உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/816

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

792 இடுப்பெலும்புக்‌ குழியும்‌ பொருந்தாக்‌ கபாலமும்‌

792 இடுப்பெலும்புக் குழியும் பொருந்தாக் கபாலமும் இடுப்பெலும்புக் குழியும், பொருந்தாக்கபாலமும் இடுப்பெலும்புக்கூடு, இலியம், இஸ்க்கியம், இடுப்பு முன்எலும்பு என்ற மூன்று எலும்புகளாலும், சேகரம், காக்சிக்ஸ் என்ற முதுகெலும்பின் கீழ்ப்பகுதியாலும் ஆனது. இடுப்பெலும்பு அறை தன்னகத்தே சில முக்கிய உள்ளுறுப்புக்களை வைத்துப் பாதுகாக் கிறது. பெண்ணின் இடுப்பெலும்பு அறையுள் கருப்பை, சிறுநீர்ப்பை ஆகியவை இருக்கின்றன. பெண்ணின் இடுப்பெலும்புக் கூடும் ஆணின் இடுப் பெலும்புக் கூடும் உருவ அமைப்பில் வேறுபடுகின் றன. அந்த வேறுபாடுதான் குழந்தைப் பேற்றிற்கு ஏதுவான இடவசதியை அளிக்கிறது. ஆணின் இடுப் பெலும்பு தட்டையாகவும் வளைவு குறைவாகவும் இருக்கிறது. மேலும் அது கனமாகவும், திடமான விளிம்புகளுடையதாகவும் இருப்பதால் இடுப் பெலும்பு அறையின் உள் அளவுகள் குறைவாக இருக் கின்றன. ஆனால் பெண்ணின் எலும்புகள் மெல்லிய விளிம்புகளுடன், வளைந்திருப்பதால் இடுப்பெலும்பு அறையின் உள் அளவுகள் அதிகமாகவும் பிள்ளைப் பேற்றுக்கேற்றவாறும் இருக்கின்றன. ஆனால் கருவிலுள்ள குழந்தையின் தலைக்கும் தாயின் இடுப்பறைக்கும் பொருந்தாமை இருந்தால் அது ஒரு முக்கிய குறைபாடாகும். முதல் மகப்பேறு இயல்பான மகப்பேறாக வேண்டுமென்றால் குழந் தையின் தலை தாயின் இடுப்பறைக்குள் 38 வாரங் களுக்குள் தடங்கல் இல்லாமல் பொருந்தி இருக்க வேண்டும். பல குழந்தைகள் பெற்ற பெண்களுக்குப் பேறுகாலம் வருவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பே குழந்தையின் தலை தாயின் இடுப்பெலும்புக் (pelvic cavity) குகைக்குள் நுழைந்துவிடும். குழந் தையின் தலையின் நிலை வேறுபாட்டுக்குத் தகுந் தாற்போல், குழந்தைக் கபாலத்தின் மிக அதிகமான குறுக்குவெட்டு நீளமும் தாயின் இடுப்பறையின் கொள்ளளவும் ஒன்றுக்கொன்று பொருந்தி இருத்தல் அவசியமாகும். தாயின் இடுப்பறை சீராகவும் குழந் தையின் தலை பெரிதாகவும் இருந்தாலோ குழந்தை யின் தலை சீராகவும், தாயின் இடுப்பறை குறுகிய தாகவும் இருந்தாலோ இவ்விரு நிலைகளுமே ஏற்பட்டாலோ பொருந்தாமை ஏற்படலாம். தாயின் பேறுகால ஆய்வின்பொழுது, இப் பொருந்தாமையைக் கண்டுபிடிப்பது என்பது இன்றி யமையாததாகும். தாய்மை 37 ஆவது வாரம் முடி வடைந்த முதல் மகப் பேறுடையவர்க்கும் முந்திய பேறு காலங்களில் கஷ்டப்பட்ட தாய்மார்களுக்கும், புணர்வாய் வழி ஆய்வுமூலம் இப்பொருந்தாமையைக் கண்டுபிடித்தல் வேண்டும். சுமார் 55 விழுக்காடு பெண்களின் இடுப்பெலும் புக் கூடு பெண் இன இடுப்புத்தோற்றம் கொண்டது. இவ்விடுப்பெலும்பின் உள்வாய் வட்டமானதோற்றம் கொண்டது. இடுப்பெலும்பின் வெளிவாய் அகன்று இருக்கும். இடுப்பெலும்பு அமைப்பு மாறுபட்டிருந்தாலும் இப்பொருந்தாமை வரக்கூடும். எடுத்துக்காட்டாக, எலும்பு மென்மை (எலும்புருக்கி நோய்), குழந்தைக் கணை, இளம்பிள்ளைவாதம், தொடை எலும்பின் மாறுபட்ட நிலை, இடுப்பு மூட்டு பிறவியிலேயே நழுவியிருத்தல், முதுகெலும்புக் குறைகள் போன்ற வைகளால் இடுப்பெலும்பின் அமைப்பு மாறு படலாம் முதுகெலும்பு பக்கவாட்டில் வளைந்திருத்தல் முதுகெலும்பு பின் பக்கமாக வளைந்திருத்தல் பின் கூனல், இருபக்கத் திரிக இணைப்புப்பரப்பு வளர்ச்சி யின்மை, ஒரு பக்கத் திரிக இணைப்புப் பரப்பு வளர்ச் சியின்மை ஆகியவை முதுகெலும்புக் குறைகளாகும். இறுதியில் கூறிய இரண்டும் மிகவும் அரியவை. இறு தியாக இடுப்பெலும்பில் முறிவு ஏற்பட்டாலும் கட்டிகள் ஏற்பட்டாலும் இப் பொருந்தாமை ஏற்படலாம். அ. ser 300 படம்1 அ இடுப்பெலும்பு நேகள்ஸ் இடுப்பெலுர்பு ஆ. ராபர்ட்ஸ் இடுப்பெலும்பின் வகைகளை கால்டுவெல் முறையில் வகைப்படுத்தல். பெண் இன இடுப்பு, ஆண் இன இடுப்பு, மனிதக் குரங்கு போன்ற இடுப்பு, தட்டை இடுப்பு என நான்கு வகைப்படும். சுமார் 20 விழுக்காடு பெண்களின் இடுப்பறை ஆண் இன இடுப்புத் தோற்றம் கொண்டது. (இப் பெண்கள் பொதுவாக ஒழுங்கிணையா மகப்பேற்று உடற்கூறு ஒருங்கோட்டம் பெற்றவர்களாக இருப் பார்கள்). இவர்களின் இடுப்பு விளிம்பின் உள்வாய் இதயம் போன்ற தோற்றம் கொண்டது. திரிக முனைப்பு எளிதாகத் தொடும் தொலைவில் இருக்கும்