உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/777

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடவலச் சமச்சீர்‌ 753

(C.N Yang) ஆகிய இருவரையும் இயற்கையில் வலம், இடம் என்ற இரண்டும் சம அளவில் அமைய வேண் டும் என்ற தன்விளக்க உண்மையைக் (self evident truth) கடுமையாக ஐயுறச் செய்தது. எனவே மென் இடையீட்டுவினைகள் ஒப்புமை அழிவின்மை என் னும் விதிக்கு முரண்படவே செய்கின்றன என லீயும், யாங்கும் எடுத்துரைத்தனர். அவர்களின் கருது கோளைச் சரிபார்ப்பதற்கான சில குறிப்பிட்ட ஆய் வுகளையும் அவர்கள் எடுத்துரைத்தனர். அவ்வாய்வு களுள் முதன்மையானவை + மேசானின் சிதைவும் கோபால் 60 இன் பீட்டாச் சிதைவும் ஆகும். + மேசான் சிதைவு. + + சிதைவு மேன் இடையீட்டு வினைகளின் விளைவாய் நிகழ் கிறது. சிதைவு மியூயான்களும் நியூட்ரினோக்களும் அவற்றின் இயக்கத் திசையினைப் பொறுத்து முன் மதிக்கப்பட்ட சுழற்சித் திசையைப் பெற்றிருக்கக் கூடும் என லீயும், யாங்கும் எடுத்துரைத்தனர். இது உண்மையான இயல்பு மாறா எதிர்பலிப்பு மீறப் படும் என நாம் நிறுவ முற்படுவோம். ஒரு துகளின் சுழற்சியை அதன் நடுவரைத் தளத்தில் (equatorial plane) அதன் இயக்கமாகக் குறிப்பிடுவதாகக் கொள் வோம். அம்முறையில் துகள்கள் சுழலும் கோளங் களாகக் குறிக்கப்படும். லீயும், யாங்கும் + இன் சிதைவு, (படம் 1 a) இல் உள்ளது போலத் தோன் றும் என எடுத்துரைத்தனர், ந +, a ஆகியவற்றின் சுழற்சிகளின் தொகுபயன் தொடக்கத் துகளான பயானின் சுழற்சியான சுழிக்குச் சமமாக வேண்டு டவலச்சமச்சீர் 753 மாதலால் அலை படத்திலுள்ளதைப் போல எதிர்த் திசைகளில் சுழலவேண்டும். படம் (ia), படம் (1a) இன் ஆடிப் பிம்பமாகும். ஆடியில் கோணங்கள் எதிர்ப்போக்காகச்சுழல்வது போலத்தோன்றுவதைக் காணலாம். படம் I (a) இல் காட்டப்பட்டுள்ள நிலை முதன் முதலில் 1957 இல் சைக்ளோட்ரானால் விளைவிக்கப்பட்ட மியூயான்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்டது. படம் 1(b) இல் காட்டப்பட்டுள்ள ஆடிப்பிம்ப ஆய்வு ஒரு போதும் நிகழ்வதில்லை. இவ்வாறாக, ஒப்புமை அழியாமை விதி ஐயத்திற் கிடமின்றி மீறப்பட்டுள்ளது என அறிகிறோம். எனவே, நியூட்ரினோக்கள் எப்போதும் இடஞ் சுழிச் சுழற்சியுடனேயே வெளித்தோன்றுகின்றன. கோபால்ட் -60 இன் பீட்டாச் சிதைவு. வீயும், யாங்கும் கோபால்ட் 60 இன் பீட்டாச் சிதைவு ஆய்வைப் பின்வருமாறு செய்து பார்க்கலாம் என்று கூறினார்கள். அதாவது இருவேறு ஆய்வுக் கலங் களை (ஒன்று மற்றதன் ஆடிப்படிமமாக (படம் 2) இருக்கக்கூடிய) எடுத்துக்கொண்டு ஆய்வுகளின் முடிவை எண்ணியின் (counter) மூலம் காண லாம் என்றார்கள். இவ்வாய்வு, ஒப்புமை அழி வின்மை விதிக்குக் கட்டுப்பட்டால், படத்தில் இரு பக்க எண்ணிகளிலும் ஒரே விதமான எலெக்ட்ரான் எண்ணிக்கை காணப்படும். கோபால்ட் -60 அணுக் கருக்கள் சுழற்சி உடையனவாகையால், அவை சுழலும்போது இயல்பான நிலையில் (normal state உண்மையான சோதனை பிம்பம் 100 Pv எண்ணி ஆடி Co PODS TODD TO அ. எ ர் இன் சிதைவு . ஆ . 7+ இன் சிதைவின் அடிப்பக்கம் அ.க. 3-48 படம் 2. பீட்டாச்சிதைவில் ஒப்புமை அழியாமை விதியின் முரண்பாட்டுச் சோதனை