உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/802

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

778 இரைச்சல்‌, மின்‌

778 இரைச்சல், மின் தற்செயல் செயல்பாடுகளின் விளைவு என்றே சுட்டிக் காட்டுகின்றன. கதிர்வீசப்படும் தற்செயல் இரைச்சல். மின்காந்தக் கதிர்வீச்சை ஏற்கக் கூடிய எந்த மின்னியல் கருவியும் கதிர் வீசப்படும் தற்செயல் இரைச்சல்களையும் சைகைகளையும் ஏற்கக்கூடும். பொதுவாகச் சுற்றுப் புறத்தில் தோன்றும் மின்னியல் தடங்கல்கள் கரிய வெடிகளாகத் தோன்றும் பண்புகள் கொண்டு முறை யற்ற இரைச்சலை எழுப்புகின்றன. ஓர் உணர் சட்டம் சுற்றுப்புறத் தடங்கல் களைத் தவிர வெப்பத் தோற்றமுடைய உறுதியான பின்னணி இரைச்சலையும், சுற்றுப்புற வளிமங்கள் விண்பொருள்கள் அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து வெப்பக் கதிர்வீச்சினையும் ஏற்கிறது. பின்னது விண்பொருள் இரைச்சல் என அழைக்கப்படுகிறது. சூரியன் எப்போதும் வெப்பத்தை வெளியிடுகிறது. சூரியப்புள்ளிச் செயல்பாட்டின்போது இரைச்சல் கதிர்வீச்சின் தீவிரம் மிகவும் அதிகரிக்கிறது. தற்செயலற்ற இரைச்சல். இவ்வகை இரைச்சல் பொதுவாக ஏனைய மின்னியல் கருவிகளின் கதிர் வீச்சு, வேறு அமைப்புகளுடன் தேவையற்ற பிணைப்பு அல்லது ஒரு மின் சுற்றிற்குள்ளே போலி யான அதிர்வு ஆகியவற்றால் தோன்றுவதாகும். இரைச்சலின் குறியீட்டு, அளவீட்டு முறைகள். ஒத்த இரைச்சல் தடை. இரைச்சலைக் குறிப்பிடு வதற்கு ஒரு வசதியான முறை அதனை ஒரு கற் பனையான தடையால் குறிப்பிடுவதுதான். அறை வெப்பநிலையில் இரைச்சலை விளைவிக்கும் தடை Ra என்று குறிப்பிடப்படும். பொதுவாக, கருவி இரைச்சலற்றதாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட இயக்க நிலைகளில் அதன் மதிப்பு உற்பத்தியாளரின் விவரங்களில் குறிப்பிடப்படுகிறது. சான்றாக, மின் கம்பியை எடுத்துக்கொள்ளலாம். இரைச்சல் தடை - Ra உட்கொடு தடையின் உண்மை மதிப்பு- R1 உட்கொடு முனைகளுக்கிடையே தோன்றும் இரைச்சல் மின்னழுத்தத்தின் மதிப்பு கீழ்க் காணும் வாய்பாட்டால் பெறப்படும். U'n = 4 (R, + Ra)n Ts 1 இதனால் மின்கம்பியின் இரைச்சல் பகுதியைச் சுற்றின் உட்கொடு பாகத்தோடு எளிதில் ஒப்பிட்டுப் பார்க்க இயலும். சைகை இரைச்சல் விகிதம், ஓர் இரைச்சல் உரு வாகின்ற சுற்றில் சைகை இரைச்சல் விகிதம் S/N என்பது US/UN சைகை அழுத்தத்திற்கும் இரைச்சல் மின் அழுத்தத்திற்கும் இடையே உள்ள விகிதமாகும். இரைச்சல் காரணி. ஒரு மிகைப்பு அல்லது ஒரு மின்னணுவியல் சுற்றில் இரைச்சல் காரணி என்பது சைகை - இரைச்சல் விகிதத்தால் கீழ்க்காணுமாறு குறிப் பிடப்படுகிறது. F இரைச்சல் S/N திறன் விகிதம் (உட்கொடுத்தலில்) SN திறன் விகிதம் (வெளிப்பெறுதலில்) PS1 Pa = Pn₁ PS, இரைச்சல் காரணி ஒத்த இரைச்சல் தடையின் மூல மாகக் கீழ்க்காணும் வாய்பாட்டாலும் வெளியிடப் படலாம். F Rp + Rn == Rp Rp மூலத்தின் கூட்டுத்தடை Rn - இரைச்சல் தடை இரைச்சல்காரணியை அளவிடுதல். இரைச்சல் காரணியை அளவிடுதற்கு மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தும் முறை ஓர் இரு முனையத்தில் உரு வாகும் வெடி இரைச்சலைக் கொண்டு ஒரு மின் கம்பியின் இரைச்சல் காரணியை அளவிடுதலேயாகும். இரு முனையத்தின் நேர் மின்னோட்டம் Ih இன் மூலமாக நேரடியாகவே இரைச்சல் காரணி F பெறப்படும். F 20 I, R - இவ்விதமாக இரைச்சல் காரணியை அளவிடுதற் கான கருவிகள் இணைந்த மின்சுற்றின் வரைபடம் கீழே காண்பிக்கப்பட்டுள்ளது. அளவீடு செய்வதற்கு ஓர் இரு முனையத்தின் கம்பி இழை வெப்பநிலை இருமுனையத் தகட்டின் மின்னோட்டம் Ib, குறிப்பிட்ட மதிப்பை அடையும் உயர்த்தப்படும். சுழியாக இருக்கும்போது அது மின்கம்பியின் வெளியீட்டு இரைச்சலின் மதிப்பை விட இரு மடங்கு மதிப்பேயாகும். இரைச் சல் காரணி அல்லது எண் F 20 Ib R. வரை = இரைச்சல் வெப்பநிலை. இரைச்சலைக் குறிப்பிடு வதற்கு மற்றொரு முறை ஒத்த இரைச்சல் வெப்ப நிலையினால் அதைக் குறிப்பிடுவதேயாகும். இரைச் சல் வெப்பநிலை இருவேறு முறைகளால் குறிப்பிடப் படுவது குறித்துக் கவனமாக இருக்கவேண்டும். Te= (F - 1) To Te ஒத்த இரைச்சல் வெப்பநிலையைக் கொடுக்கிறது.