இஞ்சி 705
பொருளாதாரப் பயன்கள். பச்சை இஞ்சியும் உலர்ந்த இஞ்சியும் (சுக்கு) மருத்துவத்திலும், காரம், மணம் சேர்க்க உணவிலும்பயன்படுத்தப்படுகின்றன. சில சமயங்களில் சுக்குத் தூளையும் பயன்படுத்து வதுண்டு இஞ்சியைச் சமையலிலும் இஞ்சிரொட்டி (ginger bread), பிஸ்கெட்டுகள், சுட்ட அப்பளங்கள். களிகள் pudding) சூப் மற்றும் ஊறுகாய்தயாரிப்பிலும் பயன்படுத்தி வருகின்றனர். இஞ்சியைப் பயன்படுத்தி ஒயின், ஜிஞ்சர்பீர் (ginger beer) முதலியவையும் தயாரிக்கப்படுகின்றன. முற்றாத இஞ்சியை உரித்துத் துண்டுகளாக்கி அவித்துப் பாட்டில்களில் சர்க்கரைப் பாகில் சேமித்து வைத்துக்கொண்டு அன்றாடம் உண்பது சிலருக்கு வழக்கம். இஞ்சியில் இள மஞ்சள் நிறமான ஆவியாகும் எண்ணெய் 1 முதல் 3 விழுக்காடு உள்ளது. இதனைப் பயன்படுத்தி நறுமண முள்ள பொருள்கள் தயாரிக்கலாம். இஞ்சி, சுக்கிற்கு என்று தனி மணமுண்டு. அன்றாட வாழ்வில் இஞ்சி இன்றியமையா ததொன்றாகிறது. இறைச்சிக் குழம்பு, பிரியாணி போன்ற உணவுப் பொருள்களுக்கு நல்ல மணமும் சுவையும் கிடைப்பதற்கு இஞ்சியைச் சேர்ப் பது வழக்கம். சீன உணவிலும், இந்திய உணவிலும் இது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இஞ்சி செரிப் புத்திறனை அதிகரிக்கிறது. இதன் பொருட்டே சிலர் கடைகளில் விற்கும் இஞ்சிமுறிப்பாகு என்னும் இனிப்புப் பொருளை வாங்கித் தின்கின்றனர். முன் காலத்தில் இஞ்சியை நச்சு முறிவு மருந்தாகப் பயன்படுத்தினர். இங்கிலாந்தில் இதனைப் பிளேக் (plague) என்னும் கொடிய நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தினர். இஞ்சியும் சுக்கும் இந்திய மருத்து வத்தில் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. இஞ்சியைத் தோல்நீக்கித் தூய்மை செய்து சிறுசிறு வட்ட வில்லைகளாக நறுக்கி வாயகன்ற பாட்டில் ஒன்றில் போட்டு இஞ்சித் துண்டுகள் மூழ்கும் அள விற்கு எலுமிச்சம்பழச் சாறு பிழிந்து அச்சாற்றில் இஞ்சித் துண்டுகளை ஊற லைக்க வேண்டும். நாள் தோறும் இஞ்சித் துண்டுகளைக் கிளறிவிடுதல் அவசி யம். பின்பு இஞ்சியை மட்டும் வெளியிலெடுத்து வெயிலில் உலர்த்த வேண்டும். மாலையில் மறுபடி யும் இஞ்சித் துண்டுகளை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊறவைக்க வேண்டும். எலுமிச்சம் பழச்சாறு முழு தும் இஞ்சித் துண்டுகள் உறிஞ்சிக் கொள்ளும் வரை இவ்வாறு செய்ய வேண்டும். இஞ்சி ஈரமில் லாமல் நன்கு காய்நத பின்பு தூய பாட்டிலில் போட்டுச் சேகரித்து லைத்துக் கொள்ளவும். பித்தம், வாய்க் கசப்பு, பெண்களுக்கு மசக்கை காலத்தில் ஏற் படும் வாய்க் கசப்பு, வாந்தி ஆகியவற்றிற்கு இவ் வாறு பாடம் செய்யப்பட்ட இஞ்சித் துண்டுகளில் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு உமிழ்நீரை விழுங்கி வரப் பலன் தெரியும். நன்கு தூய்மை செய்து தோல்நீக்கிய இஞ்சியைத் துண்டுகளாக்கிச் தூய்மை செய்த வாயகன்ற பாட்டி அ.க. 3-45 இஞ்சி 705 தொடர்ந்து லில் உள்ள தேனில் போட்டு வெயிலில் ஒருவார காலம் வைத்திருக்கவும். பின்பு அன்றா டம் காலையில் உணவுக்கு முன் ஓரிரு துண்டு கள் எடுத்து மென்று உண்ணப் பித்தம் போகும். பசி உண்டாகும். உடல் நலம் பெறும். பிரசவித்த பெண்களுக்கு இஞ்சிச் சாற்றினைக் குடிப்பதற்குத் தருவது வழக்கம். இதனால் கருப்பையில் தங்கி உள்ள அழுக்குகள் நீங்கும். நார் இல்லாத இரண்டு துண்டு கள் இஞ்சி, மிளகு ஒரு தேக்கரண்டி, சீரகம் ஒரு தேக்கரண்டி, கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி, ஆங்குரா திராட்சை (கொட்டையுள்ள திராட்சை) ஐந்து, தேன் இரண்டு தேக்கரண்டி, நெய் இரண்டு தேக்கரண்டி, வெல்லம் ஒரு எலுமிச்சம் பழ அளவு தேவைப்படுகின்றன. வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்துக் கொண்டு கல், மண் நீக்கி அடுப்பிலிட்டு கொதிக்க வைக்கவும். ஊற வைத்த கொத்தமல்லி விதை, சீரகம், மிளகுடன் இஞ்சி, கொட்டை நீக்கிய திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து விழுதுபோல் அரைத்துக் கொதிக்கும் வெல்லநீரில் சேர்த்துக் காய்ச் சவும். இதில் சிறிதளவு 2 தேக்கரண்டி நெய்யையும் சேர்த்துக் கிளறி லேகிய பதம் வரும்பொழுது தேனைக் கலந்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிக் குளிர வைக்கவும். இதனைச் சேமித்து வைத்துக் கொண்டு காலை வேளையில் ஒரு சுண்டைக் காயளவு உண்டு வர வயிற்றுக் கோளாறு, பசியின்மை, வாயில் பித்தநீர் சுரத்தல் போன்ற நோய்கள் குண மாகும். தெளிந்த இஞ்சிச் சாற்றுடன் தேனைக் கலந்து அருந்த இரத்தம் தூய்மையடையும். இஞ்சிக் சாற்றில் சீரகத்தைப் பொடித்துப்போட்டுக் கலந்து காலை, மாலை அருந்த செரிதிறன் அதிகரிக்கும். இஞ்சியை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடிக்கச் சகல வாயுக் கோளாறுகளும் அகலும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு வற்றைச் சம அளவு கலந்து ஆகிய காலை வேளைகளில் அருந்தி வர இளைப்பு, இருமல் நீங்கும். மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் வலி, மாதவிடாய் ஒழுங்கின்றித் தாமதமாதல் முதலிய தொல்லைகளிலிருந்து விடுபட ஒரு துண்டு தோல் நீக்கிய இஞ்சியைத் தட்டி ஒரு டம்ளர் நீரில் போட்டுச் சிறிது நேரம் வேகவைத்து வடித்து, வடிநீருடன் சிறிதளவு தேனைச் சேர்த்துக் கலக்கி நாள்தோறும் உணவுக்குப்பின் அருந்திவர நல்ல குணம் கிடைக்கும். ஒரு சிலருக்குச் சிறுநீர் சரி யாகப் பிரியாமலும் உடலில் வயிறு முதலிய பகுதி களில் இயற்கைக்கு மாறாக நீர் அதிகம் சுரந்தும் பல தொல்லைகள் ஏற்படுவதுண்டு. இதற்கு ஓர் இள நீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாற்றைக் கலந்து அருந்தி வருதல் நல்ல பயனளிக்கும். நன்கு பாடுவோர், உரக்கப் பேசுவோர் ஆகியோருக்குத் தொண்டையில் ஏற்படும் கரகரப்புக்கும். சளி, மூக்கு அழற்சி, சிறுநாக்கு வளர்ச்சி முதலிய தொல்லை களிலிருந்து விடுபடவும்ஒரு துண்டு தூய்மைப்படுத்தப்