உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு மீறிய இரத்தப்போக்கு, அறுவை சிகிச்சையில 373

நூலோதி. சண்முகநாதன், சுப.,விவேகானந்தன், சு. அறிமுக வேதி வெப்பஇயக்கவியல், முதல் வெளியீடு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.1976: Samul Glasstone., and Lewis, David Elements of Physical Chemistry, Macmillan dna Co., London, 1960. இயல்பு சிகிச்சையில் மீறிய இரத்தப்போக்கு, அறுவை ஒவ்வோர் அறுவை சிகிச்சையின்போதும் நோயாளி இயல்பாக இழக்கும் இரத்தத்தின் அளவைவிடச் சில வேளைகளில் மிகுந்த இரத்தத்தை இழக்கலாம். இது நோயாளியிடத்திலிருந்த குறைகளாலோ, அறுவை சிகிச்சையாலோ, பயன்படுத்தும் மயக்க மருந்து களாலோ ஏற்படலாம். தின் நோயாளியின், சுற்றோட்டத்திலிருக்கும் இரத்தத் கன அளவு. நாளங்களிலுள்ள இரத்த அழுத்தம், நாளங்களின் தன்மை, நாளங்களின் நோய், இரத்தம் உறையும் தன்மை, இரத்த நுண் தட்டுகள், கல்லீரல் நோய்கள், பர்ப்யூரா, ஹீமோ ஃபீலியா நோய், திசுக்களின் அமைவிடம், அவை இரத்தம் பெறும் தன்மை, ஆக்சிஜன் குறைவாகப் பெறுதல், திசுக்களின் அழற்சி, வெட்டுக் காயங் களின் தழும்புகள், இரத்த ஓட்டம், இரத்தத்தைத் திசுக்களுக்குப் பரப்புவது, இரத்தம் ஓரிடத்தில் தேங்கி நிற்கும்போது நரம்புகளின் பணி, ஹார் மோன்கள், வைட்டமின்கள், இரத்த அமில காரத் தன்மை, காய்ச்சல் பொறுத்து ஆகியவற்றைப் இயல்புமீறிய இரத்தப்போக்கு ஏற்படலாம். அறுவை சிகிச்சையின்போது முறைதவறான அறுவை முறையால் பெரும் இரத்த நாளங்களில் சிதைவு ஏற்படுவதாலும், மெதுவாகச் செய்வ தாலும், அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தும் கருவிகளின் கூர்மையாலும், மிகுந்த திசுக்களை லெட்டி எடுப்பதாலும், நோயாளியின் கிடைமட்ட நிலை, இரத்த அழுத்தம், உடம்பில் கட்டிய கட்டுக் கள்,அதிர்ச்சி, இரத்தம் ஏற்றும் போது எதிர்வினை ஏற்படுதல், அறுபட்ட திசுக்களிலிருந்து இரத்தத்தைத் துடைக்கும்முறை, பிளாஸ்மா விரிவடையும் பொருள் களைப் பயன்படுத்துதல் போன்ற காரணங் களாலும் இயல்புமீறிய இயல்புமீறிய இரத்தப் போக்கு ஏற் படலாம். மயக்கமருந்துகள் இரத்தக்கசிலின் மீதோ, இரத்த உறைதல் மீதோ வினைபுரிவதாலும், அவற்றால் தோலிலுள்ள நாளங்கள் விரிவடைவதாலும் கார்பன் -டை -ஆக்சைடு உடம்பில் தேங்குவதாலும், ஆக்சிஜன் இயல்பு மீறிய இரத்தப்போக்கு, அறுவை சிகிச்சையில் 373 குறைவதாலும், நுரையீரல் இரத்த அழுத்தம் மிகுவ தாலும், நரம்பு முடிச்சுகளில் தடைசெய்யும் மருந்து கள், அட்ரீனலினை அழிக்கும் மருந்துகள், இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் மருந்துகள் நரம்பு மண்டவச் செயலைக் குறைக்கும் மருந்துகள் போன்றவற்றை அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்துவதாலும் இயல்பு மீறிய இரத்தப் போக்கு ஏற்படும். உடம்பிலுள்ள இரத்த அளவு குறைவதால் நோயாளி அதிர்ச்சி நிலையில் இருப்பார். நாடித் துடிப்பு மிகுந்தும், இரத்த அழுத்தம் குறைந்தும், நாக்கு வறண்டும், தோலின் இழுப்புத்தன்மை உள்ள நிலைகளில் அதிகமான வியர்வையோ காய்ச் சலோ ஏற்படும். இதய ஒலிகள் மெதுவாகக் கேட்கும். இதயத்துடிப்பு விரைவாக இருக்கும். உடம்பிலுள்ள இரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். நோயாளியின் நிலையறிந்து உடனே செயல்பட வில்லையெனில் நோயாளி இறக்கவும் நேரிடலாம். நோயாளியிடத்தில் குறைகளிருந்தால் அறுவை சிகிச்சைக்கு முன்பே, ஆய்வுசெய்து அதற்குரிய மருத்துவத்தைக் கையாள்வதால் இயல்பு மீறிய இரத்தப்போக்கு ஏற்படாமல் தடுக்கலாம். அறுவை சிகிச்சையின்போது பெரும் நாளங்கள் அறுபட்டால் அவற்றை உடனே சுட்டியோ பொசுக்கியோ, இரத்தப்போக்கைத் தடைசெய்யலாம். இரத்தக்கசிவு ஏற்பட்டால் ஜெல்ஃபோம் (gelfoam) போன்ற மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். நோயாளிக் குப் பொருத்தமான ஒத்த இரத்தத்தைக் கொடுக்க வேண்டும். குளுக்கோஸ், உப்புக்கரை நீர், ஹீமோசீல் (hemocoele), டெக்ஸ்ட்ரான் போன்றவற்றைத் தொடர்ச்சியாகச் சிரையினுள் செலுத்தும்போது நோயாளிக்கு அதிர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கலாம். நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம் இவற்றைக் கணக் கிடல் மூலம் நோயாளியின் உடல்நிலையைப் பற்றி அறிந்துகொள்ளலாம். பொருத்தமான மயக்கமருந்துகளைப் பயன் படுத்துவதாலும் அவற்றால் ஏற்படும் பக்கவிளைவு களுக்குரிய மருத்துவத்தை உடனே செய்வதாலும், தேவையற்ற மருந்துகளை அவ்வேளையில் பயன் படுத்தாதிருப்பதாலும் இரத்தப்போக்கை ஓரளவு தடுக்கலாம். அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் நோயாளியின் நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம், உடம்பிலிருந்து வெளியேறிய சிறுநீரின் சிறுநீரின் அளவு போன்றவற்றையும கணக்கிட்டு, நோயாளி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னரே அறுவை யரங்கத்திலிருந்து வெளியே எடுத்துச்செல்வது நன்று. வ.வரதராஜன்