுத்துவதற்குப் புகைப்பார்கள். நூலோதி பா. அண்ணாதுரை 1. Fischer, C.E.C., Gamble's Fl. Pres, Madras, Adlard & Son, Ltd., London, 1931. 2. 3. Hooker, J.D., Hook. F. Fl. Br. Ind. 1893. The Wealth of India, CSIR Publication, New Delhi, 1969. ஆனைப்பலா இருவித்திலைப்பிரிவிலுள்ள (dicotyledoneae) அல்லி இணையாப் (polypetalous) பாம்பக்கேசி (bombaca ceae) குடும்பத்தைச் சார்ந்தவகை ஆனைப்பலாவா கும். தாவரவியலில் கல்லீனியா எக்சல்சா (cullenia excelsa Wt. = C. zeylanica (gardner ) Wt.ex K.Schum) என்று பெயர். தமிழில் பலா, வெடிப் பலா மலைக்கொன்சில் என்ற மாற்றுப் பெயர்களும், வணிகத்துறையில் கரணி (karani) என்ற பெயரு முண்டு. இது மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள், இலங்கை ஆகிய பகுதிகளில் 1500 மீ, உயரம் வரை வளர்க்கப்படுகிறது. சிறப்புப்பண்புகள். இது நேராகவும், ஏறக்குறைய 20 மீ. (முதல் கிளை வரை) உயரம் வரை வளரக் கூடிய மிகப்பெரிய இலையுதிரா மரமாகும். இதன் பட்டை பழுப்பாகவும், சமபரப்புடனும் இருக்கும். கிளைகள் எல்லாப் பக்கங்களிலும் பரவியிருக்கும். இதன் இளம் பாகங்கள் எல்லாம் தட்டையான சிதல்களால் (peltate scales) மூடப்பட்டிருக்கும். இலை கள் தனித்தவை, நீள்சதுரமானவை (elliptic oblong} மேற்புறம் பளபளப்பான பசுமை நிறமாகவும், கீழ்ப் புறம் வெள்ளி போன்ற வெண்மை நிறத்துடனும், அடர்த்தியான சிதல்களுடனும் நீள்கூர்மையான நுனியுடனும் இருக்கும். (acuminate). பூக்கள் வெளிர்-- 16. 14 2. -12 13 10 ஆனைப்பலா 17 9 1. பூ மொட்டுகளையுடைய மரப்பட்டை 2. பூ மொட்டு 3. கனி (இரு அளவுகளில் காண்க்) 4. முழுவிதை 5. கனியின் குறுக்கு வெட்டுத் தோற்றம் 6. விதையின் குறுக்குவெட்டுத் தோற்றம் 7. கனி உறையின் முள்போன்ற வளரிகள் 8. மகரந்தக்குழாயின் விரிப்புத் தோற்றம் 9. மகரந்தப்பை 10. மிலார் 11. சூற்பையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் 12. சூல் 13. குலகம் 14. சூவகமுடி 16. புல்லி வட்டத்தின் விரிப்புத் தோற்றம் 16. தட்டைச் சிதல்கள் (இரு அளவுகளில் காண்க) 17. ஏரில்