இமைத்தைப்பு 295
அடிப்பகுதித் துளையிலிருந்து செலுத்தப்பட்டு மேல் கொணரப்பட, இன்னொரு முனை அது போலவே எலும்புத் துளை வழியே மேல் கொணரப்படும். இவ்வாறு கொணரப்பட்ட ஒவ்வொரு துண்டின் முனைகளும் அந்தந்த இமைத்தட்டின் மேலே மடக்கப் பட்டு இணைக்கப்படும். இதற்குப் பாலியெஸ்ட்டர் மெததைத் தையல் உதவும் (படம்-2). கீறல்களைத் தைத்தல். முன்பு தோலில் போட்ட இழுப்புத் தையல்களை அகற்றிவிட்டு, தசையையும் தோல் பிளப்பையும் மீண்டும் உரிய இடத்தில் பொருத்திவிடல் வேண்டும். கண் தசை, இடை வெளியிட்ட கேட்கட் தையல்களாலும், தோல். கறுப்புப் பட்டுத் தையல்களாலும் மூடப்பெறும். விழியிமைகளை மூடியிருந்த தையல் அகற்றப்படும். இரா. கலைக்கோவன் நூலோதி. Roper-Hall, M.J., Stallord's Eye Surgery, Sixth Edition, K. M. Varghese Company, Bombay, 1980. இமைச்சுருக்கம் கண் இமைகளினிடையே ஏற்படும் இடைவெளி குறைந்திருந்தால் அதற்கு விழி இமைச் சுருக்கம் (blepharophimosis) எனப் பெயராகும். இது மரபு வழி வரக்கூடிய ஒன்று. இதில் இமைகளில் வெளி ஓரத்திலுள்ள இடைவெளிதான் பொதுவாகக் குறைந் திருக்கும். அந்த இடத்தில் இரு இமைகளுக்கும் இடை யே ஏற்படும் கோணம் சாதாரண அளவாகத் தான் இருக்கும். ஆனால், விழியின் அசைவாலும், கண்ணிலிருந்து வழியும் கண்ணீராலும் அந்த இடத் திலுள்ள தோலில் அழற்சி உண்டாகி, தோல் சுருங்கி இரு இமைகளின் வெளி ஓரத்தை மறைத்துவிடுகிறது. தனால் அந்த இடத்தின் இடைவெளி குறைகிறது. இதற்கென்று குறிப்பிட்ட சிகிச்சை தேவையில்லை. அவ்விடத்தினுள் தோலின் அழற்சி குணமடைந்ததும் அது சரியாகிவிடுகிறது. இமைத்தைப்பு ஆ.பெ. முழுமையா மேல்இமை கீழ்இமை இரண்டையும் கவோ இரண்டின் ஒரு பகுதியாகவோ இணையும்படி அறுவை மூலம் தைப்பது இமைத்தைப்பு (tarsorraphy) எனப்படும். இமை சார்ந்த இடைச்சந்தைக் (palpe- இமைத்தைப்பு 295 bral fissure) குறைக்கவோ முழுமையாக மூடவோ இந்த இமைத்தைப்பு உதவுகிறது. இது பெரும்பாலும் ஒரு தற்காலிசு அறுவை முறையாகவே கையாளப் படுகிறது. அதனால் எதற்காகச் செய்யப்படுகிறதோ, அந்த நோக்கம் நிறைவேறியதும் இமைத்தைப்பு பிரித்து விடப்படும். இமைத்தைப்பு வகைகள். இமைத்தைப்பு பக்கக் கடைக்கண் இமைத்தைப்பு மைய அல்லது மையஞ் சார்ந்த இமைத்தைப்பு என இரு வகைப்படும். பக்கக் கடைக்கண் இமைத்தைப்பு நோய் நிலை களும் நோக்கங்களும். ஒரு கண்ணின் இமைசார்ந்த இடைச்சந்து மற்றொரு கண்ணின் இடை ச்சந்தை விட இயல்புக்கு மாறாகவும். சமச்சீரற்றதாகவும் அமைந்திருக்கும் நிலையில், அதன் நீளத்தைக் குறைத்து. சமச்சீருடையதாக்கப் பக்கக் கடைக்கண் இமைத் தைப்பு செய்யப்படுகிறது. இலேசான விழிப்பிதுக்க நோயில் (exophthalmos) விழி முன்தள்ளலை ஓரள வுக்குக் கட்டுப்படுத்தவும், விழிகளை மூடும்போது இமைகள், நிறமிலி இழைமத்தை (cornea) முழுது மாக மூட உதவ மறைப்பற்ற நிலையிலிருக்கும் நிறி மலி இழைமத்தைக் காப்பாற்ற தொய்வுற்ற கீழி மையை உயர்த்திட கண்ணிலுள்ள கோளத்தசையின் (orbicularis oculi) செயலிழப்பால் ஏற்படும் கண் ணீர்ப்பெருக்கத்தைக் (epiphora) குறைக்க இவ்விமைத் தைப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் செயலிழப் பால் நேரும் இமை வெளிநோக்கலில் (paralytic ectropion) கண்ணின் மறைப்பற்ற நிலையைக் குறைக்கவும், செயலிழந்த கீழிமைக்கு உதவவும், கண்ணீர்த் தேக்கத்தைக் குறைக்கவும், இந்த இமை நோய்க்குரிய அறுவை மருத்துவத்துடன் பக்கக்கடைக் கண் இமைத்தைப்பும் சேர்த்துச் செய்யப்படுகிறது. உணர்விழப்பு மருத்துவம், பக்கக்கடைக்கண் இமைத் தைப்புச் செய்யும்முன் அறுவை செய்யவிருக்கும் இமைப்பகுதியை உறுப்பெல்லைக்குட்பட்ட உணர் விழப்பு (local anaesthesia) முறையில் உணர்விழக்கச் செய்ய வேண்டும். முதலில் கண்ணில் அமிதோகெய்ன் ஒரு விழுக்காடு சொட்டுமருந்து அல்லது சைலோ கெய்ன் இரண்டு விழுக்காடு சொட்டுமருந்தில் நான்கு சொட்டு விட வேண்டும். சைலோகெய்ன் இரண்டு விழுக்காடும் அட்ரினலினும் கலந்த மருத்துக் கலவையை, ஊசி மூலம் அறுவைக்குரிய இமைப் பகுதியின் ஓரத்தில் முதலில் தோலடியிலும் (Subcut- aneous) பிறகு ஆழமாகவும் செ சலுத்த வேண்டும். இவ்விரண்டு மருந்துகளின் தாக்கத்தால் அறுவைக் குரிய இமைப்பகுதி உணர்விழந்து போகும். அறுவைக்குத் தேவையான கருவிகள். வரை பேனா (mapping pen) ஜென்சன் கத்தரிப்பூ வண்ணமை, (gentian violet), பிளாஸ்டிக் கொக்கிகள் இரண்டு, கத்திகள் இரண்டு, விழியாடி வெளுப்புக் கத்தி ஒன்று (cataract knife), பார்ட் பார்க்கர் கத்தி (bard parker .