உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/771

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடமாறு தோற்றம்‌ 747

மிக அதிகப் பிழை 0.75 நொடி உடைய விண் மீன், ஆல்பா சென்ட்டாரி (alpha centauri) என்றும், 5ஆவது பொலிவுத்தரம் உள்ள விண்மீன்களின் சராசரித் தோற்றப்பிழை 0.018 என்றும், 10ஆவது பொலிவுத்தரம் உள்ள விண்மீன்களின் சராசரித் தோற்றப் பிழை 0.0027 பிழை 0.0027 எனவும் கணக்கிடப் பட்டிருக்கின்றன. நூலோதி ப.க. A.S. Kumaravelu, Astronomy, 2nd Edition, 1967. இடமாறு தோற்றம் ஒரு பொருளை ஓரிடத்திலிருந்து பார்க்கும்போது ஒரு திசையிலும், சற்று வலமாகவோ இடமாகவோ நகர்ந்து நின்று பார்க்கும்போது அது வேறு திசை யிலும் தோன்றும் மாற்றம இடமாறு தோற்றம் (parallax) எனப்படும். நமது இடக் கண்ணை மூடிக் கொண்டு முகத்துக்கு நேரே கை நீளத் தொலைவிற் குக் கையை நகர்த்தி ஒரு விரலை உயர்த்தி அதனைத் தொலைவில் உள்ள ஒரு கம்பம் அல்லது மரத்தோடு நேர்கோட்டில் பொருந்தித் தோன்றும்படிச் செய்த பின்பு தலையையோ, கையையோ நகர்த்தாமல் இடக் கண்ணைத் திறந்து வலக் கண்ணை மூடிப் பார்த் தால் முன்னர் கைவிரலுக்கும் மரத்துக்கும் இருந்த வரிசையொழுங்கு குலைந்து போய் விரல் நகர்ந்து இடம் மாறி விட்டது போல் தோன்றுவதை உணர லாம். விரல் நகர்ந்ததாகத் தோன்றும் தொலை வினையும் நம் இரு கண்களுக்கு இடையே உள்ள தொலைவினையும் அறிந்தால், நம் முகத்திலிருந்து இடமாறு தோற்றம் 747 விரல் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைக் கணக்கிட்டுவிடலாம். இரு கண்கள் கொண்டு அன்றாடம் நாம் பொருள்களை நோக்கும்போது இந்த இடமாறு தோற்ற விளைவினைக் கொண்டே அவை இருக்கும் தொலைவை நம்மால் உணரமுடிகிறது. நில அளவை யில் ஓரிடத்திலிருந்து ஒரு பொருளின் தொலைவை அறிய வேண்டுமானால் அந்த இடத்திற்கு இரு புறங்களிலும் உள்ள இருவேறு இடங்களிலிருந்து அப்பொருளின் தொலைவைக் கணக்கிட்டுப் பின்னர் அதனை அடியாகக் கொண்டு குறிப்பிட்ட அந்த இடத்திலிருந்து அப்பொருளின் தொலைவைக் கணக் கிடுவதுண்டு. புவியின் மேற்பரப்பிலிருந்து நிலா ஒருவருக்குத் தோன்றும் திசை, புவியின் மையத்திலிருந்து அதைப் பார்க்கும் திசைக்கு மாறுபட்டிருக்கும். இவ்விரு திசைகளுக்கும் உள்ள கோண வேறுபாடு (angular difference). நிலாவின் இடமாறு தோற்றம் எனப் படும். b B C A C B படம் 1. இடமாறு தோற்றம் a, b-இடமாறு தோற்றத்தின் கோணங்கள். சந்திரனின் இடமாறு தோற்றம் A புவியின் a,b இடமாறு தோற்றத்தின் கோணங்கள் மேற்பகுதியிலிருந்து நிலாவைக் காணும் இடங்கள் B நிலா. c புவியில் மையம் L ABC நிலாவின் டமாறு தோற்றம் இருக்கும் வாய்பாடு அடிவானத் பொறுத்து நிலா புவியின் மையத்திலிருந்து தொலைவை AC/Sin LABC 676 கொண்டு கணக்கிடலாம். சந்திரன் திலிருந்து எழுந்துள்ள உயரத்தைப் அதன் இடமாறு தோற்றம் மாறுபடும். அடிவானத் தில் நிலா இருக்கும்போது அதன் இடமாறு தோற் றம் பெருமமாக இருக்கும். புவியின் வடிவம் சரி யான உருண்டை வடிவமாக இல்லாததாலும் இட மாறு தோற்ற அளவில் மாற்றங்கள் தோன்றுகின் றன நிலாவின் சராசரி இடமாறு தோற்றம்