782 இடுப்புக் குழியளவு நிர்ணயம்
782இடுப்புக் குழியளவு நிர்ணயம் அளவாகும். து சாதாரணமாக 20 செ.மீ. இருக் கும். தொடை எலும்பு பெரிய முண்டு இடை விட்டம். (intertlochantelic diameter). இது இரு பெரிய முண் டுக்கும் இடைப்பட்ட அகலமாகும். இது 31 செ.மீ. இருக்கும். இந்த நேரிடையல்லாத அளவு முறைகள் சரியான விவரங்களைத் தருவதில்லை. இவை தற் போது பயன்படுத்தப்படுவதில்லை. கீழ்க்காணும் மாற்றியமைக்கப்பட்ட அளவு முறைகள், மிகவும் பயனுடைய விவரங்களைத் தருகின்றன. இரு இஸ்கிய விட்டம் (bilschial diameter). ஜார் சாஸ் (jarchos) அல்லது தாமஸ் இடுக்கியால் இதை அளக்கலாம். இது முண்டு இடைவிட்டம் (inter tuberous diameter) என்றும் அழைக்கப்படுகிறது. இரு இஸ்கிய முண்டுகளின் (ischial tuberosity) உள் பக்கங்களுக்கு இடைப்பட்ட அளவு 8செ.மீ. அல்லது அதற்கு மேற்பட்ட அளவு சரியானதென்று கருதப் படுகிறது. இடுப்புக் குழி வெளிவாயில் பின்பிற நேர்விட்டம் (posterior agittal diameter of the pelvic outlet) இது இரு இஸ்கிய முண்டுகளுக்கும் இடைப்பட்ட நேர்கோட்டின் மையப்புள்ளிக்கும், சேக்ர எலும்பின் முனையின் வெளிப்புறத்துக்கும் உள்ள அளவாகும். சாதாரணமாக இது 7 செ.மீ. இருக்கும். டம் இடுப்புக் குழி நுழைவாயிலின் கோணக் கூட்டு விட் Lu (diagonal conjugate of the pelvic inlet). இடுப்பு முன் எலும்பு இணைப்பின் கீழ் விளிம்பின் உட்புறத்திற்கும், சேக்ர முண்டிற்கும் இடைப்பட்ட அளவாகும். 11.5 செ.மீ அல்லது அதற்கு அதிக மான அளவு இயற்கையாகக் கருதப்படுகிறது. உண்மை இடுப்புக் குழிக்கு (true pelvis) பல தளங் களில் அளவுகள் எடுக்கப்படுகின்றன. அவற்றிற்கான தளங்கள் இடுப்புக் குழி நுழைவாயில் தளம், இடுப் புக் குழி வெளி வாயில் தளம், உள்ளீட்டின் மிகப் பெரிய அளவின் தளம், உள்ளீட்டின் மிகச் சிறிய அளவின் தளம் முதலியனவாகும். இடுப்புக் குழி நுழைவாயில். இதன் அளவுகள் மகப்பேற்றுக்கு மிகவும் முக்கியமானவை. 1. மகப்பேற்றுக்கூட்டு (obstetrical conjugate என்பது இவற்றுள் மிகவும் முக்கியமானது. இது சேக்ர முண்டிற்கும் இடுப்பு முன் எலும்பு இணைப் பின் பின்பக்கத்தின் உச்சிக்கும் இடையிலுள்ள அள வாகும். இது சுமார் 10 செ.மீ. இருக்கும். 2. உடற்கூறு முறைக் கூட்டு (anatomical conju- gate or conjugate vera). இது சேக்ர முண்டிற்கும் இடுப்பு முன் எலும்பு இணைப்பின் உட்பகுதியின் மேல் பாகத்திற்கும் இடைப்பட்ட அளவாகும். 3. கோணக் கூட்டு (diagonal conjugate). இது சேக்ர முண்டிற்கும் இடுப்பு முன் எலும்பு வளை வின் சிகரத்திற்கும் இடைப்பட்ட தூரமாகும். 4.உண்மைக்கூட்டு (true conjugate). இதன் அள வைக் கணிப்பதற்குக் குறுக்குக் கூட்டு மிகவும் உப யோகமாக இருக்கிறது. குறுக்குக் கூட்டிலிருந்து 2 செ.மீ. கழித்தால், உண்மைக் கூட்டின் அளவு கிடைக்கும். இடுப்பு முன் எலும்பு இணைப்பின் சாய்வு தடிப்பு, உயரம் ஆகியவற்றால் ஏற்படும் மாறுபாடுகள், இந்தக் கணக்கீட்டால் குறையும். மேல் தளத்தில் எடுக்கக் கூடிய. மற்ற அளவுகள் 1. குறுக்குவிட்டம் (transverse diameter). இது இந்தத் தளத்தின் மிக அதிகமான அகலமாகும். நீண்ட முடிவுப் பகுதியின் (linea terminalis) மேல், மிக அதிக இடைவெளியில் வைக்கப்படும் இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்டதாகும். இது சாதாரண மாக 13.5 செ.மீ. இருக்கும். 2. சாய்வு விட்டம், வலம் மற்றும் இடம் (oblique diameter left and right). இடுப்புக் குழி எலும் பின் ஒரு பக்க சேக்ர இலிய மூட்டிலிருந்து எதிர்ப் புறமுள்ள இலியோ பெக்டினியல் தடிப்பு வரை இது அளக்கப்படுகிறது. ஒன்று, இரண்டு என்றும் இலை முறையே குறிப்பிடப்படும். ஒன்று அல்லது வலம் எனப்படுவது வலப்புறச் சேக்ர இலிய மூட்டிலிருந் தும், இரண்டு அல்லது இடம் என்பது இடப்புறச் சேக்ர மூட்டிலிருந்தும் அளக்கப்படும். இவை 12,75 செ.மீ. இருக்கும். இடுப்புக் குழி வெளிவாயிலின் தனங்கள். இங்கு மூன்று விட்டங்கள் கணக்கிடப்படுகின்றன. அவை முன்பின் விட்டம் (antero posterior diameter), குறுக்குவிட்டம் (transverse diameter) பின் நேர் விட்டம் பேறு காலத்தில், காக்சிஸ்ஸ் எலும்பு வளையக் கூடியதாக இருப்பதால், அது பின்னோக்கி நகர்ந்து முன் பின் விட்டம் 2.2.5 செ.மீ. வரை அதி கரிக்க வாய்ப்பு இருக்கிறது. இடுப்புக்குழி உள்ளீடு அளவுகள் (measurements of cavity of the pelvis). உள்ளீட்டில் பல தளங்கள் இருப்பினும், மிக அதிக மற்றும் மிகக் குறைந்த இடுப்புக் குழி அளவுகள் (greatest and least pelvic dimensions) இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. உள் அளவுகளை இரண்டு முறைகளால் அளக்க லாம். அவை, கருவிகளைக் கொண்டு அளப்பது, புணர்வாய்ச் சோதனை (vaginal examination) என் பனவாகும். கருவிகளால் அளப்பதில் சிரமங்கள் இருப்ப தாலும், அவை துல்லியமாக அளப்பதில்லை என்ப தாலும், பல்வேறு கருவிகள் இருந்தபோதும் அவை பயன்படுத்தப்படுவதில்லை. இருந்தாலும் ஒரிரு தளங் களில் இந்த அளவுகளைக் கீழே காணலாம்.