780 இடுப்புக்குழி நோய்
780 இடுப்புக்குழி நோய் படுகின்றன. நோயின் அறிகுறிகளால், ஆரம்ப காலத்தி லேயே தகுந்த மருத்துவரை அணுகிச் சிகிச்சை பெறுவதன் மூலம் பின் விளையும் குறைபாடுகளைத் தவிர்க்க முடியும். இடுப்புக்குழி நோயினைப் பற்றி நன்றாக அறிந்து கொள்வதற்குப் பெண்களின் பிறப்பு உறுப் புக்களைப் பற்றி ஆராய்வோம். படம் 1. இடுப்புக்குழி நோய்க்கான முன் காரணங்கள் பிறப்பு உறுப்புக்களில் அறுவை சிகிச்சை, மகப்பேறு கருச் சிதைவு, கருத்தடையங்கள் பொருத்துதல், நுண் கிருமி எதிர்ப்பு முன்னேற்பாடின்றி அடிக்கடி உள்ளுறுப்புப் பரிசோதனை செய்தல், பிறப்பு உறுப் புக்கள் புற்றுநோய்,பிறப்பு உறுப்புக்களின் அருகில் இருக்கும் உறுப்புகளில் நோய் ஆகியன இந்நோய்க் கான காரணங்களாகும். படம் 2. கிருமிகள் செல்லும் வழிகள் பரவும் முறை, நுண்கிருமிகள் கருப்பையின் வாய்ப் புறம் வழியாகவோ, இரத்தக் குழாய்கள் வழியா கவோ, நிணநீர்க்குழாய்கள் வழியாகவோ, அருகே உறுப்புக்களிலிருந்து நேரடியாகவோ பரவ உள்ள லாம். இந்நோயைப் பரப்புவதில் காசநோய்க் கிருமி களும், பால்வினை நோய்க் கிருமிகளும் முதலிடம் வகிக்கின்றன. உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள். நோய்க்கிருமி கள் பிறப்பு உறுப்புகளைப் புண்ணாக்கிச் சீழ்பிடிக் கச் செய்கின்றன. தொடக்கக் காலத்திலேயே இதனை அறிந்து குணமாக்க முயலாவிட்டால், இந்நோய்க்கிரு மிகள் இந்த உறுப்புகளைப் பாதிப்பதோடு நின்று விடாமல், இரத்தக் குழாய்களின் வழியாக உடல் முழுதும் பரவும். இதனால் மரணம் கூட நேரிட லாம். சில சமயங்களில் இந்த நோய் கடுமையற்ற நிலையில் இருந்துகொண்டு நாளடைவில் நலமின் மையைக் கொடுக்கும். இந்நோய்க்கான அறிகுறிகள், நடுக்கத்துடன் கூடிய கடுமையான காய்ச்சல், அடி வயிற்றில் வலி, துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளை வெளிப்படுதல், வயிற்று வீக்கம், பலவீனம், வாந்தி, தலைவலி, மலட்டுத்தன்மை, மாதவிலக்கில் கோளாறு, சிறுநீரிலும் மலப்போக்கிலும் மாறுதல், இரத்த சோகை, பால் உறவில் பாதிப்புபோன் றவையாகும். மேலும், உடலின் வெப்ப அளவு கூடு தல், அடிவயிற்றில் அழுத்தும்போது மிகுதியான வலி, உள்பரிசோதனையில் வலியுடன் கூடிய கட்டி ஆகி யன ஏற்படும். தீய விளைவுகள், இந்நோயினால் இடுப்புக்குழி யில் சீழ்க்கட்டி, வயிற்று உள்ளுறை அழற்சி, நோய்க் கிருமிகள் இரத்தநாளங்கள் மூலம் உடல் முழுதும் பரவுதல் செப்டிசீமியா, மலட்டுத் தன்மை, கருப் பைக்கு வெளியே கருவளர்தல், மாதவிலக்கில் கோளாறு போன்ற தீய விளைவுகள் ஏற்படும். முன் தடுப்பு முறைகள். தகுந்த சுகாதார முறை களை மாத விலக்கு, மகப்பேறு காலங்களிலும், கருச் சிதைவிற்குப் பிறகும் பின்பற்றுவதால் இந்நோயைத் தவிர்க்கலாம். உள் பரிசோதனைகளையும் நுண் கிருமி எதிர்ப்பு முன்னேற்பாட்டுடன் செய்தல் வேண் டும். நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடக்கக் காலத்திலேயே தகுந்த சிகிச்சை பெறுவதன் மூலம் நோயினால் வரும். கோளாறுகளைத் தவிர்க்கலாம். சிகிச்சை முறைகள். நோயின் கடுமையைப் பொறுத்து நோயாளிகளை உள்நோயாளிகளாகவோ, வெளி நோயாளிகளாகவோ சிகிச்சை கொடுக்கலாம். வெளி நோயாளிகளின் சிகிச்சை முறை. காய்ச்சல் 38.5° செ. முதல் 39° செ . இருந்தால், நோயினை உண்டாக்கும் நுண் கிருமிகளுக்கேற்ற நுண்ணுயிர்க் கொல்லிகளைத் தகுந்த அளவில் தகுந்த காலம்