இந்தியக் கணிதக் கழகம் 203
1973 நாடு ரஷ்ய, பிரெஞ்சு நாட்டு வல்லுநர்களைக் கொண்டு 1960 இலிருந்தே கடற்கரைப் பகுதியில் எண்ணெய் வள இருப்பினைக் கணித்திடும் ஆய்வை ஒரு கிளைப் பிரிவாக வைத்து இயக்கினர். இதன் வளர்ச்சி இல் எண்ணெய் பெட்ரோலியத் தேட்ட களின் ஆணையம் திடீரென ஏற்றியதால் விரை வாக் கப்பட்டு, பம்பாயில் தொலைக்கடல் எண்ணெய்த் துரப்பணத் துறையைத் தனித்து இயங்கச் செய்தது. இதன்கீழ் எண்ணெய் கண்டுபிடிக்கச் செய்திடும் சோதனை முறைகளில் முக்கியமாக, நில அதிர்ச் சியைப் பதிவு செய்யும் கருவி பூட்டிய அன்வேஷக் என்னும் ஆய்வுக் கலத்தைச் சொந்தமாக்கிப் பயன் படுத்தியது. 1973 இல் சாகர் சாம்ராட் என்னும் ஆழ்துளையிடும் கலத்தைச் சொந்தமாக்கி இந்தியக் கடற்பகுதியில், முக்கியமாகப் பம்பாய் கட டற்பகு தியில் தீவிரமாகத் துளையிடத் துவங்கியது. பம்பாய் உயர்திட்டுப் பகுதியில் 1974 இல் எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டு, 1976 இலிருந்து இந்திய அரசு கடலி லிருந்து எண்ணெய் எடுக்கும் திறனைப் பெற்றது. இந்த வெற்றியில் உற்சாகப்படுத்தப்பட்ட எண்ணெய் இயற்கை வளிம ஆணையம் தொடர்ந்து பல நாடுகளுடன் கடலில் எண்ணெய்க் கண்டுபிடிப் பிற்காக ஒப்பந்தம் ஏற்படுத்தி, ரத்னகிரி, கொச்சி கடற்பகுதியிலும், கோதாவரி, கிருஷ்ணா, காவேரி கழிமுகப் பகுதிகளிலும் எண்ணெய்க் கண்டுபிடிப் பைத் தீவிரமாக்கியது. அதன் விளைவாகப் இடங்களில் எண்ணெய் இருப்புக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவ்வாணையம் தற்போது பம்பாய் கடலில் உற்பத்தியாகும் நில எண்ணெய்க் கடற் பரப்பில் 240 கி. மீ. நீளத்திற்குப் பதிக்கப்பட்டுள்ள குழாய் மூலம் பம்பாய்க்குக் கொண்டு வருகிறது. தற் போது இவ்வாணையம் கடலில் எண்ணெய் வள இருப்பினைக் கண்டுபிடித்தல் தொடர்பாக, எண் ணெயால் மாசுபடுத்தப்படும் விவரங்களை அறியத் தனது வருமானத்தில் ஒரு பங்கைப் பல்கலைக் கழகங் களுக்கும், சணைய நிறுவனங்களுக்கும் மானிய மாக வழங்கி இத்துறையை வலுப்படுத்தி வருகின்றது. நில பல் இந்தியக் கடற்படை, தனக்குத் தேவையான கட லாய்வை நடத்துவதற்கென அளவாய்வுக் கலங்க ளைத் தனியாக இயக்கி வருகிறது. இவற்றிலிருந்து சேகரிக்கப்படும் செய்திகளை நிலைப்படுத்த கடற் படை இயற்பியல் ஆய்வு நிறுவனம் ஒன்றைக் கொச் சியில் நிறுவிக் கடல் நீரோட்டம், வானிலை மாற்றம், கடல் நீரின் உவர்ப்பு வெப்ப மாறுபாடுகள் முதலிய வற்றில் ஆய்லை நிறைவேற்றி வருகிறது. 1974 இல் கொச்சிப் பல்கலைக் கழகமும், 1978 இல் இந்தியத் தொழில் நுட்ப நிறுவனமும் 1980 இல் பெர்ஹாம் பூர் பல்கலைக் கழகமும், 1981 இல் மங்களூர் பல் கலைக் கழகமும், 1970 இல் மகாராஷ்டிரப் பல் கலைக் கழகமும், 1984 இல் சென்னைப் பல்கலைக் கழகமும் கடலியல் துறைகளைத் தொடங்கிக் கடலி இந்தியக் கணிதக் கழகம் 203 யல் வல்லுநர்களின் தேவையை நிறைவேற்றும் பொறுப்பினை ஏற்று நடத்தி வருகின்றன. 1983 இலி ருந்து தமிழ்ப் பல்கலைக் கழகம் கடலியலின் ஒரு பிரி வாகிய நீர் அகழ் ஆய்வுத் துறையை நிறுவி இந்தி யாவில் இத்துறையில் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. அறிவியல் தொழில் நுட்ப ஆய்வுக் கழகம் 1965 ஆம் ஆண்டில் குஜராத்திலுள்ள பவநகர் என்னும் நகரில் மத்திய உப்புக் கடல் வேதியியல் ஆய்வு நிறுவனத்தை நிறுவிக் கடல் நீரினைக் குடி நீராக மாற்றுதல், கடலினின்று மின் விசைத்திறன் உற்பத்தி செய்தல், கடல் நீரின் மாசு நீக்கல் போன்ற துறைகளில் ஆய்வை நிறைவேற்றி வருகிறது. இவை தவிர மேலும் பல ஆய்வு நிறுவனங்கள் முக்கியமாக அகமதாபாத்திலுள்ள இயற்பியல் ஆய்வுக் கூடம் டாட்டா அடிப்படை ஆய்வு நிறுவனம், பாபா அணு நிறுவனம், இந்திய வானிலை ஆய்வுக்கழகம் முதலி யவை கடலாய்வின் வளர்ச்சியில் முக்கிய பங்கை ஏற்று வருகின்றன. ஞா.விக்டர் இராசமாணிக்கம் இந்தியக் கணிதக் கழகம் பூனாவில் 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெர்கு சன் கல்லூரிக் கட்டடத்தில், சென்னை மாநிலத்தைச் சேர்ந்த துணை ஆட்சியாளர் திரு. வி. இராமசாமி ஐயர் தலைமையில், கணித ஆர்வங்கொண்ட ஒரு சிலரைக் கொண்டு இந்தியக் கணிதக் குழு (Indian Mathematical Club) என்ற ஓர் அமைப்பு நிறுவப்பட் டது. பின்னர் இது இந்தியக் கணிதக் கழகம் (Indian Mathematical Society) என மாற்றிப் பெயரிடப்பட் டது. கணிதவியலில் உயர் ஆய்வுகள் நடத்தவும், கணிதத்துறையைச் சிறப்பாக வளர்க்கவும் இக்கழ கம் தொடங்கப்பட்டது. இந்தியக் கணித அறிஞர் களும், பிற நாட்டு அறிஞர்களும் இதில் உறுப்பினர் களாக உள்ளனர். பூனாவில் நிறுவப்பட்ட இக்கழகம் பின்னர் புது டெல்லியில் உள்ள புது டெல்லிப் பல்கலைக் கழகத் தில் செயல்படத் தொடங்கியது. ஆனால் இதன் நூல்நிலையம் 1950 இலிருந்து சென்னையில் உள்ள இராமா காமானுஜம் உயர் கணித நிறுவன வளாகத்தில் செயல்படுகிறது. பின்னர் 1909 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டுவரை இந்தியக் கணிதக் கழகக்காலமுறை இதழை ஆண் டுக்கு ஆறுமுறை வெளியிட்டனர். இது 1932க்குப் காலாண்டுக்கொரு முறையாக வெளி யிடப்படுகிறது. இவ்விதழில் உயர் கணிதக் கட்டுரை கள் வெளியிடப்படுகின்றன. இக்கழகத்தாரால் வெளி யிடப்படும் மற்றொரு காலாண்டு இதழ் தேமத்