உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/767

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடமாறிய விரை 743

விரைகளின் கீழ் இறக்கம், எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் விரைகள் வயிற்றிலிருந்து கீழிறங்கு கின்றன என்பது தெளிவாக அறிய வில்லை என்றா லும் கீழ்க்காணும் காரணங்களைச் சாத்தியக் கூறு களாகக் கொள்ளலாம். கருவின் வளர்ச்சியின் போது குடல் பாகங்கள் முதலில் வயிற்றுக்கு வெளியில் வளர்ச்சியடைந்த பிறகு சிறிது சிறிதாக வயிற்றுக்குள் புகுந்து கொள் கின்றன. இவ்வாறு குடல் உட்புகும்போது வயிற்றில் ஏற்படும் அழுத்தத்தினால் விரைகள் வயிற்றிலிருந்து கீழே தள்ளப்படுகின்றன. கீழே தள்ளப்படும் விரை கள் ஒரு குறிப்பிட்ட இலக்கை, அதாவது விரைப் பையை மட்டும், நோக்கி நகருவதற்கு ஏதுவாக குபர்னாகுலம் (gubernaculum) என்னும் ஒரு பாதை போன்ற சதை அமைப்பு சுருவில் காணப்படுகிறது. இச்சதை அமைப்பு விரைகளின் கீழ் முனையிலிருந்து விரைப்பையின் அடிப்பாகம் வரை பரவி இருக் கிறது. இது சற்றே சுருங்கி விரியும் தன்மையுடையது. எனவே, கீழே தள்ளப்படும் விரைகள் இப்பாதை வழியாக மட்டும் சரிந்து வர முடிகிறது. கருவின் வேறுபட்ட விகித வளர்ச்சி அதனை நீள வாட்டத்தில் தலையை நோக்கி விரைவாக வளர வைப்பதால் தொடக்கத்தில் வயிற்றிலிருந்து விரைகள் கீழ் நோக்கிச் சரிந்துவிடுகின்றன. தாயின் கருப்பை நச்சிலிருந்து (placenta) சுரக் கும் கோரியானிக் கொனடோ ட்ரோபின் (choriomic gonodotropin) என்ற நாளமில்லாச் சுரப்பி (harmone) விரைகளின் தோற்றத்திற்கும் முழுமையான வளர்ச் சிக்கும் இன்றியமையாததாகும். இச் சுரப்பே விரை களின் கீழிறக்கததிற்கும் காரணமாகலாம். எனச் சிலரால் நம்பப்படுகிறது. இடம் மாறிய விரைகளைப் பரிசோதித்துப் பார்க்கும்போது அவை அமைப் பிலும், வளர்ச்சியிலும் முழுமை பெறாத நிலையில் (imperfect development) இருப்பது தெரிகின்றது. ஆகவே கோரியானிக் கொனடோ ட்ரோபின் சுரப் பியின் ஆக்க சக்தியே விரைகளின் வளர்ச்சிக்கும், கீழிறக்கத்திற்கும் மூலகாரணமென நம்ப இடமிருக் கிறது. மேற்கூறிய நான்கு காரணங்களுமே ஒன்றாகச் சேர்ந்து கூட்டாகச் செயல்படுவதால்தான் விரைகள் கீழிறங்குகின்றன என்பதே இன்றைய நிலையில் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றன. இயற்கையின் சில விந்தைகள். விரைகள் வயிற்றி னுள்ளே தோன்றி விரைப்பைக்குள் இறங்கும் செயல் மனித இனத்திற்கு மட்டும் உரியதன்று, மற்ற உயிரினங்களிலும் இவ்வாறே நடைபெறுகிறது. ஆனால் மனித இனத்தில் விரைகள் விரைப்பையை குறிப்பிட்ட வயதுக்குள் அடையாவிட்டால் அல் வரைகளில் விந்து அணுக்கள் உற்பத்தியாவதில்லை. யானை, திமிங்கிலம் போன்ற மிருகங்களில் விரைகள் இடமாறிய விரை 743 வயிற்றினுள்ளேயே தங்கிவிடுகின்றன. கீழிறங்கி விரைப்பையை அடைவதில்லை. என்றாலும் இவ் விலங்குகளின் குகளின் விரைகள் விந்தணுக்களை உண்டு பண்ணுகின்றன. மற்ற சில விலங்குகளில் விரைகள் வயிற்றிலிருந்து விரைப்பைக்கு இன்விருத்தி ஆகும் பருவத்தில் மட்டும்தான் இறங்குகின்றன. மற்ற பருவங்களில் திரும்பவும் வயிற்றுக்குள் சென்று விடுகின்றன. விரைப்பையும் அதன் பணிகளும். விரைப்பை தன்னிச்சையாகச் (autonomous) சுருங்கி விரியும் தன்மை பெற்றுள்ளது. தோலுக்கடியில் இருக்கும் டார்டஸ் (dartos) என்ற தசையே இதற்குக் காரணம். விரைகள் விந்தணுக்களை உண்டுபண்ண வேண்டும் என்றால் அவற்றின் வெப்பநிலை உடலின் வெப்ப நிலையைவிடச் சற்றுக் குறைவாக ஒரே சீரான நிலையில் இருக்க வேண்டும். ஆகவே, புறத் தட்பவெப்ப நிலை குளிராக இருந்தால் விரைப்பை கருங்கி விரைகளை வயிற்றிற்கு வெகு அருகில் கொண்டு சென்று வயிற்றின் வெப்பத்தினால் அவை வெது வெதுப்பாக இருக்குமாறு வைத்துக் கொள் கின்றது. அது போலவே வெளி வெப்பம் அதிகமாக இருக்கும்போது விரைப்பை விரிந்து, நீண்டு, தொங்கி, விரைகள் வயிற்றின் வெப்பத்தினால் பாதிக்கப்படா வண்ணம் வயிற்றிலிருந்து தூரத்தில் தொங்குமாறு அமைத்துவிடுகிறது. இடம் மாறிய விரைகள் விரைப் பையை அடையாததால் இந்தத் தட்பவெப்பச் சம நிலை அடைய முடியாமல் விந்து அணுக்கள் உற் பத்தி செய்யும் சக்தியை இழந்துவிடுகின்றன. இடம் மாறிய விரைகளின் வகைகள். விரைகளின் கீழிறக்கத்தில் ஏற்படும் தடைகளுக்குக் காரணம் அவற்றின் வளர்ச்சியிலும் கருவின்பொது வளர்ச்சி யிலும் ஏற்படும் குழப்பங்களே. இடம் மாறிய விரை கள் உள்ளவர்களில் 15 விழுக்காடு சிறுநீரகங் களிலும் குடல் அமைப்பிலும் பிறவியிலேயே குறை பாடுடையவர்களாகக் காணப்படுகின்றனர். அவ் வாறே மற்றும் சிலர் நாளமில்லாச் சுரப்பிகளில் குறைபாடுடையவர்களாகவும் உள்ளனர். மற்ற பிறப் புக் குறைபாடுகளும் காணப்படுவது இயல்பு. இடம் மாறிய விரைகளில் கீழ்க்காணும் பலவகை உண்டு. காலம் கடந்த விரை இறக்கம். நான்கு விழுக்காடு பிறப்புகளில் எந்தவிதக் குறைபாடும் இல்லாமல் இயற்கையாகவே குழந்தை பிறந்திருந்தால் கூட விரைகளின் இறக்கம் முழுமை அடைவதில்லை. ஆனால் குழந்தைக்கு வயது ஒரு மாதம் முடிவதற் குள் தாமாகவே விரைகள் விரைப்பையை அடைந்து விடுகின்றன. இம்மாதிரியான நிகழ்ச்சி குறைமாதப் பிறப்புகளில் மிகையாகக் காணப்படுகின்றது. இந்த வகை இடம் மாறிய விரைகள் தாமாகவே ஒரு மாதத்திற்குள் விரைப்பையை அடைந்துவிடுவதால் தனை ஒரு குறைபாடாகக் கருத முடியாது.