708 இஞ்சி (சித்த மருத்துவம்)
708 இஞ்சி (சித்த மருத்துவம்) நீர்க்கசிவோடு இருக்கும். நாளடைவில் மட்டநிலத் தண்டுப் பகுதி முழுவதும் கெட்டுக் குழகுழ என்று மாறும். நோய் மண்ணிலுள்ள பூசணத்தின் மூலம்பரவு கிறது. வடிகால் வசதியில்லாத நிலங்களில் இந்நோய் அதிகமுண்டாகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்த நோயில்லாத நிலமட்டத் தண்டுகளை நடவேண் டும். மட்ட நிலத் தண்டுகளை நடுவதற்கு முன்பு 0.1சத கார்பென்ட்டகிம் கரைசலில் நனைத்து நட வேண்டும். இந்த நோய்க்குச் சில இரகங்களில் ஓரளவே எதிர்ப்புத்திறன் காணப்படுகிறது. இஞ்சியை நிலத் தில் ஊன்றுமுன் குழிகளில் 0.1 சத கார்பெண்டசிம் மருந்துக் கரைசலை ஊற்றுதலும் சிறந்த முறையா கும். இலைப்புள்ளி நோயை ஃபில்லோஸ்டிக்டா ஜிஞ்ஜி பெரி (phyllostica zingiberi) என்னும் பூசணம் உண் டாக்குகிறது. நோய் காரணமாக இலைகளில் வட்ட வடிவம் அல்லது நீள்வட்ட வடிவில் புள்ளிகள் தோன்றும். புள்ளியின் மையம் சாம்பல் கலந்த நிற மாக இருக்கும். புள்ளியைச் சுற்றிக்கருஞ்சிவப்பு நிற வளையம் சூழ்ந்திருக்கும். நோய் தீவிரமாகும்போது பல புள்ளிகள் இலையின் மேல் தோன்றி இலை சுளைக் கருகச் செய்யும். இது மழைக்காலங்களில் அதிக அளவில் தோனறும் நோயாகும். இந்த நோய் பூசண வித்துக்கள் காற்றின் மூலம் பிற இடங்களுக் குப் பாலி நோயை உண்டாக்கும். 15 கட்டுப்படுத்து இலைப்புள்ளி நோயைக் வதற்கு மழைக்காலத்திற்கு முன்பும் பின்பும் நாட்களுக்கு ஒருமுறை என இருமுறையும் 0.25% தாமிர ஆக்சிக்குளோரைடு பூசணக் கொல்லியைச் செடியின்மீது தெளிக்க வேண்டும். சூடோமோனாஸ் சொலனசியாரம் (pseudomonas solanacearun) என்னும் இஞ்சியில் தோன்றும் பேக்டீரியம் வாடல் நோய்க் குக் காரணமாகிறது. இது இந்தியாவில் தமிழ்நாட் டில் முதன் முதலில் தோன்றியது. இதனைக் கேரளா வில் 1978 ஆம் ஆண்டில் கண்-றிந்தனர், இந்த நோய் கொடியதொன்றாக இருந்த போதிலும் உரிய கட்டுப்பாட்டு முறைகள் துவரை கண்டுபிடிக்கப் படவில்லை. கோ.அர்ச்சுனன் நூலோதி 1. Anonymous Handbook of Agriculture, ICAR, New Delhi, 1980. 2. Chattopadhyay. S.B., Diseases of Plants Yield- ing Drugs, Dyes & Spices, ICAR, New Delhi, 1967. 3. Purgeglove. J.W., Tropical Crops, Monocoty- ledons, Vol.2., Longman Group Ltd., London, 1972. இஞ்சி (சித்த மருத்துவம்) இஞ்சி குழந்தைகள் முதல் பெரியோர் வரையில் அனைவரும் பயன்படுத்தக் கூடிய மிக எளிய மருந் துப் பொருளாகும். இதன் மேல்தோலைப் போக்கித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். தூய்மைப் படுத்தப்பட்ட இஞ்சி, சுரசம். சாறு, குடிநீர், சர்பத்து, லேகியம், தைலம் போன்ற பல்வேறு வகை யான மருந்துகள் செய்யப் பயன்படுகிறது. இஞ்சி சுரசம். தோல் சீவிய இஞ்சியை அரைத்து நீரில் கலந்து வடிகட்டி, வடித்த நீரைப் பாத்திரத் துடன் சிறிது நேரம் சாய்த்து வைக்க அடியில் மாவுப்பொருள் படிந்து இருக்கும். இதனை நீக்கி மேலேயுள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே இஞ்சிச் சுரசம் எனப்படும். இத னைத் தனியாகவும், மற்ற மருந்துகளுக்கு அனுபான மாகவும் வழங்கலாம். குழந்தைகளுக்கு உண்டாகும் செரியாமை போன்ற வயிற்று நோய்களைப் போக்க வல்ல கை கண்ட மருந்து. இஞ்சிச்சாறு. இஞ்சியை அரைத்து நீர் கலந்து வடிகட்டிப் பயன்படுத்துவதே இஞ்சிச் சாறு எனப் படும். செரியாக் கழிச்சலுக்கு இஞ்சிச் சாற்றை கொப்பூழ் சுற்றித் தடவி வரலாம். இஞ்சிச் சாறும், வெங்காயச் சாறும் சரிஎடை கலந்து வாந்தி, குமட் டல் இவைகட்குப் பயன்படுத்தலாம். பிறந்த குழந் தைகளுக்குச் செவ்வாப்பு, கருவாப்பு வராமல் தடுக்க கழுதைப் பாலும், இஞ்சிச் சாறு சிறிதும் கலந்து கொடுப்பதுண்டு. இஞ்சிச் சாறு, மாதுளம் பூச்சாறு, தேன் சம எடை கலந்து வேளைக்கு 30 மி.லி. வீதம் சாப்பிட்டு வர ஈளை, இருமல் போன்றவை குண மாகும். இஞ்சித் தேனூறல். இஞ்சியைக் கீற்றுக்களாக நறுக்கித் தேனில் ஊற வைத்து நாள்தோறும் காலை யில் உண்டுவர நரை, திரை, மூப்புகளற்று வாழ லாம். இது ஒரு காயகற்ப முறையாகும். இஞ்சிச் சாறு தேன் சேர்த்துப் பாகு செய்து குங்குமப்பூ, ஏலம், சாதிக்காய், கிராம்பு இவற்றைப் பொடி செய்து தூவிக் கிளறி எடுத்து, நன்றாகச் தூய்மை செய்த கண்ணாடி அல்லது பீங்கானில் வைத்துக் கொண்டு தேவையானபோது ஒன்று அல் லது இரண்டு சுண்டையளவு கொடுக்க வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், வாந்தி முதலிய நோய்கள் நீங்கும். இஞ்சிக் குடிநீர். இஞ்சி,திரிகடுகு, ஏலம், அதி மதுரம், சீரகம், சந்தனத்தூள் இவை சரிஎடை சேர்த்து 8 பங்கு நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து ஆகச் சுண்ட வைத்து 5,6 வேளை உண்ணப் பித்தம் நீங்கும். இஞ்சி எண்ணெய், இஞ்சி, சிவதை, சீந்தில், நில வாகை, கொடிவேலி, கழற்சிக்கொடி, முடக்கொத் தான் சமூலம், பூண்டு, திரிகடுகு இவை வகைக்கு 35 கிராம் எடுத்து அரைத்து 500 மிலி. ஆற்றாமணக்கு நெய்யில் கலக்கிக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு ஓர்