உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஆய்வுக்கலங்கள்‌

48 ஆய்வுக்கலங்கள் சாகர் கன்யா என்ற கலம் ஆய்வுப் பயணத்தை, மேற்கொண்டாலும். மேற்கொள்ளாவிட்டாலும் ஒரு நாள் ஆய்வுக்கு 1,50,000 ரூபாய் செலவழிக்க வேண்டும். எனவே ஒருநாள் கூட வீணாக்காது மிகவும் சீராகத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்: இதற்கென இந்திய அரசு பல கடல் ஆய்வுத் துறை களையும், நிறுவனங்களையும் ஒருங்கிணைத்துக் கலந் துரையாடி நாட்டிற்கு இன்றியமையாத ஆய்வுப் பணிகளைத் தெரிந்தெடுத்து அவற்றிற்கெனவே ஆய்வுக் கலங்களைப் பயன்படுத்த வழிவகுத்துள்ளது, இதுபோன்ற திட்டப்பணியை முதலில் தேசியக் கடலியல் கழகம் பரிந்துரைக்கிறது. துறை நிறுவனங்களின் உறுப்பினர்களாலான உயர்மட்டக் குழு அத்திட்டத்தைச் சீர்தூக்கி, தேசியப் பெருங் கடல் நிறுவனம், மத்திய மீன் மேம்பாட்டு நிறுவனம். இந்திய நில இயல் கனிப்பொருள் அளவாய்வுக் கழகம் முதலியவற்றின் மூலமாக அதைச் செயல் படுத்துகிறது. பல ஆய்வுப்பயண நிர்வாகம், ஆய்வுப் பயணங்களை ஒரு தனிப்பட்ட நிறுவனமோ பல துறைகள் அடங்கிய நிறுவனங்களோ சேர்ந்து நடத்தலாம். அறிவியல், தொழில்நுட்ப வல்லுநர்களும் பல்துறை ஆய்வுக்குரிய நவீன கருவிகளும் இவ்வாய்வுப் பயணங்களை நடத்துவதற்கு இன்றியமையாத் தேவைகளாகும். எடுத்துக்காட்டாக, சாகர் கன்யா என்னும் ஆய் துணைக்கருவிகளாவன, வுக்கலத்திலுள்ள முக்கிய ஒருங்கிணைந்த செயற்கைக்கோள்வழி கலம்ஓட்டும் அமைப்பு, காட்சிமுறைக் கதிர்வீச்சுத் திசைகாணி. அமைந்த டெக்கா தடவரைவி கலம் ஓட்டும் அமைப்பு, தன்னியக்கக் காட்சி அ உயரலைவெண் கதிர்வீச்சுத் திசையுடை அலைவாங்கி, வரை காட்டி கலம் ஓட்டும் ராடார் முறை ஆழங்காணி, மின்காந்த வேகப்பதிவு, கொட்புத் (சூழல்) திசைகாட்டி, மின்துகளியல் தன்னியக்கக் கலம் ஓட்டும் கருவி, வானொலிச் சிற்றலை ஒலி பரப்பு வானொலி, மார்க்கோனி வானொலித் தொலையச்சு, வானொலி நிலையம், செயற் கைக் கோள்களால் இயங்கும் வானொலி அணி, அதி உயரலைவெண் தொலைக்காட்சி, மூவலைவெண் குறுங்கற்றை ஆழங்காணி, ஆழ்கடல் படிவுப்பாறை ஆழங்காணி, குறைந்த ஆழ எதிரொலிமானி, கடலடி ஒளிப்பட அமைப்புடைய முக்காலித் தொலைக் காட்சி, ஒளிப்படக் கருவி சறுக்கு கலம், ஒளிப்படக் கருவியுள்ளவீழ்படிவு (free-fall) அள்ளி, நீரடி மாதிரி எடுப்பான், குடைவி மின் கதிர் வரைவி, புரோட் டான் காந்தமானி, கடல்சார் அடர்த்தி எண் அளவி, அலைவரிசை இயக்கமுறை நடுக்கமுணரி, கடல் தரை அமைப்பை வரையும் பக்க அல் கீட்டுச்சோனார், செங்குத்து வெப்பநிலைப் பதிவான், ஹைட்ரோக் கார்பன் நீர்மாதிரி எடுப்பி (sampler), கப்பல் அலை பதிப்பி, கட்டுத்தறி அமைப்பு, வெப்ப உவர்மைப் பதிவான், உப்பு, வெப்ப, ஆழ மற்றும் ஆக்சிஜன் அளவு காட்டி, ஒளிர்வு நிறமாலை மானி, ஒளிர்வுமானி, அதிவேக மிதவையுயிரி வலை, செந்தர அழுத்தமானி, இடையாழ நீர் இழுவலை, காற்று வானிலைக் கூட்டு ராடார், வெப்ப அழுத்தமானி, கதிர் வெப்பமானி, வானிலை விவரப் பதிவமைப்பு, மீவளி நிலைமானி, பொதுநோக்கக் கணிபொறி அமைப்பு, பன்னோக்கு விவரப் பதிவமைப்பு என்பனவாகும். முதலில் கூறிய தேவையை ஆய்வுக்கலங்கள் பெறுவதற்கு முன்னதாகவே திட்டமிட்டு வல்லுநர் களைத் தேர்நதெடுத்து, தேவைப்பட்டால் அயல் நாடுகளுக்கு அனுப்பிப் பயிற்சி தந்து கொணர வேண்டும். நமது நாட்டைப் பொறுத்தவரை இத்துறையில் போதுமான வல்லுநர்கள் ஆய்வுப் பயணத்தில் சிறந்த பட்டறிவு பெற்றுள்ளார்கள். மேலும் அவ்வாய்வுக்கு வேண்டிய பயிற்சி தற் பொழுது பல பல்கலைக் கழகங்களிலும், தேசிய கடலியல் கழகத்திலும் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகிறது. மின்னணுக் கருவிகள் அடிக்கடி சீர்தூக்கி முன்னேற்றப்படுத்தப்படுவதால் தற்பொழுது ஆய்வுக் கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒவ்வொரு கருவியும் மாற்றும்படி நேரிடலாம். அச்சமயத்தில் அத்தகைய கருவியை வாங்குவதற்கு முன்னரே சில வல்லுநர் களை அவை செய்யப்படும் இடத்திற்கே அனுப்பி பயிற்சி கொடுத்துக் கொணர்வது நலம். க் இம்மாதிரி இந்திய அரசிலுள்ள ஒவ்வொரு கலத்திற்கும் அதில் பொருத்தத் திட்டமிட்டிருந்த ஒவ்வொரு கருவிக்கும் ஏற்ப இளம் அறிவியல் வல்லு நர்களை ஆங்காங்கு அனுப்பி அதற்கான பயிற்சியை ஆய்வுக்கலம் வாங்குவதற்கு முன்னரே அளித்து வந்த தால் ஒவ்வொரு ஆய்வுக்கலமும் வந்தடைந்ததும் சிறிதளவும் காலங் கடத்தாமல் ஆய்வைத் தொடங்க முடிகிறது.கடந்த ஓரிரு ஆண்டுகளில் கடல் ஆய்வுக் கலங்களை ஏற்று நடத்த 60க்கு மேலான அறிவியல், தொழில் நுட்ப வல்லுநர்களை மேல்நாடு அனுப்பி அவர்களுக்குப் பயிற்சியும் கொடுக்கப்பட்டு இருக் கிறது. இவ்வாய்வுக்கலங்களில் உள்ள துணைக் கருவி களை 24 மணி நேரமும் பயன்படுத்தி அவற்றி லிருந்து வரும் அளவீடுகளைத் தேசியப் பெருங்கடல் ஆய்வுக் கழகங்களில் அமையப் பெற்றுள்ள ஆய்வுக் கூடங்களில் கணித்திட, கலங்களிலிருந்து வாய்வை நடத்த, குறிப்பிட்ட வல்லுநர்களைப் போல் மூன்று மடங்கு அதிகமாக வல்லுநர்கள் தேவைப்படுகின்றனர். அதேசமயத்தில் ஆய்வுக்கலங் களினால் ஆகும் செலவில் சிக்கனத்தைக் கடைப் பிடிக்க 45 நாள்களே சிறும ஆய்வுப்பயணம் என முடிவெடுத்து அதைச் செயற்படுத்தும் பொழுது, ஒரு மடங்கு வல்லுநர்கள் ஆய்வுக்கலத்தில் ஆய்வை மேற்பார்வை செய்திடும் போது அதைப் போன்று 5 மடங்கு வல்லுநர்கள் ஆய்வுக் கூடத்திற்குத் தேவைப் இவ்