826 இலை
826 இலை கற்றைகள் இலையிடைத்திசுவில் ஆங்காங்கே காணப் படுகின்றன. தாவரங்களுக்கேற்ப ஸ்கெலரிடுகள், நார்கள், லேட்டக்ஸ் செல்கள், இடியோபிளாஸ்ட்டு கள் ஆகியவை இலையிடைத்திசுவில் காணப்படலாம். இலையின் புறத்தோலில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செல்களைக் கொண்ட தூலி கள் (trichomes) காணப்படுகின்றன. தூலிகளின் வகையும் அமைப்பும், தன்மையும் வகைப்பாட்டியலில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. புறத்தோலின் இலைத்துளைகள் (stomata) இருபக்கப் புறத்தோல் களிலோ (amphistomatic) தோலின் மேற்புறத்திவோ (epistomatic) கீழ்ப்புறத்திலோ (hypostomatic) காணப் படும். ஒவ்வோர் இலைத்துளையும் இரு காப்புச் செல்களால் (ground cells) சூழப்பட்டுள்ளது. காப்புச் செல்களைச் சுற்றித் துணைச் செல்கள் (subsidiary cells) காணப்படுகின்றன. புறத்தோலைச் சூழ்ந்து க்யூடிக்கிளும் க்யூடிக்கிள் படலத்துக்கு மேல் மெழுகு அடுக்கும் (wax layer) காணப்படும். நுனி வளர்ச்சிப் பருவம் என்பர். ஒரு விதையிலைத் தாவரங்களில் நுனி வளர்ச்சிப் பருவத்தைவிட அடி அல்லது இடை வளர்ச்சிப் பருவம் இலையின் வளர்ச்சியில் பெரும் பங்கேற்கிறது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப்பின் வளர்ச்சி சீரான இலையின் தோற்றுவி முழுதும் பரவிக் காணப்படுகிறது. இம்மூன்று வளர்ச்சிப் பருவங்களும் இலையின் நீள் வளர்ச்சி யில் பெரும்பங்கு ஏற்றாலும், தாவரங்களுக்கேற்ப இவற்றில் ஏதாவது ஒன்று மற்ற இரண்டைவிட மிகுதியான சிறப்பினைப் பெறுகிறது. காமிலைனர இலைத்தோற்றுவி. தண்டின் நுனி ஆக்கத் திசுவிலிருந்து தோன்றும்போது அதன் மையத்தில் ஒரு புரோகேம்பிய உருளை, இலையின் அடியிலிருந்து மேல் நோக்கியவாறு வேறுபாடு அடைகிறது. இதுவே பின்னால் இலையின் மைய நரம்பாக மாறுகிறது. தண்டிலிருந்து இலைக்குஇலை இழுவை செல்லும் போ து தண்டின் வாஸ்குலார் உருளையின் ஒருபகுதி பிரிக்கப்பட்டு இலைக்குள் செல்வதால் தண்டின் வாஸ்குலார் கற்றையில் ஒன்று அல்லது மூன்று இலைப் பொந்துகள் (leaf gaps) கின்றன. உண்டா இலைத் தோற்றுவியின் தொடக்க வளர்ச்சி முழுதும் அதன் நுனியில் நடைபெறுவதை இலையின் பாளை இலை குறுக்கு வெட்டுத் தோற்றம் இலைத்தோற்றுவி ஓரளவு வளர்ந்ததும் அதில் வேறுபாடு ஏற்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு முன்னால் இலைத் தோற்றுவி ஏறக்குறைய உருளை வடிவமாகக் காணப்படும்; இலைக்காம்பும் இலைப்பரப்புப் பகுதி களும் வேறுபட்டுக் காணப்படா. வேறுபாடு அடை யும்நிகழ்ச்சியின் போது இலைப்பரப்புப்பகுதி மட்டும் ஆரச்சமச்சீரை இழக்கத் தொடங்குகிறது. அதாவது இலைப்பரப்பு தட்டையாக மாறுகிறது. இதற்குக் காரணமான இலை ஆக்கத்திசு விளிம்பு ஆக்கத்திசு அழைக்கப்படுகிறது. விளிம்பு ஆக்கத்திசு இரண்டு வகையான தோற்றுவிகளைக் கொண்டது. அவை விளிம்புத் தோற்றுவி (marginal initial), விளிம்பு அடித்தோற்றுவி (sub marginal initial) என்பன. இந்த இரண்டின் தொடர் பகுப்புகளால் இலையிடைத்திசு, வாஸ்குலார் கற்றை ஆகியவை தோன்றுகின்றன. இலைத்தோற்றுவியின்மையப்பகுதி மைய நரம்பாக மாறுகிறது. எங்கு விளிம்பு ஆக்கத் திசு செயல்படலில்லையோ அங்கு அப்பகுதி இலைக் என