உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678 ஆஸ்‌ஃபோடல்‌

678 ஆஸ்ஃபோடல் ஆஸ்பான், ஹென்றி ஃபேர்ஃபீல்டு . palaentology) துறையைத் தொடங்கி அதன் தலைவ ராகச் சிறந்த பணி செய்தார். அவ்வருங்காட்சியகத் தில் வைக்கப்பட்டிருந்த காட்சியுயிரிகளைக் கண்ட பின்னர் மக்களிடையே தொல்லுயிரியல் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. அவர் தம் நிர்வாகத் திறமை காரணமாக அமெரிக்க இயற்கையியல் அருங் காட்சியகத்தின் தலைவராக 1908 இல் பொறுப் பேற்றார். பிரின்ஸ்டனில் உடற்கூற்று ஒப்பியல் பேரா சிரியராகப் பணியாற்றிய காலத்தில் முதுகெலும் புடைய விலங்குகளின் மூளை பற்றி ஆய்வுகள் செய் தார். மேலும் அவர், பாலூட்டிகள் பல இடங்களுக் குப் பரவிச் செல்லும்போது ஆங்காங்கு நிலவும் சூழ் நிலைகளுக்கு ஏற்ற தகவமைப்புகளைப் பெற்றுத் தனித்தனிச் சிறப்பினங்களைத் தோற்றுவிக்கின்றன என்னும் தகவமைப்பு விரிபடிமலர்ச்சி (divergent evolution) கருத்தைத் தெளிவு படுத்தினார். அதனை ஆஸ்பான் தகவமைப்பு விரிவாக்க விதி (osborn's law of adaptive radiation) எனக் கூறுவர். ஆஸ்பான் சிறந்த கல்வியாளர்; கல்வி விடு தலையைப் பெரிதும் ஆதரித்தவர்; படிமலர்ச்சிக் கோட்பாடுகளின் எதிரிகளைக் கடுமையாக எதிர்த் விலங்கியல் கழகத்தின் தவர். நியூயார்க்கிலுள்ள (New York zoological society) தலைவராகவும் 1896- 1903), அமெரிக்க நிலஇயல் அளக்கையியல் கழகத்தின் (United States geological survey) மூத்த நிலஇயல் அறிஞராகவும் (1924 முதல்) உலகின் பல அறிவியல் கழகங்களின் உறுப்பினராகவும் இருந்து அறிவியல் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டார். அறிவியல் விலங்கியல்,படிமலர்ச்சி நிலஇயல் கல்வி பற்றிப் பத்து அரிய நூல்கள் எழுதியுள்ளார். ஆஸ்பார்ன் அவருடைய எழுபத்தெட்டாம் வயதில் நியூயார்க் நகரில் இயற்கை எய்தினார். ஆஸ்ஃபோடல் ஜெ.கௌ. இது ஆஸ்ஃபோடிலஸ் (Asphodelus linn.) என்னும் பேரினத்தையும், ஒருவிதையிலைக் குடும்பங்களில் ஒன்றான லிலியேசியையும் (liliaceae) சார்ந்தது. இதில் ஏறக்குறைய 12 சிற்றினங்களிருக்கின்றன. இந்தியாவில் இரு சிற்றினங்கள் (A. comosua baker- A tenuifolius cavan.) உள்ளன. இவற்றின் பெரும் பாலான சிற்றினங்கள் மத்தியதரைக் கடற்பகுதி களில் பரவியிருக்கின்றன.ஆ. டெனுவிஃபோலியியஸ் வங்காளத்திலிருந்து பஞ்சாப் வரை களைச்செடி யாகப் பரவிக் காணப்படுகிறது. பொதுப்பண்புகள். இது ஒருபருவ அல்லது பல பருவச் செடி (annual or perennial). வேர்கள் சிறுத் தோ, தடித்தோ இருக்கும். இலைகள் குழல் போன்ற வை (fistular); ஏறக்குறைய உருண்டையானவை (semiterete), நிமிர்ந்தவை; (erect) அல்லது முப்பக்க முடையவை (triquetrous); கொத்தாக (tufted) நிலத் திலிருந்து அமைந்திருப்பவை. நுனி நீள்கூர்மை யானது { acuminate), மஞ்சரித்தண்டு (scape) உருண் டையானது, பலகிளைகளை உடையது; மஞ்சரி கதிர்வகை (raceme) வகையைச் சார்ந்தது; இது மலர் களைப் பரவலாகவோ, அடர்த்தியாகவோ கொண் டிருக்கும்.பூ இதழ்கள் (tepals) 6, இரு வட்டங் களில் (3+3) ஆக அமைந்தவை, வெண்மை, இளஞ் சிவப்பு, மஞ்சள் நிறமானவை; பழுப்பு அல்லது பசுமை நிற நரம்பைக் கொண்டவை. மகரந்தத் தாள்கள் 6, இருவட்டங்களில் (3+3) ஆக அமைந் திருக்கும்; மகரந்தத் தாளின் அடிப்பகுதி அகன்று சூற்பையைத் தழுவி இருக்கும். சூற்பை (ovary) மேல் மட்டத்திலுள்ளது, மூன்று அறைகளைக் கொண்டது. ஒவ்வோர் அறையும் இரு சூல்களைப் (ovules) பெற்றிருக்கும். சூலகத்தண்டு (style) போன்றது (tiliform); சூலகமுடி (stigma) பிளவுகளைக் கொண்டது. இதன் கனி அறை வழி வெடி உறைகனி வகையைச் (loculicidal capsule) சார்ந்தது. உருண்டையானது. ஒவ்வொரு விதை யும் முப்பக்கமுடையது; கருமையானது; இதன் ஒவ்வொரு பக்கத்திலும் 3 முதல் வரம்புகளும் (ridges) இதே எண்ணிக்கையில் குழிகளும் (pits) காணப்படும். இழை மூன்று பொருளாதாரச் சிறப்பு. ஆ.அல்பஸ் (A.albus), ஆ.அகாலிஸ் (A.acalis) ஆ.ராமோசஸ் (A.ramosus) அழகுத் தாவரங்களாகத் தோட்டங்களில் பயிரிடப் படுகின்றன. ஆஸ்ஃபோடலின் தடித்த கிழங்கு போன்ற வேர்களிலிருந்து முற்காலத்தில் சாராயம் தயாரிக்கப்பட்டது. பஞ்சக்காலங்களில் ஆ.டெனுவி ஃபோலியஸ் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதன் விதைகள் சிறுநீர்ப்போக்கியாகப் (diuretic) பயன்படுகின்றன. கிரேக்க நாட்டு இதிகாசங்களில் ஆஸ்ஃபோடல்கள் இறந்தவர்களுடனும், நகரத்தில் (under world) உள்ளவர்களுடனும் தொடர்புபடுத் திக் கூறப்பட்டிருக்கின்ற சிறப்பைப் பெற்றிருக் கின்றன. இவை கல்லறையில் நடப்பட்டன. இவற் றின் சாம்பல்நிற இலைகளும், மஞ்சள்நிற மலர்களும்