உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/727

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இஞ்சி 703

. இரண்டாகப் பிளந்தும் காணப்படும். மலேயாவில் பூக்களைப் பார்க்க இயலாது. ஆனால் சில நாடுகளில் இஞ்சியில் மஞ்சரிக் கொத்தைச் சாதார ணமாகக் காணலாம். மஞ்சரி நேரடியாக வேர்ப் பகுதியிலிருந்தே 15முதல் 25செ.மீ. நீளத்தில் உண்டா கியிருக்கும். ஈட்டி (spike) உருளை வடிவில் கூம்பு முனையுடன் 4-7 × 1.5-2,5 செ.மீ. அளவில் இருக்கும். பூவடிச் சிதல்கள் முட்டை வடிவில் மஞ்சளாக 2-3× 1.5-2.0 செ. மீ. அளவிலும் ஓரம் உள்பக்கம் வளைந்தும் காகிதம் டோன்றும் இருக்கும்.கீழிருக்கும் பூவடிச்சிதல் ஒற்றையாக வெள்ளைநிற நுனியுடனிருக் கும். ஒவ்வொரு பூவடிச் சிதல் பக்கத்திலும் ஓவ்வொரு பூ உண்டாகிறது. இவை வலுவற்றுக் குறுகிய காலம் வாழும் தன்மையுடையவை. பூக்காம்புச் சிதலானது பூவடிச்சிதல் நீளத்தில் இருக்கின்றது. புல்லி வட்டம் மெலிந்து குழல் போன்று உறையுடன் 1.0 முதல் 1.2 செ.மீ. நீளத்தில் மூன்று கதுப்புகளுடையது. அல்லிக் குழல் 2.0-2.5 செ.மீ. நீளத்திலும் மூன்று மஞ்சள் நிறக் கதுப்புகளுடனும் இருக்கின்றது. மேல்பகுதி கதுப்பு 1.5-2.5×0.8 செ.மீ. அளவில் மகரந்தப்பை மீது வளைந்தும் இருக்கும். பக்கவாட்டிலுள்ள கதுப் புகள் 0:6×0.4 செ.மீ. அளவில் முட்டை அல்லது நீள்சதுர வடிவில் அடிப்பகுதியில் தனியாகவும் இருக் கும். வேபெல்லம் ஏறக்குறைய வட்டமாக 1.2 செ. மீ. நீளத்திலும் அகலத்திலும் அடிப்பகுதியில் ஊதா அல்லது பாலேடு நிறப் புள்ளிகளுடனும் இருக்கிறது. மகரந்தப்பைகள் 0.9 செ.மீ. நீளமானவை, பாலேடு (cream) நிறமானவை. சூலகமுடி நீட்டிக் கொண்டி ருக்கும். சூலகத்தண்டு தனித்தும் சூல்பை மூன்று திசுவறைகளுடனும் இருக்கும். ஒவ்வொரு திசுவறை யிலும் பல சூல்கள் உள்ளன. கனிகள் சாதாரண மாக உற்பத்தியாவதில்லை. கனிகள் உண்டாகும் பொழுது மெல்லிய சுவருடன் மூன்று வால்வுகளை யுடைய உறைகனிகளாக உண்டாகின்றன. விதைகள் பத்திரிகளுடன் (arils) கருப்பு நிறமுடையவை. . சாகுபடி முறை. வடிகால் வசதியுள்ள இருமண் பாடான நிலமும் இலை மக்குமிகுந்த நிலமும் இஞ்சி சாகுபடிக்கு ஏற்றதாகும். இறைவை நிலத்தில் இது வெற்றிலை, வாழை, மஞ்சள், வெங்காயம், பூண்டு, மிளகாய், காய்கறிப் பயிர்கள், கரும்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், நிலக்கடலை, ஆகியவற்றுடன் பயிர் சுழற்சி செய்யப்படுகிறது. புன்செய் நிலங்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மரவள்ளி, சர்க்கரை வள்ளி, மிளகாய் மற்றும் மானாவாரி நெல்லுடன் பயிர்ச் சுழற்சி செய்யப்படுகின்றன. வாழை, துவரை, கொத்தவரைப் பயிருடனும் சேர்த்து இதனைப் பயிரிடுவதும் உண்டு. தென்னை காபித் தோட்டம் மற்றும் ஆரஞ்சு மரம் வளர்ப்பின்போது இஞ்சியை ஊடுபயிராகச் சாகுபடி செய்வதுண்டு. இமாசலப்பிரதேசப் பகுதிகளில் உயர்ந்த மலைப் பகுதிகளில் தக்காளி மற்றும் மிளகாய்ப் பயிருடன் இஞ்சி 703 ஊடுபயிராக இதனை வளர்ப்பது வழக்கம். நிலத்தை மார்ச்சு - ஏப்ரல். மாதங்களில் 5 முதல் 6 தடவை உழுது பயன்படுத்த வேண்டும். வானம்பார்த்த பயிருக்கு மேட்டுப்பாத்திகள் ஒரு மீட்டர் அகலத்தில் அடைக் கப்படுகின்றன. நீளம் 3 முதல் 6 மீட்டரும் உயரம் 15 செ.மீ. இருக்குமாறு பாத்திகள் அடைக்கப்பட்டு ஒவ்வொரு பாத்திக்கும் 30 செ.மீ. நீள்பள்ளம் அமைத்து வடிகால் வசதியைப் பெருக்கிட வேண்டும். சிறிய பள்ளம் தோண்டி 25 செ.மீ. இடைவெளியில் வரிசைக்குவரிசை 15முதல் 20செ.மீ. இடைவெளிதந்து இஞ்சியை ஊன்ற வேண்டும். இறைவைப் பயிரில் வாய்க்கால் வரப்புகள் (ridges of furrows) 40முதல்45 செ.மீ. இடைவெளியில் தயாரித்து வரிசையாக 22 முதல் 30 செ.மீ. இடைவெளி தந்து இஞ்சியை ஊன்ற வேண்டும். விதை இஞ்சி 20 முதல் 30 கிராம் எடை யுள்ளவையாய் 5 செ.மீ. ஆழத்தில் நடுதல் சிறந் தது. விதை இஞ்சியில் ஒரு மொட்டாவது இருத்தல் அவசியம். இஞ்சியை ஊன்றிய பின் மண்ணால் மூடி விடவேண்டும். ஒருஹெக்டேர் நடவிற்கு 1800 கிலோ விதை இஞ்சி தேவைப்படுகிறது. உயர்ந்த மலைப் பகுதிகளில் நடவுசெய்ய 2160 முதல் 2640கிலோ விதை இஞ்சி தேவை. தென்னிந்தியப் பகுதிகளில் ஏப்ரல்-மே மாதங்களிலும், வட மாநிலங்களில் சற்றுப் பிந்திய பருவத்திலும் நடவு செய்யப்படுகிறது. தென்னிந் தியாவில் ஏப்ரல் மாத நடுவிலும் வட இந்தியாவில் மே முதல் வாரத்திலும் நடவு செய்தல் சிறந்த பருவ மாக இருக்கின்றது. இறைவைப் பயிரானால் இஞ்சி யை ஊன்றியதும் நீர்பாய்ச்ச வேண்டும். வானம் பார்த்துப் பயிரிடும் நிலத்தில் மண்ணின் மீது தழை களைப் பரப்பி சூரியஒளி, அடைமழை போன்றவற் றினால் ஏற்படும் கெடுதல்களை நீக்கலாம். இமா சலப்பிரதேசத்தில் மண்ணை மூடுவதற்குத் தொழு உரம் பயனாகிறது. பாத்திகளில் வாய்க்கால் ஓரங் களில் துவரை, கொத்தவரை, அல்லது ஆமணக்கை விதைத்து நிழல் பரப்புவது வழக்கம். நட்ட இஞ்சி மட்ட நிலத் தண்டிலிருந்து 10 முதல் 20 நாள்களில் தழை உண்டாகும். மூன்று அல்லது நான்கு முறை களை எடுத்தும் ஒன்றிரண்டுமுறை மண்ணைக்கொத்தி விடுதலும் வேண்டும். இஞ்சிப் பயிருக்கு 4 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறையோ தேவைப்படும் பொழுதோ தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இரண்டு அல்லது மூன்று முறை நிலத்தின் மீது பசுந்தழையைப் பரப்புவது வழக்கம். அடியுரமாக 25 முதல் 30 மண் தொழு உரம் இடுவதுடன் ஒரு ஹெக்டருேக்கு 75 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சாம்பல் சத்து இடப்படும். நடும்பொழுது முழு மணிச்சத்தையும் பாதி சாம்பல் சத்தையும் அடியுர மாகவும் இடுவதுண்டு. தழைச்சத்து இரண்டு சம்பங் காக மேலுரமாக நிலத்திலிட வேண்டும். முதல் மேலுரமாகப் பாதி தழைச்சத்தையும் பாதி சாம்பல் சத்தையும் நட்ட இரண்டாவது மாதத்தில் பயிருக்குத்