226 இந்திய நில இயல் கட்டமைப்பு
226 இந்திய நிலஇயல் கட்டமைப்பு அருவி. தென்மேற்குப் பருவக்காற்றால் மிகுதியான மழை இப்பரப்பில்தான் பொழிகிறது. முந்நீரகத்தின் வழியாகப் பாயும் அனைத்து நதிகளும் (கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, தாமிர பரணி, இவற்றின் துணை ஆறுகள்) மேற்குத் தொடர்ச்சி வளாகத்தில் தோன்றிக் கிழக்கு நோக்கிப் பாய்ந்து கடலில் கலக்கின்றன. கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர். இப்பகுதியில் காணப்படும் மலைகள் தொடர்ச்சியாக இல்லாமல் விட்டுவிட்டுக் காணப்படுகின்றன. மேலும் இங்கு காணப்படும் பாறைகள் பலவகை மாறுபட்ட வேதி யியல் உட்கூறு கொண்டு ஒரிசாவில் வட டக்கு எல்லைப் புறத்திலிருந்தும் ஆந்திராவின் கடற்கரை வளாகத் தின் கரையோரப் பகுதியிலிருந்தும் சென்னைக்கு மேற்காக நீலகிரி மலையை இணைக்கின்றன.ஒரிசா, ஆந்திரக்கடற்கரைப் பகுதிகள் கார்னடிஃபெரஸ் (garnetiferous), சில்லுமனைட்டு, அணிவரிப்பாறை அல்லது கொண்டலைட்டு. சார்னகைட்டு ஆகிய பாறைகளால் ஆனது. இம்மலைத்தொடரின் சராசரி உயரம் 750 மீட்டர்; மிகுந்த உயரம் 1500 மீட்டர். எடுத்துக்காட்டாக. நிமய்கிரி என்ற மலை 1515 மீட்டர் உயரம் கொண்டது. சில இடங்களில் இவ்வகை கார்னடிபெரஸ் அணிவரிப்பாறைகள் மேற் புறத்தில் வாட்ரைட் தட்டைப்பரப்புக் கொண்ட மலைகளாகவும், அலுமினியம் குறைவான உட்கூறு கொண்ட பாறையாகவும் காணப்படுகின்றன. இம் மலைப் பகுதிகளில் காணப்படும் பால்கொண்டா குன்றுகள், கடப்பா கர்னூல் அடுக்குப்பாறை வளா கங்களாகவும் இதன் தொடர்ச்சியான, ஜவாது, சேர்வராயன், பில்லிகிரிரங்கன் மலைகள், சார்ன கைட்டு, கார்னடிபெர்சஸ் ஆகியவை அணிவரிப் பாறைகளாகவும் சேலம், கோயம்புத்தூர் பகுதிகளில் காணப்படும் நீலகிரி மலைப்பகுதிகளாகவும் இணை கின்றன. இதில் சேர்வராயன் மலைக் குன்றுகள் 1650 மீட்டர் உயரம் கொண்டு தட்டைக் குன்று களாகப் பாக்சைட் கனிமப் படிவுகளைக் கொண்டு காணப்படுகின்றன. ஃபெர்மர் என்னும் நிலவியல் ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படி கிருஷ்ணா நதிக்கு வடபுறம் உள்ள கிழக்கு மலைத் தொடர்ச்சிப் பகுதிகள் முன்கேம்பிரி யல் காலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மேட்டு நிலமாக ஆக்கப்பட்டன. இதற்குச்சான்றாக, இப் பகுதியில் காணப்படும் பாறைகள் அனைத்தும் உயர்ந்தவகை உருமாற்றப் பாறை ஆக்கங்களுக்கு உட்பட்டுக் காணப்படுகின்றன. மிகச்சில இடங்களில் மட்டும் சிலவகைப் பாறைகள், ஊடுருவிய கலப்பான பாறைகளாகக் கோடுரைட்டுகள் போன்றும் அதிமிகு காரப்பாறைகளாக டூனைட்டு குரோமைட்டுப் படிவுகளுடன் கூடிய பாறைகளாகவும் காணப் படுகின்றன. விந்திய தொடர்கள் வட மலைத்தொடர்கள். விந்திய மலைத் இந்தியப் பகுதியைப் தென் இந்தியப் பகுதியிலிருந்து பிரிக்கின்றன. இம்மலைத் தொடர்கள் தொடர்ச்சியான மலைவளாகங்களாக வும், சிறுசிறு குன்றுகளின் தொடர்களாகவும், தொடர் தட்டைக் குன்றுவளாகங்களாகவும் காணப் படுகின்றன. இம்மலைத் தொடர்கள் நர்மதை நதிக்கு வடக்கேயும் குஜராத்தில் ஜோபட் முதல் பீகாரில் உள்ள சாசாரம், இந்தூர், போபால், பந்தல்கண்டு வரையிலும் காணப்படுகின்றன. இம்மலைத் தொடர் களின் சராசரி உயரம் 450 மீ. முதல் 600 மீ. வரை இருக்கின்றது; ஆனால் சில இடங்களில் மட்டும் சுமார் 900 மீட்டர் வரை உள்ளது. மணற்கற்கள், குவார்ட்சைட்டு போன்ற பாறைகளால் இம்மலை கள் அரிமான எச்சமலைகளாகத் (relict mountians) தனித்துக் காணப்படுகின்றன. வடக்கே நர்மதா நதிப் பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாகத் தக்காண பசால்ட்டிராப் மிகுந்து காணப்படும். கிழக்குப் பகுதியில் உள்ள கைமூர் தொடர்களும், விந்திய மணற்பாறைகளும், விந்திய சாத்பூரா மலைகளுக்கு இடையில் தோன்றியுள்ள மேட்டு நிலப்பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியும், மத்திய இந்தியாவில் மழை மறைபுலமாக உள்ளன. நர்மதா, சம்பல், பிட்லா டான்ஸ், கென், சொன், போதி ஆகிய துணை நதிகள் தோன்றிக் கங்கை, கோதாவரி நதிகளுடன் கலக்கின்றன. சாத்பூரா மலைப்பகுதிகள். மத்திய பிரதேசத்தில் நிம்மார் மாவட்டத்தில் காணப்படும் ஒரு மலைத் தொடருக்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. இம் மலைத்தொடர் நர்மதா ஆற்றையும், தப்தி ஆற்றை யும் பிரிக்கிறது. மேற்குப் பக்கத்தில் குஜராத்திலுள்ள இராஜிபிப்லா குன்றுகளும், கிழக்குப் பகுதியில் பச்ச மாரிக் குன்றுகளும், ஹாசாரிபாஹ் ராஞ்சி, சாகயா முதலிய மலைத்தொடர்களும் இம்மலைத்தொடரில் அடங்கும். இங்கு காணப்படும் மகாதேவ் குன்றுகள் 1200 மீட்டர் உயரத்துடன் காணப்படுகின்றன பச்சமாரி மலை சுமார் 1335 மீட்டர் உயரம் வரை உயர்ந்துள்ளது. ஆனால், அமர்கண்டக் குன்று சுமார் 1064 மீட்டர் உயரமுடையது. இம்மலைப் பகுதியில் உள்ள குப்கார்க் என்ற குன்று மிகுந்த உயரமாக 1348 மீ. வரை உள்ளது. சாத்பூரா மலை வளாகத்திற்குக் கிழக்கே கோண்டுவானா படிவு களும் ஆர்க்கேயன் அணிவரிப்பாறைகளும் நிறைந்து காணப்படுகின்றன. பீரார் என்ற இடத்தில் சாத் பூரா மலை வளாகம் 112 கிலோ மீட்டர் முதல் 160 கிலோ மீட்டர், அகன்ற பகுதியாக ஒன்றுக்கொன்று இணையாகத் தக்காண டிராப் பாறைப் பாய்மம் கொண்டு காணப்படுகிறது. இதன் வடக்குச் சரிவுப் பகுதி நர்மதா நதியில் வடிகிறது. தெற்குச் சரிவுப் பகுதி வயின் கங்கா, வார்தா, தப்தி நதிகளில் வடிகிறது.