உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்கருவிகள்‌ 693

வியில் அமைப்பில் பொருத்தப்பட்டுள்ளன. வலக் கைவிரல்களைக் கொண்டு கத்தி முனைக்கும், தண் டின் கழுத்துப் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் மீட்டிக் கம்பிகளை இயக்கலாம். பலதரப்பட்ட அதிர்வெண்களை இடக்கை விரல்களைக் கொண்டு மெட்டுகளை மாற்றி எழுப்பலாம். படத்தில் உள்ள 1,2,4,6 ஆகிய கருவிகள் இவ்வகையைச் சார்ந்தன வாகும். வீணையில் கலைஞரின் வலக்கை விரல்கள் இயக்கியாகவும், கம்பிகள் அதிரும் பகுதியாகவும் செயல்படுகின்றன. தண்டு பலகையின் மேலுள்ள மெட்டுகள் எந்திர நுட்பமாகச் செயல்படுகின்றன. குடம், குடுக்கை, தண்டு ஆகியவற்றிலுள்ள காற்று இசையின் ஆற்றலைப் பெறுகின்றது. கம்பிகள் சுர வரிசையை எழுப்பப் பயன்படுகின்றன. வீணையில் இசையின் செழிப்பு அதிகமில்லா விடினும், ஒழுங்கிசை அதிகமிருக்கும். அரைக்கோள வடிவமுள்ள குடம் எழுப்பும் முழக்கம் இசையின் இனிமையை அதிகரிக்கின்றது. வில்லதிர்வு இசைக்கருவிகள் வயலின் (violin). வில் கொண்டு அதிர்விக்கும் நரம்பு இசைக்கருவி இசைக்கருவிகள் 693 இவ் வகையைச் சேர்ந்தது. படத்தில் உள்ள 1,5,7 ஆகியவை இவ்வகைக் கருவிகளைக் காட்டுகின்றன. இதில் அதிரும் பகுதி நான்கு கம்பிகள் கொண்டு இருக்கும். கம்பிகளின் ஒரு முனை மெல்லிய எபொ னைட்டுத் தகட்டினால் இணைக்கப்பட்டு ஒத்ததிர் வியின் ஒரு முனையில் கட்டப்பட்டுள்ளது. அடுத்த முனை மரத்தினால் ஆன முனைகளினால் சுற்றப் பட்டு, நீண்ட எபொனைட்டுத் தகட்டினால் கட்டப் பட்டுள்ளது. எபொனைட்டுத் துண்டினால் கம்பியை வெவ்வேறு இடங்களில் அழுத்துவதன் மூலம் வெவ்வேறு சுரங்களை எழுப்ப முடியும் நான்கு கம்பிகளும் அதிரும் பொருள்களாகும். இடக்கை விரல்களினால் எபொனைட்டுத் தகட்டின் மேலுள்ள நரம்புகளை அழுத்துவது சுரமெழுப்பும் நுட்பமாகும். இதில் உள்ள ஒரு வில் இயக்கியாகப் பயன்படுகிறது. அவ்வில் குதிரை முடியாலானது. வில்லால் இழுக்கும் இடத்தை மாற்றுவதாலும் இழுக்கும் போது அழுத்தத்தை மாற்றுவதாலும் இசையின் பண்பை வெகுவாக மாற்றலாம். மேலும் இசையின் சிறப்பியல்பு வயலினின் பாகங்களின் அமைப்பைப் பொறுத்திருக்கிறது. இக்கருவியில் வீணையில் உள்ள எல்லா நயங் பல் படம் 2. காற்று ஊதப்படும் இசைக்கருவிகள் 1. ஓபோ (oboe), 8. கிளாரினெட் (clarinet), 3. ஃகுழல் (flute), 4.பாசூன் (basson),