இந்திய நிலஇயல் கழகம் 229
எவரெஸ்ட் (8840 மீ), மகாலு (8470 மீ), அன்ன பூரணா (8075 மீ), கோசெயின்தான் (8014 மீ), தெளலகிரி (8168 மீ) ஆகிய சிகரங்கள் உள்ளன தெளலகிரிக்கு அருகே இத்தொடரின் கிளை ஒன்று உள்ளது. குமௌன் இமயமலை. இத்தொடர் 320 கி.மீ. வரை பரவியுள்ளது. இதில் நந்தாதேவி (7816 மீ). பத்ரிநாத் (7069 மீ), கேதார்நாத் (6940 மீ), திரிசூல் (7120 மீ), மானா (7273 மீ), கங்கோத்ரி (6615 மீ), சிவ்லிங் (6638 மீ), ஆகியவை மிகச்சிறந்த சிகரங்களாகும். புனித நதியான கங்கைநதி கங்கோத் ரியில் தொடங்குகிறது. 560 கி.மீ வரை பஞ்சாப் இமயமலை. பரவியுள்ளது. இது சட்லஜ் நதிக்கும், சிந்துவிற்கும் இடையில் உள்ளது. இத்தொடரின் குறிப்பிடத்தக்க பகுதிகளில், 6000 மீ. உயரத்திற்கும் மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இத்தொடரிலுள்ள ஜோ-ஜி-லா வழி, 3440 மீ. வரை உயரம் கொண்டது. இத் தொடரின் வடசரிவுகளில் ஏரிகளுடன் கூடிய வெளிகளும், தென்சரிவுகளில் காடுகளும் அடர்ந்து காணப்படுகின்றன. சம் சு. ச. நூலோதி. Krishnan, M.S, Geology of India and Bnrma, Sixth Edition, CBS Publishers and Distri- butors, New Delhi, 1982. இந்திய நிலஇயல் கழகம் உயர் இக்கழகம் 1958இல் ஆர்வமும் ஊக்கமும் நிறைந்தசில் அறிவியலாளர்களால் பெங்களூரில் தொடங்கப் பட்டது. இந்திய நிலஇயல்கழகம்( Geological society of India) இந்திய நிலஇயலில் புதிய வகை ஆய்விற்காக உருவாக்கப்பட்டது. நிலஇயலைச் சார்ந்த அனைத்துக் கிளைப்பாடங்களையும் தேசியக் கண்ணோட்டத்தில் உயர் ஆய்வுகள் செய்து, ஆய்வு முறைகளை வரவேற்று ஊக்குவிக்க இக் கழகத்தில் முடிவெடுக்கப்பட்டது. திறமை வாய்ந்த ஏறக்குறைய ஐம்பது நிலஇயலாளர்களுடன் கலந்து ரையாடி அவர்களைத் தொடக்க உறுப்பினர் களாக்க முடிவு செய்து அழைப்பும் விடுக்கப்பட்டது. அவர்களின் ஒத்துழைப்போடு 1958ஆம் ஆண்டு பெங்களூரில் இக்கழகம் அரசுப் பதிவு பெற்றது. உலகப் புகழ்பெற்ற இந்திய நிலஇயலாளர் முனைவர் டி. என். 1.வாடியா, இதன் முதல் தலைவரானார். இக்கழகத்தை 1959 ஆம் ஆண்டு மத்திய அரசின் சுரங்க. இரும்புத் துறை அமைச்சரான திரு. கே.டி. மாளவியா தொடங்கி வைத்தார். இந்திய நிலஇயல் கழகம் 229 முதன்மைக் குறிக்கோள். இந்திய நிலஇயல் கழகம், இரு முதன்மைக் குறிக்கோள்களுடன் தொடங்கப் பட்டது. அவை தற்கால நிலஇயல் தலைப்புகளில் கருத்தரங்கு, பணிப்பட்டறைகளை நாட்டின் பல் வேறு பகுதிகளில் நடத்துவது; இந்தியாவில் நில இயல் ஆய்வுகளின் முடிவுகளை, தரமான ஆய்வுச் செய்திகளாக, தனிப்பட்ட அறிவியல் ஆய்வு ஏட்டின் மூலம் வெளியிடுவது என்பன. ஆய்வேடு. 1959 ஆம் ஆண்டு முதன் முதலாக நிலஇயலில் ஆய்வேடு வெளியிடப்பட்டது. இவ்வாய் வேட்டின் மூலம் வெளிவந்த ஆய்வுக் கோவைகளும், ஆய்வு முடிவுகளும் உலகக் கவனத்தை ஈர்த்தன. இதன் மூலம் வெளிவரும் இதழ்களை உலகமே மிக வியப்புடன் எதிர்பார்க்கத் தொடங்கியது. இது 1977 ஆம் ஆண்டு முதல், மாத ஆய்வு இதழாக வெளியிடப்பட்டது. கடந்த இருபத்தெட்டு ஆண்டு களில் பல இந்திய நிலஇயல் அறிவியலாளர் சிறந்த ஆய்வு முடிவுகளை இக்கழக ஆய்விதழில் வெளியிட் டுள்ளனர். க 1964 ஆம் ஆண்டு இவ்வாய்வு இதழ், காலாண்டு இதழாக வெளியிடப்பட்டது. இதன் மூலம், ஆய்வுக் குறிப்புகளையும் ஆய்வு முறைகளையும் விரைவாக வெளிக்கொணரலாம். நாட்டிலுள்ள பல்வேறு நிலஇயல் நிறுவனங்களிலுள்ள அறிவியலாளர்கள், பேராசிரியர்களின் ஆய்வு முடிவுகள், இந்த இதழ் களின் மூலம் வெளியிடப்பட்டபோது, நிலஇயல் ஆய்வு நன்கு வளர்ந்தது. 1959 ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 789 ஆய்வுக் கட்டுரைகள், 10027 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன. 282 சுருக்க ஆய்வு விளக்கங்களும், 208 ஆய்வுக் குறிப்புகளும் வெளி வந்துள்ளன. 134க்கும் மேற்பட்ட அயல்நாட்டு நிலஇயலாளர்கள் இக்கழக இதழ்களில் தங்கள் ஆய்வு களை வெளியிட்டுள்ளார்கள். தொல் உயிரியல் (53), நுண் தொல் உயிரியல் (64), முதுகெலும்புத் தொல் உயிரியல் (25), தொல் தாவரவியல் (28), பாறை அடுக்கியல் (135), படிக வியல் (97), கனீமவியல் (90), அனற்பாறையியல் (146), உருமாற்றப்பாறையியல் (84),படிவப் பாறை யியல் (32), அமைப்பு நிலஇயல் (102), இயக்கவியல் (36), நில மேற்புற அமைப்பியல் (48), நில அடுக்கி யல் (42), தாதுக்கனிமவியல் (36), கனிமப் படிவ இயல் (97), நில வேதியியல் (73), கடல் படிவ இயல் (22), நில இயற்பியல் (35), நீர் நிலஇயல் (13), பிற கட்டுரைகள் (29) எனப் பல்வேறு நிலஇயல் பிரிவு களிலிருந்து தேசியக் கண்ணோட்டத்தில் ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. (அடைப்புக் குறி யில் உள்ளவை 1959 முதல் 1983 வரை வெளியிடப் பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கையாகும்).