உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல்‌ அளவுகள்‌ 453

அலகுகளை அதன் மூலம் வருவித்துக்கொள்ள இயலும். மின்னியல் சார்ந்த அளவுப் பண்புகளை அளவிட இன்றைக்கு மின்னோட்டத்தின் அலகான ஆம்பியரையே அடிப்படை அலகாகக் கொண் டுள்ளார்கள்.நீளம்,நிறை ஆகியவற்றின் அலகுகளுக் கான (மீட்டர் அல்லது கிலோ கிராம்) செந்தரங்களை உருவாக்கிப் பாதுகாப்பதை போன்று, மின்னோட்டத் திற்கான அலகைப் பாதுகாக்க இயலாது. எனவே, இவ்வலகை வரையறை செய்வதற்கு, மின்னோட்டத் தால் நிகழும் சில விளைவுகளையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. மின்னியல் அலகுகள் மற்றும் செந்தரங்களுக்கான பன்னாட்டு மாநாடு 1908 இல் கூடியபோது, சார் பிலா மின்காந்த அலகுமுறையைப் (absolute electro. magnetic system) பின்பற்ற முடிவெடுக்கப்பட்டது. இதில் மின்னோட்டத்தின் அவகான ஆம்பியர் பின்வரு மாறு வரையறை செய்யப்பட்டுள்ளது. ஒரு சென்டி மீட்டர் ஆரமுடைய வட்ட வடிவமான மின் சுருளின் வழியாக மின்னோட்டம் பாயும்போது, அமைப்பின் மையத்தில் வைக்கப்பட்டுள்ள ஓரலகுக் காந்தத் தனிமுனையின்மீது (unit magnetic pole) 1 ரேடியன் கோணத்தை ஏற்படுத்தும் வட்ட வில்லின் துண்டுப் பகுதி ஒவ்வொன்றும் 10 டைன் (dyne) விசையை உண்டாக்கினால். அம்மின்னோட்டத்தின் மதிப்பு ஓர் ஆம்பியர் மின்னோட்டம் எனப்படும். காந்தத் தனிமுனைகள் கிடைக்கப் பெறாததால், இவ்வரை யறையைச் செயல்முறையில் உறுதிப்படுத்திக் காட்டுவது இயலாததாகும். பின்னர் மாநாடு பன்னாட்டு ஓம், ஆம்பியர் வோல்ட் (International Ohm, Ampre and Volt) என்றழைக்கப்படும் மற்றோர் அலகு முறையைச் செயல்படுத்தியது. இதில் பன்னாட்டு ஆம்பியர் வெள்ளி வோல்ட்டா மீட்டரில் (silver voltameter) உள்ள எதிர்முனையில் ஓரலகுப் பரப்பில் ஓரலகு நேரத்தில் படியும் வெள்ளியின் நிறையைச் சார்ந்த வா று வரையறுக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு வகையான வெள்ளி வோல்ட்டா மீட்டர்கள், வெவ் வேறான மதிப்புகளைத் தரக்கூடியனவாக இருந்த தால், இவ்வலகு முறையும் குழப்பமாகவே இருந்தது. இவ்வலகு முறையில் பன்னாட்டு வோல்ட் (international volt) என்பது, பன்னாட்டு ஓமின் வழியாக ஒரு பன்னாட்டு ஆம்பியர் செலுத்தப்படும் போது, அதன் இரு முனைக்கு இடைப்பட்ட மின் னழுத்த வேறுபாடு என வரையறை செய்யப்பட்டது. இதன்படி மின்தடையில் ஒரு பன்னாட்டு (international watt) ஆற்றல் அழிவுறும் என எதிர் பார்க்கப்பட்டது. இவ்வரையறைகள் சார்பிலா ஆம்பியர்,சார்பிலா ஓம், சார்பிலா வோல்ட் ஆகிய வற்றிற்கு மிகுந்த நெருக்கத்துடன் பட்டாலும், பன்னாட்டு வாட், 10 எர்க்/நொடிக்குச் வாட் காணப் இயற்பியல் அளவுகள் 453 (cgs அலகுமுறையில்) சமமாகக் காணப்படவில்லை. ஓமிற்குச் செந்தரமாகப் பாதரசத்தம்பமும். ஆம்பிய ருக்குச் செந்தரமாக வெள்ளி வோல்டா மீட்டரும் ஏற்கப்பட்டன. பன்னாட்டு அலகு முறை உண்மையிலேயே தனியானதோர் அலகு முறையன்று. சார்பிலா cgs அலகு முறையில் வரையறுக்கப்பட்ட மதிப்பிற்கு ஏறக்குறையச் சமமாக இருக்குமாறு பருப்பொருள் சார்ந்த செந்தரத்தை ஏற்படுத்திக் கொள்வதில் விளையும் மாற்றமே இதன் வேறுபாடாகும். ஆனால் இது தவறென்பதைப் பின்னர் உணர்ந் தனர். இவ்விரு அலகு முறையிலும் அவகின் மதிப்பு ஒன்றுக்கொன்று சற்றே மாறுபட்டுக் காணப் பட்டது. இதனால் 1948 இல் நடைபெற்ற எடை மற்றும் அளவுகளுக்கான 9ஆவது பொது மாநாடு, பன்னாட்டு அலகுமுறையை முழுதுமாக ஒதுக்கி விட்டு, மின்னியல் அலகுகளை மீண்டும் புதுமைப் படுத்தியது. சமமாக இப்புதிய முறையில் ஆம்பியரின் மதிப்பு cgs அலகு முறையின் சார்பிலா ஆம்பியரின் மதிப்பிற்குச் கவனமாக இருக்குமாறு வரையறுக்கப் பட்டது. எல்லையற்ற நீளமும், புறக்கணிக்கக்கூடிய குறுக்குவெட்டும் உடைய இரு மின் கடத்திகள் வெற்றிடத்தில் ஒன்றுக்கொன்று இணையாக, ஒரு மீட்டர் இடைவெளியுடன் இருக்கும்போது, அவற் றின் வழியே ஒரே திசையில் சம அளவு மின்னோட் டங்களை ஏற்படுத்த, அவையிரண்டும் ஒன்றை யொன்று 1 மீட்டர் நீளத்திற்கு 2 X 10-7 நியூட்டன் என்ற விசையுடன் கவர்ச்சி விசையை உண்டாக்கி னால் கடத்தியின் வழிச் சென்ற மின்னோட்டத்தின் அளவு ஓர் ஆம்பியர் மின்னோட்டம் எனப்படும். செயல்முறையில் நுட்பமான பரிமாணமுடைய வட்டவடிவமான மின் சுருள்கள் பயன்படுத்தப்படு கின்றன. ஓம்,ஃபாரடு,ஹென்றி ஆகியவை ஒரு குறிப் பிட்ட அதிர்வெண்ணில் மின் எதிர்ப்புத் தன்மையை impedance) மதிப்பிடுவதில் தொடர்புடன் உள் ளன. பரிமாணத்தைச் சார்ந்து ஒரு மின் சுருளின் தன் தூண்டல் திறனையோ இரு மின் சுருள்களின் பரிமாற்றுத்தூண்டல் திறனையோ மதிப்பீடு செய்வ தால், இவற்றின் சார்பிலா மதிப்பை அறியலாம். மின்முனையின் நீளமான தலைச் சார்ந்து ஒரு மின் தேக்கியின் மின் தேக்கு திறனின் மாறுதலை மதிப் பிடுவதாலும் இதைச் செய்யலாம். வோல்ட் அலகை ஆம்பியர் மற்றும் ஓமிலிருந்து வரையறை செய்யலாம். சார்பிலா அளவீடுகளுக்குத் துணைச் செந்தரங் களும் பயன்படுத்தப்படுகின்றன. மின்தடையின் செந்தரத்திற்கு மாங்கனின் (manganin) கம்பிச்