உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580 இரத்தக்‌ கொலஸ்ட்ரால் குறை நிலை

580 இரத்தக் கொலஸ்ட்ரால்குறை நிலை நீங்கலாகச் சிறப்பான மருந்துகள் எதுவும் இன்று வரை கிட்டவில்லை. -த.வெ. பாபாகிருஷ்ணன் நூலோதி. Dr. Gupta M.P., -API Text Book of Medicine Shock and Hypotension, Fourth Edition, 1986; Eugene Bramnald and Gardon Williams, H. Harrison's Principles of Internal Medicine, Eleventh Edition, 1966; Charles Fridberg Diseases of Heart, Third Edition, 1966. இரத்தக் கொலஸ்ட்ரால் குறை நிலை மனித உடலில் காணப்படும் சத்துப்பொருள்களில் மிகவும் முக்கியமானது ஒன்று கொலஸ்ட்ரால் ஆகும். சைவ உணவில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே, உடலுக்குத்தேவையான கொலஸ்ட்ரால் அசெட்டைல் கோ என்சைம் - ஏ (acetyl coenzyme - A), கொழுப்பு அமிலங்கள், குளுக்கோஸ், அமினோ அமிலங் களிலிருந்து உருவாக்கப்படுகிறது. சராசரி அசைவ உணவிலிருந்து 0.3 கிராம் கொலஸ்ட்ராலே ஒரு நாளைக்குக் கிடைக்கிறது. இருப்பினும் உடலில் ஒரு நாளைக்கு 1.3 கிராம் கொலஸ்ட்ரால் உருவாகிறது. எனவே நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 1 கிராம் என்ற அளவில்மேற்கூறிய மூலகங்களிலிருந்து கொலஸ்ட்ரால் உருவாகிறது என அறியலாம். இரத்தத்தில் சாதாரண மாக 180-240 மிகி|100 மி.லி என்ற அளவில் கொல ஸ்ட்ரால் காணப்படுகிறது. இந்த அளவைவிடக் குறைந்து காணப்பட்டால், அது இரத்தக் கொலஸ்ட் குறைநிலை (hypocholesterolemia) என்று அழைக்கப்படுகிறது. இதற்குக் கீழ்க்காணும் நிலைகள் காரணங்கள் ஆகும். உணவு உட்கொள்ளாமை, தைராய்டு அதி இயக்கம், இன்சுலின், பிட்யூட்டரி ரண மருத்துவம், கொலிஸ்டின், நியோமைசின், புரோப்ரனலால், நிக்கோட்டினிக் அமிலம் போன்ற மருந்துக்கள் உட்கொள்ளுதல் என்பன. 17 இரத்தக் கொலஸ்ட்ரால் குறைநிலையைக் கீழ்வரும் வகையாகப் பிரிக்கலாம். பீட்டா குறை அடர்த்தி) கொழுப்புப் புரதக் குறைவுகள் இதைப் பீட்டா கொழுப்புப் புரதமின்மை (abetalipo protenemia) பீட்டா கொழுப்புப்புரதக்குறை என்று ரண்டு வகையாகப் பிரிக்கலாம். பீட்டா கொழுப்புப் புரதமின்மை. இது அரிதாக ஏற் படும் ஒரு குடும்ப நோய் ஆகும். இந்நோயில் அப்போகொழுப்புப் புரதம் பி (apolipoprotein B), கொழுப்புப் புரதங்கள் (lipoproteins) இரத்தத்தில் முற்றிலும் இல்லாமல் இருக்கும். ஆனால் ஆல்ஃபா கொழுப்புப் புரதங்கள் (alphalipoproteins) இருக்கும். இந்நோயின் அறிகுறிகள் ஓராண்டிற்குப்பிறகே தெரி யும். இவை வளர்ச்சிகுன்றல், ஊட்டக்குறைவு (main utrition), வயிறு வீக்கம், கொழுப்புப் பேதி (steator- rhoea), படிப்படியாக நரம்பு சார்ந்த பணிகள் குன்று தல், தோல் நிறமாற்றம், விழித்திரை தேய்அழற்சி (retinal degeneration) முதலியன. இதில் இறப்புக் கான காரணம் ஒழுங்கீன இதயத்துடிப்பாகும். இந் நோய்க்குத் தக்க மருத்துவம் இல்லை. சிலசமயங்களில் இடைப்பட்ட சங்கிலி ட்ரைகிளிசைரடுகள் (medium chained triglycerides), வைட்டமின் ஏ முதலியன பலனளிக்கலாம். பீட்டா கொழுப்புப்புரதக் குறை. இந்நிலையில் கொலஸ்டிரால் மற்றும் ட்ரைகிளிசைரடுகள் மிக அடர்த்தி குறைந்த கொழுப்புப்புரதங்கள், பீட்டா கொழுப்புப்புரதங்கள் குறைவாகக் காணப்படும். இந் நோய்ஊட்டக்குறைவு மற்றும் உட்கவர்வுக்கோளாறு கள் (malabsorption) முதலியவற்றால் உண்டா கலாம். இதுவும் மரபுவழி நோயாக உண்டாகலாம். இரத்தத்தில் பீட்டா கொழுப்புப் புரதத்தின் அளவு சாதாரண அளவில் பத்து விழுக்காட்டிற்கும் கீழ் குறையா தவரையில் இந்நோயில் அறிகுறிகள் எதுவும் தோன்றாது. க ஆல்ஃபா (மிக அடர்த்தி) கொழுப்புப்புரதக் குறை. இதுவும் ஓர் அரிதான மரபு வழி நோயாகும். இந் நோயில் ஆல்ஃபா கொழுப்புப்புரதம் மற்றும் கொலஸ்டிரால் எஸ்ட்டர்களின் சேமிப்பு முதலியன குறைவாக இருக்கும். அறிகுறிகள். டான்சில் (tonsil) மேல்தொண்டை (pharynx) மற்றும் குத சிலேட்டுமப் படலங்கள் ஆகி யவை ஆரஞ்சு நிறமாற்றமடைகின்றன. புறநரம்புப் பாதிப்பு (peripheral neuropathy) மண்ணீரல் வீக்கம் முதலியன தோன்றலாம். இந்நோயின் முக்கிய குறை ஆல்ஃபாகொழுப்புப் புரத உற்பத்தி பாதிப்பாகும். இதற்குத் தக்க மருத்துவம் இல்லை. வெகு கொலஸ்ட்ரால் அசைல் டிரான்ஸ்பெரேஸ் குறைவு. இது ஸ்காண்டிநேவிய மக்களிடையே அதிகமாகக் காணப்படும் மரபுவழி நோயாகும். இந்நோயில் பிளாஸ்மா கொலஸ்ட்ரால் எஸ்ட்டர் மற்றும் ஆல்ஃபா கொழுப்புப் புரதங்களின் அளவு வாகக் குறைந்து காணப்படும். எஸ்ட்டராக்கப்படாத கொலஸ்ட்ரால் மற்றும் லெசிதின் அளவு மிகையாக இருக்கும். இதனால் சிறுநீரில் புரதப் போக்கு (proteinurea), இரத்தச் சோகை, சிறுநீரகச் செய லிழப்பு முதலியன நேரிடலாம். இதற்குச் சிறுநீரக மாற்று மருத்துவம் செய்ய வேண்டும். ச. ஆதித்தன்