710 இட்ரியம்
710 இட்ரியம் II III வடிவிலும் மிகவும் தெளிவற்ற குறுஇணை வடிவப் பக்கக் (010) கனிமப் பிளவு கொண்டும் காணப்படு கின்றன. இதன் வேதியியல் உட்கூறு R R, (Ta, Nb), O1 4H, O என்பதாகும். இதில் RII என் எர்பியத்தையும், III என்பது பது இரும்பையும், கால்சியத்தையும் R இட்ரியத்தையும், சீரியத்தையும் குறிக்கும். இதில் நீர் துணைப்பொருளாகக் காணப் படும். இக்கனிமம் குறை சங்கு முறிவையும் (concoidal fraction) குறை உலோகம் முதல் பளிங்கு, பிசின் வரையிலான பெற்றுள்ளது. மிளிர்வுகளையும் படிகங்கள் கருமை, பழுப்பு,மஞ்சள் நிறமுடையன வாகவும், இதன் உராய்வுத்துகள்கள் சாம்பல் நிறம் முதல் நிறமற்றனவாயும் காணப்படுகின்றன. இக்கனி மத்தின் கடினத் தன்மை 5 முதல் 5.5 வரையிலும் அடர்த்தி 5.5 முதல் 5.9 வரையிலும் மாறுபட்டுக் காணப்படும். இது உருகாத் தன்மையுடையது. பரவல். சுவீடனில் இட்டர்பை (Ytterby) என்ற இடத்திலும், சிகப்பு ஃபெல்சுபார்களுடன் (red- feldspar) ஸ்ட்டாக்கோம்பின் வடகிழக்குப் பகுதி களிலும் கொப்பர்பர்கில் (Kopparberg), ஃபாலான் (Falun) என்ற இடத்திலும் காணப்படுகிறது. பயன். அதிக அளவில் கிடைக்கப் பெற்றால் இட்ரியம் (Y) சீரியம் (ce) போன்ற கதிரியக் கனிமங் களின் முக்கிய தாதுவாகும். நூலோதி சு. ச. 1. Ford, W. E., Dona's Text Book of Mineralogy. Wiley Eastern Limited, New Delhi, 1985. 2. Winchell, A. N.. Winchell, H. I., Elements of Optical Mineralogy, Wiley Eastern Private Limlted, New Delhi, 1967. இட்ரியம் தனிம வரிசை அட்டவணையில் மூன்றாம் தொகுதி யில் உள்ள ஸ்காண்டியம், லாந்தனம் ஆகிய உலோ கங்களுக்கு இடையே, இட்ரியம் (yttrium) அமைந் துள்ளது. இதன் குறியீடு Y. அணு எண் 39; அணு எடை 88.9. கி.பி. 1794ஆம் ஆண்டு கடோலின் (I. Gadolin) என்பவரால், சுவீடன் நாட்டிலுள்ள இட்டர்பியில் (Ytterby) கிடைத்த கடோலினைட் கனிமத்திலிருந்து இட்ரியா (yttria) எனப்படும் ஆக்சைடு பெறப்பட் டது. இதிலிருந்து இட்ரியம், ஸ்காண்டியம், டெர் பியம் முதலிய பல தனிமங்கள் பிரித்தெடுக்கப் பட்டன. அயனிப் பரிமாற்ற ரெசின்களின் மூலம் தற்போது இத்தனிமங்கள் பிரித்தெடுக்கப்படுகின் றன. Hla 314 Li Be 11 12 0 2 Ilia IVa Va Vla Vilal He 5 6 7 8 9 10 B C N 0 F He 13 14 15 16 17 18 Na Mg llb IVb Vb Vib ViibVill lb llb Al Si P S Cl Ar K 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 Ca Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge As Se Br Kr 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Rb Sr Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb Te Xe 55 56 57 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 Cs Ba La Hf Ta W Re Os Ir Pt Au Hg Tl Pb Bi Po At Rn 87 88 89 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 Fr Ra Ac R1 Ha T லாந்தனைடு [58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 Gans Ca Pr Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er Tm Yb Lu 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 Gam Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lr இட்ரியம் சிறிதளவு இட்ரியம், மோனசைட்டு (கேரளாவில் பெருமளவு கிடைக்கும் தோரிய பாஸ்பேட்டு கனி மம்), யூசெனைட்டு (usonite), செனோடைம் (xeno- time) கனிமங்களிலும் காணப்படுகிறது. பூமியின் மேற்பரப்பில், ஈயத்திற்கும் சற்று அதிகமாகவே இட்ரியம் உள்ளது. (28 ppm - ஒரு மில்லியனில் 28 பாகம்). இட்ரியம் ஃபுளுரைடு (YFa), கால்சியம் உலோ கத்தால் குறைக்கப் படும்போது, வெள்ளியை ஒத்த தோற்றமுடைய உலோக இட்ரியம் உருவாகிறது. அதன் உருகுநிலை 1796 கெ.; அடர்த்தி எண் 4. 457; இணைதிறன் 3. அமிலங்களில், இட்ரியம் ஆக்சைடு (Y,O,) கரை யும்போது, நிறமற்ற உப்புகள் உருவாகின்றன. பயன்கள். ஐரோப்பியம் கலந்துள்ள இட்ரியத் தின் மீது, எலெக்ட்ரான்கள் படும்போது, மிகுந்த சிவப்பு ஒளி உண்டாகிறது. எனவே, இக்கலவை, தொலைக்காட்சித் (television) திரையின் உட்புறத் தில் பூசப்படுகிறது. இட்ரியம் இருமபு ஆக்சைடு (Y, Fe, O,2), நுண் அலைகளை (microwaves) நன்கு கடத்துவதால் ரேடார் (radar) போன்ற தகவல் சேக பயன்படுகிறது. ரிப்புக் கருவிகளில் கதிர்வீசும் தன்மையுடைய இட்ரிய ஓரிடத்தனிமங்கள் (isotopes) புற்றுநோயைக் குணப்படுத்த உதவுகின்றன. மேலும் அணு உலைகள் அமைப்பதிலும் இட்ரியம் பயன் படும் வாய்ப்பு உள்ளது. நெ.சு.ஞானப்பிரகாசம்