350 இயங்கு நிலை நிறுத்தல்
350 இயங்கு நிலை நிறுத்தல் தட்டையான நிலக்கோள மேலோட்டுப் பகுதி பல தகடுகளின் அமைப்புக் கொண்ட பாறைப் படிவங் அத்தடுகளின் களால் அமைந்துள்ளது என்றும், பகுதிகளே இணைப்புப் இத்தகைய முகடுகள் என்றும், ஒவ்வொரு தகடும் ஒவ்வொரு திசையில் பக்கவாட்டு அழுத்தச் சக்தியைக் கொண்டுள்ளது என்றும் கூறுவர். அமெரிக்க, தென் அமெரிக்க நாட்டு மேற்குக் கடற்கரையின் நெடும் எல்லை அத்தகைய இரு தகட்டுப் பகுதிகளின் சேர்விடம் என்பதாலேயே இரு தகட்டுப் பகுதிகளின் உள் அழுத்தம் காரண மாக நெடுங்கரை எங்கும் பெரு மலைத்தொடர்கள் உயர்ந்தன என்பர். எல்லாம் பனிப் நிலமும் கடலும், கடல்கோளாலும், கடல்வடிவத் தாலும், புதிய நிலப்பரப்புகளைக் காட்டி நின்ற வரலாறு, நிலக்கோளம் குளிர்ந்த நாளில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்ச்சியாகும். நிலக்கோளம் முழுதுமே நான்கு யுகங்களிற்கும் மேலே குளிர்ந்து கிடந்தது. பல காலக்கட்டங் களில், நிகழ் பெரும் கண்டங்கள் பாறையாகத் திகழ்ந்திருக்கின் றன. பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக அத்தகைய முதல் பெரும் பனியுகம் (First Ice Age) தோன்றி ஏறத்தாழ ஒரு இலட்சம் ஆண்டுகள் நிலக்கோளம் பனிக்கோள மாகத் திகழ்ந்திருக்கின்றது. இரண்டாம் பெரும் பனியுகம் ஏறத்தாழ ஏழரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பும், மூன்றாம் பெரும்பனியுகம் மூன்றேகால் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பும், நான்காம் பெரும் பனியுகம் ஏறத்தாழ ஒன்றேகால் இலட்சம் ஆண்டு களுக்கு முன்பும் தோன்றின. இரண்டாம் பெரும் பனியுகக் காலநீட்சி மட்டுமே ஒன்றேகால் இலட்சம் ஆண்டுகளுக்கும் மேலானதாகும். நான்காம் பனி யுகம் எழுபதாயிரம் ஆண்டுக்காலம் நிலை பெற்றிருந் திருக்கின்றது. இப்பனிப் பாலைக் காலத்தில் விலங் கினங்களின் பயிரினங்களும் வாழ்வும், தொல்லைக்கு வேண்டும். உட்பட்டிருக்க கோளத்தின் உள்ளே மிகக் கடுமையான வெப்பநிலை யில் பாறைகள் கூழாகவும், வளிம நிலையிலும் இருக்க, புறப்பரப்பில் பனிப்பாறைகளில் நிலவுகின்ற தட்பநிலை நிலவியிருக்குமாயின் பாறைகள், பெருந் நிலக் மேலோட்டுப் பகுதியில் இருந்து அவற்றைத் தடுத்து நிறுத்தியதால் மட்டுமே இம்மாறுபாடுகள் தொடர்ந் திருக்க இயலாது. இயல்பாகவே மேலோட்டிற்கும் கனற்கோளத்திற்கும் இடையே பாறைகளின் தொடர்ச்சி விட்டுப்போன விடுபாடு (disconformity) நிலவுகின்றது. இத்தகைய பனியுகங்கள் நிலக் கோளத்தில் நிலவியதாலேயே, கனற்கோளமும் உட் கோளமும் மிகப்பெரும் வெப்ப அழுத்தச் சூழலில் உள்ளிருக்கும் போது மேலோட்டுப் பகுதி சமச்சீர் தட்பவெப்ப நிலையில் இருக்க இயலும் என்பதை மறைமுகமாக நிறுவுகின்றது. நிலக்கோளம் வெளித்தோற்றத்தின் உள் தன்னைச் சுற்றிக் கொண்டே கதிரவனையும் சுற்று வதைக் கண்டுணர இயலாதது போலவே, ளிருக்கும் ஆற்றல் செயற்பாட்டு இயக்கங்களையும் அதன் முழுமையான அளவில் கண்டுணர இயலாது. எரிமலையும், நில நடுக்கமும் அப்பேரியக்கத்தின் சிறு கூறாகவே வெளிப்படுகின்றன. நிலக்கோளம் எப் பொழுதும் மாற்றங்களைத் தொடர்ந்து நிகழ்த்தக் கூடும். கிடைத்த சான்றுகளையும், அறிவியல் விதி களையும் கொண்டு இப்பேரியக்கங்களை விளக்கவும். வரையறுக்கவும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவ தால் புதிய, புதிய கோட்பாடுகள் பழையனவற்றைச் செம்மைப்படுத்தவோ விலக்கித் தள்ளவோ முயலு கின்றன. எவ்வாறாயினும் நிலக்கோளத்தின் இயக்கம் மட்டும் இடைவிடாது தொடர்ந்துகொண்டே. இருப்ப தால் 'இயங்கு நிலக்கோளம்' என்பதே நன்கு பொருந்தும். ம. சிவக்குமார் நூலோதி. Robert Heller, et. at., Challenges to Science-Earth Science, Webster Division, McGraw- Arthur Hill Book Company, New York, 1979; Holmes, Principles of Physical Geology, Thomas Nelson and Sons Ltd., London; Muratov, M. V., The Origin of Continents and Ocean Basins, Mir Puplications, Moscow, 1977. இயங்கு நிலை நிறுத்தல் சில ஓடும் வாகனங்களை நிறுத்துவதற்குப் பலவிதமான வேசுத்தடைகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவ்வாறான தடைகள் எந்திரங்களுக்கும் தேவைப்படுகின்றன. உந்து வண்டியில் சக்கரத்தின் விளிம்பில் உராயும் கட்டைகளைப் பயன்படுத்தி வேகத் தடை ஏற்படுத்தப்படுகிறது. கார், பேருந்து, தொடர் வண்டி ஆகியவற்றிலும் கூட இவ்வித உராய்வைப் பயன்படுத்தி தடை உண்டாக்கப் படுகிறது. பயணி வண்டிச் சக்கரத்தின் விளிம்பில் உராயும் இரும்புக் கட்டைகள் அழுத்தப்படும் போது வண்டி தடைப்பட்டு நிற்கும். மிகுந்த பளு சுமந்து, வெகுவிரைவாகச் செல்லும் ஊர்திகளை ஓட்டநிலையிலிருந்து திடீரென நிறுத்துவது எளிதன்று. குறிப்பாக ஆயிரக்கணக்கான டன் எடை உள்ள மிகுவிரைவுச்சுமை வண்டித் தொடரை (goods train) நிறுத்துதல் கடினமான தாகும். மூலம் லாம். இந்நிறுத்தத்தைக் கீழ்வருமாறு வரையறுக்க