878 இழைக் கட்டமைப்பு
878 இழைக் கட்டமைப்பு கும், சோடா நீக்கிகளுக்கும் மிகுந்த எதிர்ப்பு உடை யவையாக இருக்கின்றன. கரையும் அல்ஜினேட் இழைகள் மெல்லிய சல்லடைத் துணி போன்ற நெச வியல் பொருள்கள் தயாரிக்கும் இடங்களிலும், எந் திரப் பின்னல் செய்யும் தொழிற்சாலைகளிலும் பயன்படுகின்றன மீளாக்கப் புரத இழைகளும் அவற்றின் பாலிபெப் டைடு தொகுப்புகளும். வொம்மெல் என்பவர் புரதப் படலங்கள் தயாரிப்பில் வேதிப்பொறியியல், எந்தி ரப் பொறியியல் ஆகியவற்றின் பங்கைத் தொகுத் துள்ளார். புரதப் படலங்கள் தயாரிக்கப் பால் புர தப் பொருள், சோயா அவரைப் புரதப் பொருள், சோளத்திலுள்ள புரதப் பொருள், ஆமணக்கிலிருந்து எடுக்கப்படும் குறைந்த அளவு எடஸ்டின் என்ற பொருள், கோதுமைப்புரதம், சணல் பருத்திக் கொட் டைகளிலிருந்து கிடைக்கும் புரதப்பொருள் ஆகி யவை மூலப்பொருள்களாகப் பயன்படுகின்றன. முட்டையிலுள்ள வெள்ளைக்கரு, பட்டு, விலங்கு களின் சவ்விலிருந்து கிடைக்கும் பசைப்பொருள், மீன் புரதம் ஆகியவற்றிலிருந்து விலங்குப் புரதப்பட லங்கள் தயாரிக்கப்படுகின்றன. எதிர் காலத்தில் பாலிபெப்டைடு தொகுப்புகளிலிருந்து இழைகள் தயாரிக்கப்படலாம். இவற்றைத் தயாரிக்க ஈர நூற் றல் செயல்முறையே பயன்பட்டது.பட்டாணிப்புரதம் அல்லது ஆர்டில் பால் புரதப் பொருளிலிருந்து தயா ரிக்கப்பட்ட லேனாடில், வொம்மெல் தயாரித்த ஃபைப்ரோலேன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதில் ஃபைப்ரோலேன் நிலைத்து நிற்கும் தன்மை யைக் கொண்டு இல்லாவிடினும், நூலிழைக் கலவை தயாரிக்கப் பயன்படுகிறது. இது தற்போது நெசவிய லுக்காகச் சிறிதளவு தயாரிக்கப்படுகிறது. . கரைசலிலிருந்து மீளாக்கக் கம்பளியை உற்பத்தி செய்தலில் கம்பளிக் கட்டமைப்பில் உள்ள சிஸ்ட் டைன் பிணைப்பு குறைக்கப்படுகிறது. உறைந்த கம்பளிக் கட்டி குப்ர அம்மோனியம் கரைசலில் கரைக்கப்பட்டு, படலங்களாகப் பிதிர்வு (extrusion) செய்யப்படுகிறது. இது 8 - கம்பளிக் கட்டமைப்பின் தோற்றத்தைக் கொண்டுள்ளது. இழைகளின் திரள் கள், நூற்றல் தொட்டிகளில் உடனடியாக உருவா கின்றன. ஆனால், உண்மையான கம்பளி மூலக் கூறின் - கட்டமைப்பை மீண்டும் உற்பத்தி செய்ய இயலவில்லை. ஆகையால் a,தீ மீளாக்க இழை களுக்கு இடையில் நீள்மீட்சி இருப்பதில்லை. ஏனெ னில், மீளாக்கப் புரதப் பொருள்களையும், பிற புர தப் பொருள்களையும் நிலை நிறுத்த ஃபார்மால்டி ஹைடு பிணைப்பு சிஸ்ட்டைன் பிணைப்புக்குப் பதி லாகப் பயன்படுத்தப்பட்டது. கம்பளியைக் கீழ்க் காணுமாறு மீளாக்கம் செய்யும்போது & தோற்றத் தைக் கொண்ட கம்பளி கிடைக்கிறது. கம்பளியை விழுக்காடு பெர்அசெட்டிக் அமிலத்துடன் 2 சுற்றப்பட்ட மீளாக்க கம்பளி அ. தேவையற்ற கம்பளியிலிருந்து தயாரிக்கப்பட்டு முறுக்கம் செய்யப்பட்ட நீ கெரேட்டின் மீளாக்கப் புரத இழைகள், ஆக்சிஜன் ஏற்றம் செய்யப்பட்ட தேவையற்ற கம்பளியிலிருந்து தயாரிக்கப்பட்டு முறுக்கம் செய்யப்பட்ட - கெரேட்டின் மீளாக் சுப் புரத இழைகள். வினைபுரியச் செய்ய அது ஆக்சிஜனேற்றம் செய்யப் படுகிறது. பின்னர் அது வலுகுன்றிய காரத்தில் கரைக்கப்பட்டு, உறைந்த கட்டித் தயிரைப் போன்று வீழ்படிவாக்கம் செய்யப்படுகிறது, இது & - புரதக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும். இதுஉண்மையான கம்பளியைப் போன்றிருக்கும். மேற்சொன்ன முறை கள் தொகுப்புப் பாலிபெப்டைடுகளைப் பல்லுறுப் பாக்கம் செய்வது பற்றியும், இவற்றிலிருந்து இழை உருவாக்கம் செய்வது பற்றியும், இவ்வாறு தயாரிக் கப்படும் இழைகளை முன்னோடி நிறுவனத்தின் அளவுகளில் ஆடைகளாக்கும் முறைபற்றியும் அறிந்து கொள்ள வழி செய்கின்றன. மேலும், ஒவ்வொன் றையும் செய்வதற்குத் தேவையான வேலை அளவு களையும் ஒன்றிற்கொன்று தொடர்பேற்றிக் காட்டு கிறது. -இரா.அ. நூலோதி, Happey, F., Contemporary Textile Engi- neering, Academic Press Inc. Ltd., London, 1982. இழைக் கட்டமைப்பு ஒரு குறிப்பிட்ட இழையைச் செயற்படுத்தி, பொதி இழையாகவும்,தொடர்படலக் கட்டமைப்புகளாக வும், யாப்பிட்டும் யாப்பிடாமலும் செய்யலாம். ஆனால் அதன் சிறப்பியல்புகள் ஒவ்வொரு நூலி