உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 இந்திய மாடுகள்‌

256 இந்திய மாடுகள் போன்ற பயிரிடப்படுகிறது. கொடிகளுக்குத் தாங்கு மரமாகவும் சு.சுந்தரம் நூலோதி. Santapau, H & Henry, A.N., Diction- ary of Flowering Plant's of India, CSIR, New Delhi, 1963; Santapau, H., Common Trees, National Book Trust, New Delhi, 1966; Gamble, J.S., A Manual of Indian Tumbers, Sampson Law, Marston Co., London, 1972. இந்திய மாடுகள் மக்களுக்கு மிகவும் பயன்படும் வீட்டு விலங்குகளில் மாடுகள் குறிப்பிடத்தக்கவை. அவை பாலுக்காக வும் வேளாண்மைக்காகவும் இறைச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய மாநிலங்களில் காணப்படும் மாடுகள் அவற்றின் பயன்பாட்டிற் கேற்ப, பிரிக்கப்படுகின்றன. சாஹிவால் மாடு. அதிகமாகப் பால் கொடுக்கும் வகையைச் சார்ந்த சாஹிவால் என்னும் பஞ்சாப் மாடு புதுடெல்லியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதில் சில மாடுகள் நாளொன் றுக்கு 15முதல் 20 லிட்டர் பால் தரும். இவற்றுள் பல நிறங்களிலிருந்த போதிலும், குறிப்பாக இலேசான சிவப்பு அல்லது சந்தன நிறமே மிகுதி; இவை உருவத் தில் பருத்தவை; காளைகள் ஏறக்குறைய 53 அங்குலம் உயரமுள்ளன. இவை பெருங்குணம் வாய்ந்த கம்பீர மான மாடுகளாகும். தேர்வுச் சேர்க்கையின் மூலம் பசுவின் பாலை மேலும் அதிகரிக்கச் செய்யலாம். தென் இந்தியாவில் இவ்வகையைக் காண்பது அரிது. இவற்றிற்குப் பாதுகாப்பும், ஊட்டமும் அதிகமாக இருக்க வேண்டும். பால் கொடுக்கும் பண்பில் மேனாட்டு மாடுகளுக்குச் சற்றேறக்குறைய இணை யாகச் சொல்லக்கூடிய மாடுகளுள் இவை தலை சிறந்தனவாகும். சிந்தி மாடு. இது பாகிஸ்தானிலிருக்கும் சிந்து மாகாண மாடு. இப்போது இந்தியா முழுதும் பலவிடங்களிலும் பரவியிருக்கின்றது. சிவப்பு நிறம் வாய்ந்தது. ஆகவே இது சிவப்புச் சிந்தி என்றும் பெயர் பெறும். நெற்றியில் வெள்ளையும், வயிற்றின் அடிப்பாகத்தில் வெள்ளையும் இருந்தால் குற்றமில்லை. ஆனால் உடல் முழுதும் அதிக வெள்ளையோ வேறு நிறமோ இருந்தால், அதைக் கலப்பட மாடென்றே கொள்ள வேண்டும். யின் திமிலருகிலும் காலிலும் கருமையிருக்கும். கொம் புகள் தடிப்பாகவும், வளைந்தும் மேல் நோக்கிச் செல்லும். காதுகள் அகன்று சாய்வாகத் தூக்கி காளை நிற்கும். உயரம் 115 முதல் 125 செ.மீ. வரை இருக்கும். எடை 750 முதல் 925 பவுண்டு வரை யிருக்கும். இம்மாடு சிறுகத் தீனி தின்றுப் பெருகப் பால் தரும் குணமுடையது. திட்டமான உயரமும் எடையுமுடையது. இது வெயில் அதிகமான பகுதி யானாலும், மழை மிகுந்த பகுதியானாலும் நன்றாக வளரும். ஒரு நாளைக்கு 10-12 லிட்டர் பால் கொடுக்கக்கூடியவையும் உண்டு. இவை, ஒன்று அல்லது 14 ஆண்டுகளுக்குக் குறையாமல் பால் தரும் நெட்டீற்று மாடுகள். எருதுகள், வேலைக்கு நிதான மாயிருந்த போதும் மிகுந்த பளுவை இழுக்கும். நீண்ட காலம் வேலை செய்யும். பசு கம்பீர மானது. இப்பசுவின் மடி அதிகமாகத் தொங்கிய படி நீண்டு பருத்த காம்புகளுடனிருக்கும். தென் னாட்டின் பால் உற்பத்திக் குறையைத் தீர்க்கப் பயன்படுத்தும் மாடுகளுள் இது தலைசிறந்தது. தார்பார்க்கார் மாடு. இது சிந்து மாகாணத்திற்குத் தென்மேற்கேயுள்ள பாலைவனக் காடுகளிலுள்ள தார் பகுதி மாடு; பக்கத்திலுள்ள கட்ச் ஜோத்பூர் ஜெய்சால்மர்ஙா முதலான இடங்களிலும் உள்ளது. வெண்மை நிறம் கொண்ட இதை வெள்ளைச் சிந்தி என்று அழைப்பார்கள். பாலுக்கும், வேலைக்கும் மிகவும் ஏற்ற மாடு. ஒரு நாளைக்கு 10-12 லிட்டர் பால் கொடுக்கும். கீர் மாடு. இது கத்தியவாரிலுள்ள கீர் காடு களைச் சேர்ந்தது. உருவத்தில் பெரியது. 125 முதல் 130 செ.மீ. உயரமுடையது. பசு 850-1200 பவுண்டு எடையுடையது. இந்த இனத்தில் ஒரே நிற முள்ள மாடுகள் இல்லை. வெள்ளையும் சிவப்பும், சிவப்பும் கறுப்பும் இவ்வாறு பலவாறாகக் கலந் திருக்கும். பருத்துக் கனத்த கொம்புகள் இரு பக்கங் களிலும் இருந்து கிளம்பிக் கீழே வளைந்து மேல் நோக்கிச் செல்லும். காதுகள் மிக நீளமாகவும், அகலமாகவும், சுருண்டு வளைவுடனும் இரு பக்கங் களில் தொங்கியும் இருக்கும். ஒரு முறை பார்த் தால் இந்த மாட்டை மறக்கவே முடியாது. பாலுக் கும், வேலைக்கும் பயன்படக்கூடியது. ஒரு நாளைக்கு 10-12 லிட்டர் பால் கொடுக்கும். 800-1000 ஹரியானா மாடு. இது பஞ்சாப் மாடு. புதுதில்லி யின் சுற்றுப் பக்கங்களிலும் உண்டு. சாதாரணமாக வெண்மை நிறமுடையது. நீண்ட முகம்; அகலமற்ற நெற்றி, கட்டான உடல். 130-140 செ.மீ. உயரம், எடை பவுண்டு பாலுக்கும் வேலைக்கும் ஏற்றமாடு. ஒரு நாளைக்கு 10-12 லிட்டர் பால் கொடுப்பவை உண்டு. இந்தியாவில் இம்மாட்டையே அதிகமாக வண்டியில் பயன்படுத்துகிறார்கள். உடையது. வ கான்கிரேஜ் மாடு. இது குஜராத்துக்கு அருகிலுள்ள கட்ச் விரிகுடாவைச் சேர்ந்தது. கருமயிலை நிறம்