உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 இதயம்‌ உருவாகி வளர்தல்‌

156 இதயம் உருவாகி வளர்தல் நூலோதி. Jamescoverer, Cunningham's Mamual of Practical Anatomy, Vol. 11, 12th Edition, Oxford University Press, London. இதயம் உருவாகி வளர்தல் முதுகெலும்புடைய விலங்குகளின் கருவளர்ச்சியின் போது இரத்த ஓட்ட மண்டலம் இரு நிலைகளில் உருவாகிறது. அவை முறையே செயல்படு முந்தைய நிலை (prefunctional phase), செயல்படு நிலை (functional phase ) எனப்படுகின்றன. செயல் படுதற்கு முந்தைய நிலையில் இதயமும், குறிப்பாக இரத்தக் குழல்களும், இரத்த ஓட்டம் தொடங்கு வதற்குத் தேவையான மற்ற அமைப்புகளும் உருவா கின்றன. கருவளர்ச்சியின் தொடக்கத்திலேயே இதய உருவாக்கத்தில் இடம்பெறும் பகுதிகள் நிர்ணயிக்கப் படுகின்றன. வளர்கருவின் தொண்டைப் பகுதிப் பக்கங்களில் காணப்படும் மருங்கு இடைப்படையின் (lateral mesoderm) கீழ்ப்பகுதியிலிருந்துதான் இதயம் உரு வாகிறது. மருங்கு இடைப்படையின் கீழ்ப்பகுதியி லிருந்து தோன்றிய இடைப்படைச் செல்திரள்கள் (mesencyme cells) தொண்டையின் கீழ்ப்பக்கத்தில் காணப்படுகின்றன. இந்த இடைப்படைச் செல்திரள் களின் நடுவில் ஒரு குழி உண்டாகிறது. பின்னர் இச்செல்கள் தட்டையான உருவம் பெற்று இக்குழிக் குச் சுவர்போல் அமைகின்றன, தொண்டையின் கீழேஒரு நீளவாட்டக் குவியலாக இருந்த செல்திரளில் இந்த உட்குழி ஏற்பட்டதால், அங்கு ஒரு நீள வாட்டக் குழாய் தோன்றிவிட்டது. இக்குழாய்க்கு உள்ளிதயக் குழாய் (endocardial tube) என்று பெயர். தட்டையான செல்கள் இணைந்து உண்டான இச் சுவர் நிறையுயிரியில் இதயத்தின் உள்படலமாக (endothelium) அமைகிறது; இதற்கு உள்இதயப்பட லம் என்று பெயர். இதே வேளையில் இரு பக்கத்து மருங்கு இடைப்படைகளும் தொண்டைக்குக் கீழே இணைகின்றன; இந்த இணைவு உள் இதயக் குழாய்க்குக் கீழே நடைபெறுகிறது. இரண்டு பக்கத்து உள்ளுறுப்புச் சார்ந்த (visceral) இடைப் படைகளும் உள்ளிதயக் குழாயைச் சூழ்ந்து கொண்டு அதற்கு மேல் இணைகின்றன. இவ்வாறு இடைப்படை உள்ளிதயக் குழாய்க்கு மேலும் கீழும் இணைவதால் இக்குழாய்க்கு மேலும் கீழும் இதயத் தாங்கிகள் (dorsal ventral mesocardium) உண்டா கின்றன. கீழ் இதயத் தாங்கி விரைவில் நலிவுற்று மறைந்து போகிறது. அதனால் இரு பக்கத்து உடற் குழிகளும் ஒன்றோடொன்று தொடர்பு கொள் கின்றன. உள் இதயக் குழாய் இப்போது உள்ளுறுப் படம் 1. தவனையின் கருவளர்ச்சியில் இதயத்தின் உருவளர்ச்சி புச் சார்ந்த இடைப்படையால் சூழப்பட்டு, மேல் இதயத் தாங்கிக்குக் கீழே தொங்கிக் கொண்டிருக் கிறது. உள்இதயக் குழாயைச் சூழ்ந்துள்ள உள்ளுறுப் புச் சார்ந்த இடைப்படைக்குத் தசையிதழ்ப் படலம் (myocardium) என்று பெயர். இதிலிருந்துதான் இதயத்தின் தசைகள் உருப்பெறுகின்றன. இவற்றைச் சூழ்ந்து தோல் சார்ந்த (parietal) இடைப்படை