உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியலின்‌ தத்துவம்‌ 489

முறைகளைக் கொண்டே வளர்ந்து வளம் பெற்றுள் ளன. அறிவியல் கண்டுபிடிப்புகளை நடைமுறையில் பயன்படுத்தி மக்களுக்கு அளிப்பது பொறியியல் துறையாகும். இயற்பியலில் கண்ட புதிய செய்தி, மேலும் வளர்க்கப்பட்டு இயற்பியலின் ஒரு தனித்துறையாகப் பிரிந்து விடுவதைக் காணலாம். இயற்பியலும், வான வியலும் ஒரே அறிவியலாக இருந்தன. வானியல் நன்கு வளர்ந்து, இயற்பியலுக்கு நெருக்கமான தனி அறிவியலானது. அடிப்படை உண்மைகள் இன்னமும் இயற்பியலின் பாடப் பிரிவாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல அணுக்கண்டுபிடிப்பும் அணுவின் அமைப்பும் பண்பும் பற்றிய ஆய்வுப் பணியின் பெரும் பகுதியை வேதியியலாரே செய் திருந்தாலும் அவை யாவும் இயற்பியலிலேயே அடங்கும். வேதியியலின் அடிப்படையாகக் கொள்ளும் அளவிற்கு இன்று அணுவின் கட்டமைப்பு பற்றிய நம் அறிவு வளர்ந்தோங்கியுள்ளது. அணுக்கட்டமைப் பின் அடிப்படைச் செய்திகள் யாவும் இயற்பியலின் ஒரு தலையாய பிரிவாகும். அணுக்கட்டமைப்பின் தகவல்களை ஆய்ந்து நடைமுறையில் பயன்படுத்திக் கொள்வது வேதியியலாரின் பணியாகும். புதிய இயற்பியல் பிரிவுகள் இன்னமும் தோன்றி வளர்ந்து வருகின்றன. மின்அணுவியல் (electronics) இன்று நன்கு வளர்ந்த பொறியியலின் பிரிவாகி விட்டது. அணுக்கருவியல் மிக விரைந்து இயற் பியலின் முற்றிலும் புதியதொரு பிரிவாகிவிட்டது. இயற்பியலார் இவை பற்றிய தகவலை மற்றவருக்கு ஒதுக்கி வைத்து விட்டு மேலும் தொடர்ந்து புதிய அறிவுச் செய்திகளைத் தேடிக் கொண்டுள்ளனர். இயற்பியலார் பல்துறையினர்களுக்கும் முன் னோடியாக உள்ளனர். மற்ற அறிவியல் துறை யினரும் இயற்பியலைக் கற்பது இன்றியமையாத தாகும். மற்ற துறைகள் அனைத்தும் இயற்பியல் துறையின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டே விவரிக்கப்பட்டுள்ளன. பொறியியலும் மற்ற அறிவியல் துறைகளும் நிலைத்திருக்க வேண்டு மானால் அடிப்படை உறுதியாக இருத்தல் வேண்டும். என்பதில் எவருக்கும் ஐயம் இருக்க முடியாது. இன்றைய இயக்க அறிவியலுக்கு நியூட்டன் கண்ட தத்துவங்களே அடிப்படையாக உள்ளன. தத்துவம் என்ற நியூட்டன் நூல் (1687) வெளிவந்து இரு நூற்றாண்டுகள் வரை அறிவியல் அறிஞர்கள் நியூட்டன் கொளகையின் அடிப்படையினை மென் மேலும் செப்பனிட்டனர். இயற்கையில், காணும் பல்வேறு நிகழ்வுகளுக்கும் விளக்கம் கூறும் வகையில் இயக்கக் கோட்பாடுகளை வகுத்தும் வந்தனர். எந்திர அமைப்பு முறையில் பேரண்டத்தில் இயக்கங்களை இயற்பியலின் தத்துவம் 489 விளக்கலாம் என்ற எண்ணம் இயக்கம், அலைகள், துடிப்புகள் (vibrations) ஆகியவை பற்றியும், பொருள் களின் பண்புகள் பற்றியும், பலவேறு வகைப்பட்ட வெப்ப நிகழ்வுகள் பற்றியும் கோட்பாடுகள் தோன்று வதற்கு வழி வகுத்தது. இயக்கவியல் கோட்பாட்டில் அழிவின்மை விதி (conservation principle) வெப்ப இயங்கியல் விதிகள் (law of thermodynamics) ஆகியவை சிறப்பானவையாகும். இந்தத் தத்துவங்கள் பொருள்களின் கட்டமைப்புப் பற்றிய புதிய கோட் பாடுகள் அனைத்திலும் இன்றியமையாத இடத் தினைப் பெற்றுள்ளன. இந்நூற்றாண்டில் ஆய்வுக் கூடக் கருவிகளின் வளர்ச்சி அணுக்கள், அணுக் கருக்கள் பற்றியும், அவற்றின் இயக்கங்கள் பற்றியும் நுட்பமாக அளந்து காண வழி செய்கிறது. அணுக்களின் உள்ளிருக்கும் அணுக்கருக்கள், எலெக்ட்ரான்கள் பற்றியும், பொரு களுக்கும் கதிர்வீச்சுக்கும் இடையே நிகழும் வினைகள் பற்றியும், பழைய இயக்கக் கோட்பாடுகளைக் கொண்டு விளக்கவோ, விவரிக்கவோ இயலாது என் பதும் புலனாயிற்று. மிக நுண்ணிய அளவில் நிகழ்வுகளை அளந்து காணக் குவாண்ட்டம் கோட்பாடும், மிகப் பெரும் அளவில் இயக்கங்களை அளந்து காணச் சார்புக் கோட்பாடும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் நியூட்டன் கண்ட அடிப்படை அமைப்பும், குறியீடுகளும் இப்புதிய கோட்பாடுகளிலும் இடம் பெறவே செய்கின்றன. இயற்பியவின் பொதுத் தத்துவங்களைக் கொண்டு எதிர்கால நிகழ்வுகளை வரையறுத்துக் கொள்ள முடியும் என்று கூறலாம். எனினும் அணு இயற்பியல் வளர்ந்து குவான்ட்டம் இயக்கவியல் போன்ற புதிய துறைகள் தோன்றிவிட்ட இன்றைய நிலையில், சமகாலத்தில் பேரண்டத்திலுள்ள எல்லாத் துகள்களின் நிலைகளையும், அவற்றின் லேகங்களையும் அறிந்திருந்தால் கொள்கையளவி லேயே கூட எதிர்காலத்தில் நிகழ இருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் இப்பொழுதே கணக்கிட்டுக் கூறி விடலாம் என்று கூறவியலாது. மாறாக ஒரு துகளை எடுத்துக்கொண்டால் கூடக் கொள்கையளவிலேயே அதன் நிலையையும் (position)வேகத்தையும் (velocity) ஒரே வேளையில் அறிந்து கொள்ள இயலாது என்று நிறுவியுள்ளனர். இத்தகைய ஓர் உறுதியின்மைக் கோட்பாட்டினை (principle of uncertainty) உலகின் முன்வைத்த ஹெய்சன்பர்க் (heisenberg) காரண காரியத் தொடர்பினையே (cause and effect) மதிப் பில்லாமல் மங்கவைத்து விட்டார் என்றும் கருத இயலாது. கண்ணுக்குத் தெரியும் உலகிலே காரண காரியத் தொடர்பு இன்றும் நியூட்டன் வழி நின்று உண்மையாகவே செயல்படுகிறது. ஆனால்