இரத்தக் குழாய்ச் சுருக்கிகள் 571
ஏனைய இக்கட்டி அதிக அளவில் காணப்படும். அறுவை சிசிச்சை மூலம் இதை அகற்றாவிட்டால் பல சிக்கல் கள் தோன்ற வாய்ப்புண்டு. இக்கட்டிகள் பிறவி ஊனங்களுடன் இணைந்து தோன்றும் நேரங் களில் சிறப்புப் பெயர்களை அடைகின்றன. 1. கசபாக் - மெரிட் தொகுப்பீடு: பெரும் ரத்தக் குழாய் கட்டி சருமத்தில் இரத்தப் புள்ளி மற்றும் இரத்தக் கன்றிகளுடன் காணப்படும். இரத்த நாளங் களில் உறைவு ஏற்படுவதால் நுண் தட்டணுக்கள் குறைந்து சருமத்தில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. 2. நீலக் குமிழ் மச்சம்: சருமத்தில் ரப்பர் போன்ற நீலநிற மச்சமும் குடலில் தந்துகிக் கட்டி களும் இணைந்து காணப்படும். 3. மஃபுசி தொகுப்பீடு: பல்வேறு பகுதியில் நுண் குழாய்க் கட்டிகளுடன் குருத்தெலும்புப்பகுதியில் புது வளரியுடன் இணைந்து தோன்றும். நுண்குழாய்க் கட்டி, குகை இரத்தக் குழாய்க் கட்டியுடன் தமனி சிரை நாளப் புடைப்பு, இரத்த நாளத் திசுப் பெருக்கம் ஆகியவையும் காணப்படு கின்றன. கர்ப்பிணிகளின் ஈறுகளில் நாளத் திசுப் பெருக்கம் ஏற்பட்டு எளிதில் இரத்தக் கசிவு ஏற்பட லாம். இது தவறாகப் புற்று நோய் எனக் கருதப்படு கிறது. ஆழ்பகுதிகளில் இரத்தநாளப் புடைப்பு ஏற் படின் இரத்தம் தமனியிலிருந்து சிரைக்குச் செலுத்தப் படும். இரத்தக் குழாய்ப் பையில் புழுக்கள் நெளிவது போன்று தோன்றும். இவை சருமத்தில் மட்டு மன்றி உள் உறுப்புகளிலும் தோன்றுவதுடன் இதய அயர்வு போன்ற சிக்கல்களையும் ஏற்படுத்தலாம். எக்ஸ்கதிர் ஆய்வினால் தமனி சிரை மாறுபாட்டின் அளவை அறிந்து அறுவை செய்தல் வேண்டும். 1. படர் இரத்தக் குழாய்க் கட்டிக்கு உடலின் பெரும்பகுதி உட்படுகிறது. இளமையிலேயே தோன்றி னாலும், பல நாள் சென்றே தெளிவாகத் தெரிகிறது. திசுக்கள் அழிக்கப்படுகின்றன; வண்ண மாற்றங்கள் காலம் தாழ்த்துத் தோன்றுகின்றன. உறுப்புகள் சமனின்றிப் பெருகுகின்றன. உள்ளுறுப்புக்களும் தனால் பாதிக்கப்படலாம்; நாளங்களின் வளர்ச்சி கொழுப்பு மற்றும் தசைக் கட்டிகளுடன் இணைந்து தோன்றும். ஒன்றுக்கு மேற்பட்ட கட்டிகளை உடலில் காணலாம். இரத்தக் குழாய் விரிவுக் கட்டிகளில் இயல் பாகத் தோன்றிய நாளங்கள் விரிவடைகின் றன. புது இரத்தக் குழாய்கள் பெருக்கமடைவதில்லை. இவற்றுள் தீ மச்சங்கள், போர்ட்வைன் மச்சங்கள் அடங்கும். ஏனைய கட்டிகளைப் போன்று இவை அழுத்தும்பொழுது மறைவதில்லை. பெரும்பாலும் தோலில் படர்கின்றன; அரிதாக இதயப் பிறவிக் குறைகளுடன் காணலாம். இரத்தக் குழாய்ச் சுருக்கிகள் 571 அ) ஸ்ட்டார்க்வீபர் தொகுப்பீடு: முகத்தில் போர்ட்வைன் மச்சத்துடன், மூளையின் உறைகளின் மேல் இரத்தக் குழாய் மாறுபாடுகள் காணப்படும். சில வேளைகளில் விழித்திரையிலும் இக்குறை தோன்றலாம். இம்மச்சம் முக்கிளை நரம்புப் பரப்பு களில் தோன்றுகிறது. ஆ) கிளிப்பில் டிரினமே தொகுப்பீடு: போர்ட் வைன் மச்சம் இரத்தநாளச் சுருளுடன் கை அல்லது கால் திசுப்பெருக்கத்துடன் காணப்படும். இ) பார்க் வீபர் தொகுப்பீடு; மேற்கூறிய மாற்றங்களுடன் தமனி, சிரை பவுத்திரம் காணப் படும். இக்கட்டிகளின் எதிர்காலப்போக்கையும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் பொறுத்தே சிகிச்சையும், வெளித் தோற்றத்தையும் உறுப்புகளின் பணி பாதிக்கக்கூடிய சூழ்நிலையையும் மனத்தில் கொண்டு அறுவையும் செய்யப்படுகின்றன. இக் கட்டிகளில் இரத்த உறை கோளாறுகள் தோன்றும் வாய்ப்புள்ளதால் சிகிச்சையின்பொழுது கவனமாக இருத்தல் வேண்டும். இவை மீண்டும் கிளைக்கும் தன்மையுடையன; எனினும், இவை ஒருபோதும் புற்று நோய்க்கு அடிகோலுவதில்லை. -40- ராதாகிருஷ்ணன் நூலோதி. Enzinger, F.M., and Weiss, S.W., Soft Tissue Tumours, The C.V. Mosby Co., St. Louis, 198; Hajdu, S. I., Pathology, of Soft Tissue Tumeurs, Lea and Febiger, Philadelphia 1979, Rosai. J., Ackerman's Surgical Pathology, Edition, St. Louise, C.V.Mosby Co., 1981. இரத்தக் குழாய்ச் சுருக்கிகள் Sixth இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்யும் பொருள் கள், இரத்தக்குழாய்ச் சுருக்கிகள் (vasoconstrictors எனப்படும். இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய் வதன் மூலம், இவை இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கின்றன. இரத்தக் குழாய்ச் சுருக்கும் பொருள்கள். குளிர், பொதுவாக இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய் கிறது; இரத்தச் சுற்றோட்டத்தில் உள்ள அட்ரினலின் நார்-அட்ரினலின் டோப்பாமைன் மற்றும் ஆஞ்சியோ டென்சின் ஆகிய வேதிப் பொருள்கள், எஃபெட்ரின் ஃபினை லெஃப்ரின், ஹைட்ராக்ஸி ஆம்பிட்டமின் ஃபினைல் ப்ரோப்பனாலமைன், பேரியம் குளோ ரைடு, வாசோப்ரஸ்ஸின், கெஃபின் முதலிய மருந்து கள்; பகுதி இரத்தக் குழாய்ச் சுருக்கிகள் குறிப் பிட்ட பகுதியில் மட்டும் இரத்தக் குழாய்களைச் சுருக்குகின்றன. எ. கா. செரோட்டோனின், உடலில்