உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/815

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரைப்பை நிணநீர்க்‌ கட்டிகள்‌ 791

இரைப்பை நிணநீர்க் கட்டிகள் 791 உள்ளே செல்லும்படித் தைக்க வேண்டும். இத்தைய லின் மேல் உள்ளிருக்கும் பொருள் வெளியே வாரா திருக்கும் நிலையில் மூன்றாவது இணைப்பு, துளை யற்றுத் தைக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு மேற்புற மாக நான்காவது தையல் இணைப்பு மூன்றாவது இணைப்பை மூடும் விதத்தில் தொடர்ந்து போடப் படும். தையல் முழுமை பெற்ற பிறகு குறுக்குக் குட. லில் உள்ள பிளந்த திரையின் விளிம்புகள் இரைப் பையைச் சுற்றி 1 செ.மீ. தள்ளிய நிலையில் இணைக் கப்படும். இதன் மூலம் இத்துளையினுள் குடல் பிதுக் கம் தவிர்க்கப்படுகிறது. இரைப்பையின் மேற்புறமாக இரைப்பைப் புற்று நோய் ஏற்படும் பொழுது நடுச்சிறுகுடல் இணைப் பைத் தற்காலிக மருத்துவமாகச் செய்யலாம். குறுக்குப் பெருங்குடல் தாங்கிவழியாக இரைப்பை அடிப்பாகத் தை வெளியே கொணர முடியாத அளவு துளை மிகச் சிறிதாகயிருக்கும்பொழுது இவ்வறுவை செய்யப்படுகிறது. அப்பொழுது நடுச்சிறுகுடல் சற்று நீளமான அளவில் விடப்பட்டு (30-40 செ.மீ) இணைப்புக்கு உள்ளாகும். இல்லையேல் நடுச்சிறு குடலோ குறுக்குப்பெருங்குடலோ அழுத்தத்திற்கு உள்ளாகலாம். இரைப்பையின் கீழ்ப்புறமாக இரைப்பையின் வெளிப்புற விளிம்பிற்கு ஒரு செ.மீ. நீள மேற்புற இணைப்புச்செய்யவேண்டும். இரைப்பையில் உள்ள பொருள்கள் நடுச்சிறுகுடலில் மேற்புறமாகச் செல்வ தைத் தடுப்பதற்காக இவ்வாறு செய்ய வேண்டும். இரைப்பைக்கு முன்புறமாகவே சிலர் இணைப்பு அறுவை செய்ய விரும்புகின்றனர். இதற்கான காரணம் மீண்டும் ஏற்படும் புண்ணின் விழுக்காடு மிகக் குறைவு: மேலும் புண் இவ்விடத்தில் தோன்றி னாலும் அவற்றைச் சரி செய்வதும் மிகவும் எளி தாகும். இரைப்பை அகற்றல் அறுவையைவிட, மிக எளிதான இவ்விணைப்பால் ஏற்படும் இறப்பு 0.75 விழுக்காடே ஆகும். ஆனால் இவ்வறுவை செய்த 40 விழுக்காடு மக்களுக்கு முன் சிறுகுடலில் அறுவை செய்த இடத்திற்கருகில் மீண்டும் புண் உருவாகிறது. ஆனால் இதுவே வேகஸ் துண்டிப்பு அறுவையுடன் சுமார் 5 விழுக்காடு சேர்த்துச் செய்யப்பட்டால் மக்களுக்கே மீண்டும் குடற்புண் ஏற்படுகிறது. அறுவைக்குப் பிறகு ஏற்படும் விளைவுகள். இரைப்பை நடுச்சிறுகுடல் இணைப்பு அறுவைக்குப்பின் அதில் இரத்த ஒழுக்கு, தையல் இடப்பட்ட பகுதியில் கசிவு, உணவு வெளிவரும் பாதை அடைப்பு. குடல் அடைப்பு, குடல் பிதுக்கம் (internal hernia ) இரைப்பை நடுச்சிறுகுடல் பெருங்குடல் இவை முற்றிலும் சேர்ந்து துளை, குடல் குறுகல் ஆகியவை தோன்றும்; இரத்தச்சோகை தாது உப்புகள் குறை நிலை ஏற்படும். இரைப்பை நிணநீர்க் கட்டிகள் சு.நரேந்திரன் நிணநீர்க்கழலைகளில் நோய் ஏற்பட்டாலோ, அருகி லிருக்கும் உறுப்புகளில் நோய் ஏற்பட்டாலோ நிண நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றன. இவை சிலசமயங்களில் இரைப்பையையும் குடலையும் தாக்கக்கூடும். இவை இவ்விடங்களில் பெரும்பாலும் புற்றற்றக்கட்டிகளாக இருந்த பின்னரே நிணநீர்க் கட்டிகளாக மாறு கின்றன. இரைப்பை எப்பித்தீலியப் புற்றுத் தோன்றக் காரணமாகச் சொல்லப்படும் ஹைட்ரோகார்பன் பொருள்கள் நிணநீர்ப் புற்று ஏற்படக் காரணமாக அமைவதில்லை. சிலருக்கு இரைப்பையில் ஹைட்ரோ குளோரிக் அமில் ஊறும் திறன் 66 விழுக்காடு குறைந்து காணப்படும். சிலருக்கு அமிலம் உற்பத்தி யாகும். திறன் அதிகமாகவும் காணப்படலாம். இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண் ஆகிய வற்றால் நிணநீர்க் கட்டி தோன்ற வாய்ப்புள்ளது என்றாலும் இரப்பைப் புண் இரைப்பை நிணநீர்க் கட்டியாக மாறுமா என்பதற்கு எவ்வித மருத்துவச் சான்றும் இல்லை. எனினும் அறுவையின்போது நாள்பட்ட நிணநீர்க் கட்டிகளின் மேல் சீதப்படல் இரைப்பைப் புண்கள் காணப்படுகின்றன. இக் கட்டிகள் உள்ள இடத்தில் இரப்பை நீர்த் தேக்கத்தி னாலும் இவை தோன்றி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இக்கட்டிகளை நிணநீர்த் திசுப் பெருக்கத்தி லிருந்து வேறுபடுத்தி அறியத் திசு ஆய்வு உதவும். நிணநீர்த் திசுப் பெருக்க நிலை நிணநீர்க் கட்டிகள் தோன்றக் காரணமாக அமைகின்றது. இரைப்பையில் மட்டும் தனித்து முதல் நிலையாக நிணநீர்க் கட்டி தோன்றுவதை விட உடலில் உள்ள மற்ற நிணநீர்க் கழலைகளுடன் சேர்ந்து இரண்டாம் நிலையாகவே அதிக அளவில் தோன்றுகின்றது. இது குழந்தைகளிடம் சற்று அதிகமாகக் படுகிறது (38 விழுக்காடு). நிணநீர்க் கட்டிகள் ஆணுக்கும், பெண்ணுக்கும் 2:1 என்ற விகிதத்தில் அனைத்து வயதினரிடமும் பாலின வேறுபாடின்றிக் காணப்படும். காணப் இரைப்பையில் எந்த இடத்தில் வேண்டுமானா லும் நிணநீர்க் கட்டி தோன்றக்கூடும். ஆனால் மிக அதிகமாக இரைப்பையின் பின்புற உள் வளைவு. உடல் பகுதி, ஃபைலோரஸ் பகுதி ஆகியவற்றின் அருகிலேயே காணப்படுகிறது.