உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/798

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

774 இடுக்கி இணைப்பு

774 இடுக்கி இணைப்பு M+ NH, CH, CH, CH –CH, NH –M* என்பது ஒரு சாதாரண அணைவுச் சேர்மமே அன்றி, வினைப்பொருள் இடுக்கி அன்று. இணைப்பு வளைய சாதாரண அணைவுச் சேர்மங்களைக் காட்டி லும், இடுக்கி இணைப்புச் சேர்மங்களின் நிலைப்புத் தன்மையே இடுக்கி இணைப்பு விளைவு (chelate effect) எனப்படும். இடுக்கி இணைப்புச் சேர்மங்களில் அணைவிகள் மைய உலோக அயனியுடன் ஒன்றுக்கு மேற்பட்டு வழங்கி அணுக்கள் மூலமாக இணைந் திருப்பதால் இச்சேர்மம் சிதைய ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிணைப்புகள் பிளவுற வேண் டும். ஒவ்வொரு பிணைப்பும் தனித்தனியாகப்பிளவு பட்டால் ஒன்றுபிளவுபட்டு மற்றொன்று பிளவுபடும் முதன் முதலில் உள்ள பிளவுபட்ட பிணைப்பு மீண் டும் தோன்றிவிடும். இவ்வகை விளைவு சாதாரண அணைவுச் சேர்மங்களில் உண்டாக வாய்ப்பு இல்லை என்பதால், இடுக்கி இணைப்புச் சேர்மங்கள் அதிக நிலைப்புத்தன்மை உடையனவாக உள்ளன. அணை விகளில் வழங்கி அணுக்களுக்கு இடைப்பட்ட நீளம் அதிகரிக்கும்போது உடைந்து பிணைப்பு மீண்டும் ஏற்படவில்லை என்பதால் அதிக அணு எண்ணிக் கைகளைக் கொண்ட வளைய இடுக்கி இணைப்புச் சேர்மங்கள் நிலைப்புத்தன்மை குறைந்தவையாக உள்ளன. மைய இடுக்கி இணைப்புச் சேர்மங்களைச் சாதாரண அணைவுச் சேர்மங்களிலிருந்து, நிலைப்புத்தன்மை தவிர வேறு பண்புகளாலும் வேறுபடுத்தலாம். சில இடுக்கி இணைப்புச் சேர்மங்கள் எளிதில் ஆவியா கும் தன்மை உடையவை. குறிப்பாக அசெட்டைல் அசெட்டோனேட்டு எளிதில் ஆவியாகும் தன்மைக்கும் அவ்விடுக்கி இணைப்புச் சேர்மத்தில் உள்ள உலோக அயனியின் அணைவு எண்ணுக்கும் (coor- dination number) உள்ள தொடர்பு ஆராயத்தக்கது. இதில் உள்ள உலோக அயனியின் அணைவு எண் உலோக அயனியின் மின்னேற்றத்திற்குச்சமமாகவோ இருமடங்காகவோ இருக்கும் இடுக்கி இணைப்புச் சேர்மங்கள் எளிதில் ஆவியாகக் கூடியவை. பெரில்லி யம். இடுக்கி இணைப்பில் Be இன் மின்னேற்றம் 2; அணைவு எண் 4; இது 270°C இல் கொதிக்கின்றது. இடுக்கி இணைப்புச் சேர்ம மாற்றுருக்கள் (isomers) குறிப்பாக உயிர் வேதியியல் வல்லுநர் களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. உயிர் வேதியியல் வினைகளில் ஒவ்வொரு மாற்றுருவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எத்திலீன் இரு அமீன் மாற்றியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பயன்கள். இடுக்கி இணைப்புகளில் பங்கேற்கும் போது உலோக அயனிகளின் து வினைப்படுதிறன் வெகுவாக குறைக்கப்படுகின்றது. இப்பண்பு தொழில் வேதியியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எத்தி en en en M en M en en இடுக்கி இணைப்புச் சேர்மங்களின் ஒளிமாற்றுருக்கன் லீன் இருஅமீன் நால்அசெட்டிக் அமிலம் (ethylenete- tracetic acid, EDTA) என்ற ஆறு இடுக்கி, அணைவி கடின நீரை மென்னீராக்கப் பயன்படுகிறது. C-CH, CH,-C 0- N-CH,CH-N 0 C-CH, CH,-C-O- நைட்ரிலோ அசெட்டிக் அமிலம் (nitriloacetic acid NTA) என்ற நான்கிடுக்கி அணைவி மலிவானதோர் அணைவி ஆகும், இது போலவே செயல்படும். CH3COO NCH,COO CH₂COO¯ NTA அயனி கரைசலின் pH போலவே, ஒருகரைசலில் உலோக அயனியின் செறிவு குறிப்பிட்ட அளவில் உலோக அயனி தாங்கல் கரைசல்களைப் (metal-ion-buffer) பயன்படுத்தலாம். காட்டிகளின் (indicator) நிறங்கள் H க்கு ஏற்ப மாறுவது போல் உலோக அயனியின்