இயங்கு உறுப்புகள் 337
படுகின்ற அணுகுண்டு வெடித்தல் கூட இத்தகைய அதிர்வு உருமாற்றங்களை ஏற்படுத்தவல்லன. சந்திரனில் அதிர்வு உருமாற்றம். சந்திரனில் வாயு மண்டலம் இல்லாததால், 8 முதல் 12 கி.மீ | வினாடி வேகத்தில் சந்திரனில் வந்து மோதும் பல விண்கற் கள் சந்திரனில் உள்ள பாறைகளில் அதிர்வு உரு மாற்றத்தை உண்டாக்குகின்றன. அப்பெல்லோ 14 இன் வழி கிடைத்த விவரங்களின் படி, சந்திரனில் காணப்படும் மேட்டுப் பகுதிகள் நொறுங்கு கற்படிவு களால் (breccia) உண்டாக்கப்பட்டவை. இந்த நொறுங்கு கற்படிவுப் பாறைகள் சூவைட் என்ற கண்ணாடிப் பாறையை ஒத்துக் காணப்படுகின்றன. இப்பாறை வெளிர் நிறமுடையதாகவும், பிளஜியோகி ளாஸ், அனார்தோசைட் ஆகிய பொதிபடிகங்கள் காணப்படுகின்றது. படிகக் காரை உடைந்த நுண் சில்லுகளாலும், பிளஜி யோகிளாஸ், ஒலிவின் கனிமங்களாலும் ஆனது. ப்ளஜியோகிளாஸ் பொதிபடிவுகள் வடிப்புக்கோடு களைக் கொண்டு அவற்றில் பெரிய வெடிப்புக்கோடு களையும், ஒளிமாறாக் கண்ணாடிகளையும் கொண்ட தாகவும் காணப்படுகின்றன. சந்திரனில் காணப் படும் நொறுங்கு கற்படிவுப் பாறை, படிவுப் பாறை (sedimentary) வகையைச் சார்ந்ததாகும். . நிரம்பியுள்ளதாகவும் பிள ஜியோகிளாஸ் ஆவிவின் படம் 14. சந்திரன் நொறுங்கு படிவு பெரும்பாலும், சந்திரனின் மேற்பரப்பு, விண் வெளிக்கற்கள் மோதிய தால் உண்டான மேடு பள்ளங்கள் கொண்டதாகும். எனவே அதன் பெரும அ.க.4-22 இயங்கு உறுப்புகள் 337 பகுதி மேற்பரப்பு, பாறைகள் அதிர்வு உருமாற்றத் திற்கு உட்பட்டதால் உண்டானவை. விக்டர் ஜெ.லவ்சன் நூலோதி. Howel williams, Francie J.Turmen and Charles M, Gilbert, Petrography-An Introduction to the study of rocks in this sections, 2nd Ed., CBS Publishers & Distributors, Delhi. 1985; Myron G.Best, Igneous and metamorphic petrology. CBS Publishers, & Distributors, Delhi, First Indian Edition 1986 Roger Mason, petrology of the metamorphic tocks- Text book of petrology, vol iii-CBS Publishers & Distributors, Delhi, First Indian Edition-1984; Francis J.Turser & Tok Verhoogen, Indian Edition- Allied pacific private Ltd., Bombay 1962; G.W. Tyrrell, The Principles of petrology, B.I. publica- tions pvt, Ltd., 1985. இயங்கு உறுப்புகள் பங்கிடப்படாத ஓர் எலெக்ட்ரானைக் கொண்ட ஓர் அணுவோ மூலக்கூறோ இயங்கு உறுப்பு (free radical) என்று அழைக்கப்படுகிறது. சில மூலக் கூறுகள் ஒன்றிற்கும் மேலான ஒற்றை எலெக்ட்ரான களைக் கொண்டிருக்கும். (எ.கா. ஆக்சிஜன்) ஆனால் அவை இயங்கு உறுப்புகளாகக் கருதப்படுவ தில்லை. இயங்கு உறுப்புகள் நிலைப்புத்தன்மை கொண்டவையாகவோ (எ.கா. நைட்ரிக் ஆக்சைடு) அதிவினைபுரிவனவாகவோ உள்ளன (எ. கா. மீத் தைல்). அயனிகளை குறியீடுகளைக் கொண்டு குறிப்பது போல் இயங்கு உறுப்புகளைக் குறிப்பிடத் தனிமக் குறியீட்டின் மேல் ஒரு புள்ளி இட்டுச் சுட்டிக்காட்டப்படுகிறது (எ.கா. CI', H·). பொதுவாக ஒற்றைப்படை அணு எண் தனிமங் களின் அணுக்கள் யாவுமே தனித்த நிலையில் அல்லது பிறவி நிலையில் (nascent) இயங்கு உறுப்புகளாகும். பிறவிநிலைத் தனிம அணுக்கள் நிலையற்றவை என்பது மெய்ப்பிக்கப்பட்டு விட்டமையால் இயங்கு உறுப்புகளும் நிலைத்தன்மை பெற இயலாதவை என்ற கருத்து நிலவி வந்தது. 1900இல் மோசஸ் கோம்பர்க் (Moses Gomberg) முதன்முதலாக நிலை யாக இருக்கக்கூடிய மூஃபீனைல் மீத்தைல் இயங்கு உறுப்பைத் தயாரித்தார். மூவிணையப் பியூட்டைல் குளோரைடை வெள்ளித்துகளுடன் வினைப்படுத்தி அறுஃபீனைல் ஈதேன் என்னும் பொருளைத் தயா ரித்து, அதன் பண்புகளை ஆராய்ந்தார். (H,C) C -C (C.H) ஒரு நிறமற்ற படிகநிலைத்திண்மம். அதன் கரைசல்கள் ஆழ்ந்த மஞ்சள் நிறமுடையன. கரைசல்களைக் காற்றுப்படுமாறு திறந்து வைத்திருந்