இடவலம்புரி நடுநிலையாக்கல் 755
இடவலம்புரி நடுநிலையாக்கல் 755 சமச்சீர் உடையன். படம் (C) ஐ நோக்கினால், எலெக்ட்ரான்கள் அணுக் கருச் சுழற்சித் திசைக்கு எதிர்த்திசையில் அதிக அளவில் வெளிப்படு கின்றன என்பது தெரியும். அதன் படிமத்தில். படம் (C'), எலெக்ட்ரான்கள் அணுக்கருச் சுழற்சித் திசையில் அதிக அளவில் வெளிப்படுகின்றன. ஆய் வின் முடிவும்,ஆடி ஆய்வின் முடிவும் வெவ்வேறாக உள்ளன. எனவே, கோபால்ட் - 60 இன் பீட்டாச் சிதைவு ஒப்புமை அழியாமை விதிக்குக் கட்டுப் பட்டதன்று என்பது தெளிவு <> < 0.1* K) <எ.வி.> (மிதவெப்பநிலை 1.20 1.10 1.00 070L 0 1 8 10 12 14 16 காலம் (நிமிடம்) படம் 4 லீ, யாங்கின் கற்பித ஆய்வை, 1957 இல் C.S. வூ என்ற ஆய்வு வல்லுநரும், மற்றவர்களும் ஆய்வுக் கூடத்தில் செய்து பார்த்தார்கள். வூ வின் ஆய்வு முடிவு படம் 4 இல் காட்டப்பட்டுள்ளது. இப்படம், காந்தப் புலத்தின் திசையிலும் (இத்திசையில் அணுக் கருக்களின் சுழற்சி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது) அதன் எதிர்த் திசையிலும் வெளிப்படும் எலெக்ட் ரான் எண்ணிக்கையைக் காட்டுகிறது. இதிலிருந்து கோபால்ட்-60 இன் பீட்டாச் சிதைவில் ஒப்புமை அழியாமை விதி பின்பற்றப்படவில்லை தெளிவுறத் தெரிகிறது. என்று ஒப்புமை அழியாமை விதி மென் இடையீட்டுச் செயல் பங்குபெறும் வினைகளில் மீறப்படலாம் என்று முதன் முதலில் லீயும், யாங்கும் உலகிற்கு எடுத்துரைத்ததால் அவர்களுக்கு 1967 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவ்வாறாகக் கோட்பாட்டியல் வல்லுநர்களும், ஆய்வியல் வல்லுநர்களும் ஒப்புமை அழியாமை விதி இயற்கையின் சில வினைகளில் முரண்பட்டு நிற்கிறது என உறுதியாகக் கூறுகிறார்கள். கே.பிரேமா அ. க. 3-48அ நூலோதி 1. Shcholhin, K.I., Physics of the Micro World Mir Publishers, Moscow, 1974. 2. Lee. T.D., Yang. C.N., Question of Parity, Conservation in Weak Interactions, Physics Rev. 104, 1956. 3. Lee. T.D., Yang. C.N., Parity Non-conservation & a Two Component Theory of the Neutrino, Physics Rev. 105,1957. 4. Wu. C.S., Ambler, Haywood Hopper & Hudson. Experimental Test of Parity Conservation in B, Decay, Physics Rev. 105, 1957. 5. Wu. C.S., Parity Experiments in B Decay, Rev. Mod. Phy. 31, 1959. இடவலம்புரி நடுநிலையாக்கல் ஒளி சுழற்றும் தன்மையுள்ள ஒரு சேர்மத்தை (optically active compound) ஒளிசுழற்றும் தன்மை யற்ற இடவலம்புரி நடுநிலைக் கலவையாக (racemic modification) மாற்றுவதே இடவலம்புரி நடுநிலை யாக்கல் (racemisation) அல்லது சுழிமாய்க் கலவை யாக்கல் எனப்படும். இம்மாற்றத்தின் போது, எடுத் துக்கொண்ட ஒளிசுழற்றும் தன்மை கொண்ட சேர் மத்தின் பாதியளவு அதன் எதிர்பலிப்பு வடிவமாக (enantiomer) மாற்றம் அடைகிறது. இம்மாற்றம் வடிவமாற்றுருவின் (geomelric iso- mer) நிலைப்புத்தன்மை, வெப்பநிலை, பயன்படுத்தும் வேதிக்காரணி ஆகிய பல காரணங்களைப் பொறுத் தது. சில ஒளிசுழற்றும் மாற்றுருக்கள் (isomers} நிலைப்புத் தன்மையற்றவை. அவை இடவலம்புரி நடுநிலைகளாகத்தான் இருக்க முடியும். சில மாற்று ருக்கள் நிலைப்புத் தன்மை அதிகம் உடையவை. இரு எதிர் பலிப்பு வடிவங்களையும் சமஅளவில் கலந்தால் தான் அவற்றை இடவலம்புரி நடுநிலைக் கலவை யாக்க முடியும். சில சேர்மங்களைச் சோடியம் ஹைட் ராக்சைடு, ஹைட்ரோபுரோமிக் அமிலம் போன்ற வேதிவினைப் பொருள்களைக் கொண்டு இடவலம்புரி நடுநிலைக் கலவையாக்கலாம். சில மாற்றுருக்கள் தாமாகவே இடவலம்புரி நடுநிலைக் கலவையாக மாறக்கூடியவை (autoracemisation). எடுத்துக்காட் டாக, d-டார்ட்டாரிக் அமிலத்தை (d-tartaric acid ஒரு மூடப்பட்ட குழாயில் வைத்து வெப்பப்படுத்தும் போது dl- கலவையாக (dl-mixture) மாறுகிறது. 1- லாக்டிக் அமிலத்தை (I-lactic acid) எரிசோடாவு டன் சேர்த்து வெப்பப்படுத்தும் பொழுது dl - கலவை யாகிறது.(+)ஃபினைல்புாராமோ அசெட்டிக் அமி பென்சின் கரைப்பானில் கரைத்துச் லத்தைப்