82 இனக்கலப்பாக்கல்
82 இனக்கலப்பாக்கல் படம் 3 சிக்மா பிணைப்புகளையும் தருகின்றன. இரு கரி அணுக்களிலுமுள்ள pr மண்டலங்கள் பக்கவாட்டில் மேல்பொருத்தமாகிப்பை பிணைப்பைத் தருகின்றன. 0 Sp இனக்கலப்பு பெரிலியம் குளோரைடு, அசெட்டிலீன் ஆகிய மூலக்கூறுகளில் மைய அணுவில் $ மண்டலமும் ஒரு நீ மண்டலமும் கலந்து இரு sp கலப்பின மண்டலங்கள் விளைகின்றன. இவ்விரு sp மண்டலங்களும் ஒரே நேர்கோட்டிலுள்ளன. கலப்பினமாகாத உம் றஉம் பயன்படுத்தப்பட்டிருந்தால் இரு பிணைப்பு களுக்கு இடைப்பட்ட கோணத்தில் நிலைப்புத்தன்மை இருக்க முடியாது. ஆய்வுகளின் (நிற நிரல், இரு முனைத்திறன்) முடிவுகள் கலப்பினமாக்கலுக்குச் சார்பாகவே உள்ளன. sp மண்டலங்கள் உருவாதல் படம் 3 இல் காட்டப்பட்டுள்ளது. பெரிலியம் குளோரைடு மூலக்கூறின் Sp கலப்பினமாக்கல் படம் 4 இல் தரப்பட்டுள்ளது. d மண்டலங்களைக் கொண்ட தனிமங்களில் மேலும் சில கலப்பின வகைகள் உருவாதற்கு வாய்ப்பு உள்ளது. சதுரத்தின் மூலைகளை நோக்கி விரியும் dsp' என்ற வகையும், எண் முகியின் ஆறு மூலைகளை நோக்கி விரியும் dsp' எனும் வகையும் உலோக அணைவுச் சேர்மங்களில்பொதுவாகப்காணப்படுவன அணைவுச் சேர்மங்களில் உலோக அயனிக்கு (அல்லது அணுவுக்கு) எலெக்ட்ரான் இரட்டைகளை வழங்கும் ஈந்தணைவிகள் (ligands) அயனியைச் சுற்றி எவ்வாறு அமைந்துள்ளன அல்லது உலோக அயனி எவ்வகைக் கலப்பின மண்டலங்களைப் பயன்படுத்தியுள்ளது என்பதனை அறிவதற்குக் காந்தப் பண்புகளை அறிய வேண்டும். எடுத்துக்காட்டாக, நிக்கல் அணைவுச் சேர்மங்களைக் கருதலாம். நிக்கல் அணுவின் வெளிச்சுற்று எலெக்ட்ரான் அமைப்பு 3d84s; Ni 2+ அயனியின் எலெக்ட்ரான் அமைப்பு 3d8. ஹீண்டு விதியின்படி தாழ் ஆற்றல் நிலையில் நிக்கல் அயனி யின் d மண்டலம் பின்வருமாறு நிரப்பப்பட் டிருக்கும். Ni2+ 3d® Ti 11 1 இந்நிக்கல் அயனி நான்கு சயனைடு அயனிகளுடன் இணைந்து (Ni(CN),] எனும் அணைவு அயனி யைத் தரும். இவ்வயனி இரு வடிவ அமைப்புகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. (1) sp* இனக்கலப்பு மண்டலங்களாலான நான்முகி: (2) dsp ' இனக் Be படம்4 BeCl, Sp கலப்பினம்