718 இரும்பு
718 இரும்பு ஃபெர்ரோசின் வளையங்களுக்கு நடுவில் இரும்பு அணு அமைந் துள்ளது. இது நிலைப்புத் தன்மை மிக்கது. பல ஃபெர்ரோசின் பெறுதிகள் தயாரிக்கப் பட்டுள்ளன. இவற்றில், பதிலீட்டுத் தொகுதிகள் கரிம வளையத்தில் பதிலீடு செய்யப்பட்டுள்ளன. ஃபெரோசினும் அதன் வழிச்சேர்ம வினைகளும், இரும்பின் வினைகள் என்பதைக் காட்டிலும், கரிமச் சேர்ம வகையைச் சார்ந்த வினைகளாகவே உள்ளன. உலோகவியல். புவி மேற்பரப்பில் 4.7% கிடைக் கும் இதன் சேர்மங்களில் இருந்து எளிதில் இரும்பைப் பிரித்தெடுக்கலாம். இரும்பின் உலோகவியல் (metall urgy) என்பது தாதுக்களில் இருந்து வார்ப்பிரும்பைப் பெறுவதே ஆகும். ஆக்சைடு தாதுவிலிருந்து தான் இரும்பு பெரும் அளவில் பிரித்தெடுக்கப்படுகிறது. முதலில் மற்ற தாதுக்களையும் ஆக்சைடு தாதுவாக மாற்றவேண் டும். ஆக்சைடு தாதுவுடன் நிலக்கரியும், சுண்ணாம் புக் கல்லும் சேர்க்கப்பட்டு ஊதுலையில் (blast furnace) சூடு செய்யப்படுகிறது. முதலில் நிலக்கரியும், ஆக்சிஜனும் இணைந்து கார்பன் மோனாக்சைடு கிடைக்கிறது. இது இரும்பு ஆக்சைடுகளை இரும பாகக் குறைக்கிறது. சுண்ணாம்புக்கல் சிதைந்து தரும் கால்சியம் ஆக்சைடு, சிலிக்கா ஆகிய மாசு களைக் கசடாக வெளியேற்றுகின்றது. இவ்வுலையி லிருந்து உருகிய நிலையில் பெறப்படும் அலோகங் களும், உலோகங்களும் தூய்மையற்ற நிலையில் இருக்கும். இவ்விரும்பு பின்பு தேனிரும்பாகவோ, எஃகாகவோ வார்ப்புகளில் வார்க்கப்பட்டு மாற்றப் படுகின்றது. ஊதுலை தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டி. ருக்கும். நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 2, 400 டன் இரும்புத்தாதுடன் 1,200 டன் நிலக்கரியும், 600 டன் சுண்ணாம்புக்கல்லும் உலையினுள் சேர்க்கப்படும். இதிலிருந்து 1,200 டன் இரும்பு தயாராகும். வார்ப்பிரும்பில் 2.6% முதல் 4.0% வரை கரி யும், 0.7% முதல் 3% வரை சிலிக்கானும் கொண்ட உலையினுள்,உருகிய நிலையில் பெறப்படும் இரும்பை வார்ப்புகளில் வார்த்து, வேகமாகக் குளிர வைத்தால் வார்ப்பிரும்பு கிடைக்கும். இது மெதுவாகவும், பளபளப்பாகவும், பழுப்பு நிறம் உடையதாகவும் இருக்கும். இதன் உருகுநிலை குறைவு (1536°C). இது இயந்திரங்கள், குழாய், தண்டவாளம் போன் றவை செய்யப் பயன்படுகின்றது. தேனிரும்பு வார்ப்பு இரும்பைவிடத் தூய்மை யானது. இதில் கரி 0. 2% இருக்கும். திறந்த உலை நிலக்கரி இரும்புத் தாது மூலப்பொருள்கள் சுண்ணாம்புக்கல் அடிப்படை ஆக்சிஜன் உனை ஆக்சிஜன் உருவாக்கம் பெசிமர் உலை எஃகுப் பாளங்கள் திறந்த அடுப்பு எஃகு உலை எவது லை கசடு இரும்பு எற்குக் கழிவுத்துண்டுகள், உலோகக்கலவைகள் இரும்பு எஃகு உருவாக்க முறைகள் மின் உலை உலோகக்கல்லை எஃகு சுரு எஃகு, துருபிடிக்காஎஃகு