778 இடுப்புக்குழிக் குறைபாடு
778 இடுப்புக்குழிக் குறைபாடு கால் நோய்களால் ஏற்படும் குறைபாடுகள். அவை இடுப்பு எலும்புச் சுழற்சி (coxities), ஒன்று அல்லது இரண்டு தொடை எலும்புகள் (femur ) நழு வுதல், ஒரு கால் இழப்பு, ஒரு ஒரு கால் சூம்புதல் முதலியனவாகும். எலும்பு மாறுபட்ட அமைப்பாலும், குழந்தையின் தலைக்கும் தாயின் இடுப்புக் குழிக்கும் உள்ள பொ ருந்தா விகிதத்தாலும் (cephalopelivic disporportion) மகப்பேற்றில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இயல்பான அளவுடைய இடுப்புக் குழியாக இருப்பினும் குழந் தையின் தலை பெரிதாக இருந்தால், அதன் விளை வாகச் சுருங்கிய இடுப்பு எலும்பு போன்றே இருக் கிறது. எனவே தற்காலத்தில் தலையும் இடுப்பும் பொருந்தா விகிதத்தின் கண்ணோட்டத்துடனேயே சுருங்கிய இடுப்பு எலும்பு பற்றிக்கூறப்படுகிறது. படம் 2. குறைபாடு உள்ள இடுப்புக் குழி எலும்பு அ முக்கோண அமைப்பு ஆ. தட்டையான அமைப்பு இந்த வரையறைகள் எதிலும் சேராத மற்றும் புதியனவாகக் கண்டுபிடிக்கப்படும் பல குறைபாடு களும் முதற் பிரிவில் சேர்க்கப்படுகின்றன. கால்டு வெல் (Caldwell) மற்றும் மோலாய் (Moloy) என்ப வர்களும் இடுப்பு எலும்பின் பல்வேறு மாறுதல் களையும் விவரித்துள்ளனர். காணப்படும் அளவு. வைட்டமின் டி பற்றாக் குறை, எலும்பு மிருதுவாதல் முதலிய நோய்கள் அதி கம் காணப்படுபவர்களிடம் இடுப்பு எலும்புச் சுருக் கம் அதிகம் காணப்படுகிறது. காணப்படும் அளவின்படி, சுருங்கிய இடுப்பு எலும்பு வகைகளைக் கீழ்க்காணுமாறு வரிசைப் படுத்தலாம். அவை சுருங்கிய இடுப்பு எலும்பு, சிறிய பெண்தன்மை உடைய (small gynaccoid) தட்டையான இடுப்பு எலும்பு, (platy pelloid) பொது வாகச்சுருங்கிய, தட்டையான இடுப்பு எலும்பு small gynaecoid and platypelloid), ஆண் தன்மை யுடைய புனல் போன்ற இடுப்பு எலும்பு (android), எலும்பு மெதுவாதலால் ஏற்படும், முப்பிரிவு இடுப்பு எலும்பு (tri radiate pelvis) சாய்வாகச் சிதைந்த இடுப்பு (obliquely distorted pelvis) என்பனவாகும். இடுப்பெலும்புச் சுருக்கத்தைக் கண்டறிதல். சுமார் 50 ஆண்டுகளாக மகப்பேற்றுத் துறையில் ஏற்பட்டி ருக்கும் பலவித முன்னேறறங்கள் காரணமாக, இடுப்பு எலும்புச் சுருக்கமும் அதன் விளைவுகளும் வெகுவாகக் குறைந்து இருக்கின்றன. நல்ல சத்துண வும் வாழ்க்கை முறை முன்னேற்றங்களும், சுற்றுப் புறச் சூழ்நிலை மேம்பாடுகளும் காரணமாகச் சில நோய்கள் ஒழிக்கப்பட்டிருப்பதும் இதற்குக் காரணங்களாகும். இருப்பினும் இந்தக் குறைபாடு அறவே நீக்கப்படவில்லை. தற்போது இடுப்பு படம் 3. எலும்பு மிருதுவானதால் ஏற்பட்ட குறைபாடு இடுப்பு எலும்பின் எந்தப் பகுதியிலும் சுருக்கம் இருக்கலாம். விளிம்பு அல்லது நுழைவாயிலின் எல்லா விட்டங்களும் சுருங்கி இருந்தால், பொதுவாக உள்ளீடும் வெளிவாயிலும் சுருங்கியே காணப்படும். வெளிவாயில் மட்டும் சுருங்கி இருப்பது அரிது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விட்டம் சுருங்கி இருக்கலாம். ஒருவிட்டம் சுருங்கி இருப்பின் மற்ற விட்டங்கள் அளவு அதிகமாக இருப்பதால் குறை ஈடு செய்யப்படுகிறது. எனவே இடுப்புக்குழி உள்ளீட்டின் கொள்ளவை நிர்ணயம் செய்வதே முக்கியமாகும். பேறுகாலத்திற்கு முன்பு கீழ்க் காண்பவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும். நோயின் முன் வரலாறு. வைட்டமின் டி பற்றாக் குறை, எலும்பு மிருதுவாதல், இளம்பிள்ளைவாதம், இடுப்பு எலும்பு, காச நோய், இடுப்பு எலும்பு அல்லது கால் எலும்புகள் முறிவு முதலியவற்றில் ஏதேனும் ஏற்பட்டு இருக்கிறதா என்ற விவரம் அறிய வேண்டும். மகப்பேறு நோய்கள். முன்பு ஏற்பட்ட மகப்பேறு களின் தன்மை, சிரமமான மகப்பேறு, இறந்த குழந்தை பிறப்பு, பிறந்த உடன் குழந்தை இறத்தல்