86 இனச்செல்லாக்கம்
86 இனச்செல்லாக்கம் கள் (hermaphrodites) என்று பெயர். ஆனால் பெரும்பாலும் ஒரே விலங்கின் இனச்செல் உறுப்புகளி லிருந்து விந்தணுக்களும் சினையணுக்களும் உண்டா வதில்லை.விந்தணுக்கள் ஆண் விலங்குகளின் விந்தகங் பெண் விலங்குகளின் களிலும், சினையணுக்கள் சினையங்களிலும் (ovaries) தோன்றுகின்றன. விந்த மட்டுமே சினையணுக்களை அல்லது ணுக்கள் தோற்றுவிக்கக்கூடிய விலங்குகள் ஒருபாலுயிரிகள் (diaecious) எனப்படுகின்றன. ஆண் விலங்குகள் விந்தணுக்களையும் பெண் விலங்குகள் சினையணுக் களையும் தோற்றுவிக்கின்றன. இனச்செல்லுக்குக் கலவியணு, புணரி என்னும் வேறு பெயர்களும் உள்ளன. மூல இனச் செல்கன். ஆண் விலங்குகளின் விந்த கங்களில் விந்தக நுண்நாளங்கள் உள்ளன இவற் றின் சுவரில் இனப்படைத்திசுவாக அமைந்துள்ள செல்களே மூல இனச் செல்களாகும். இவற்றிலிருந்து விந்தணு முதற் செல்கள் தோன்றுகின்றன. இவ் வாறே பெண் விலங்குகளின் சினையகங்களிலுள்ள இனத்திசுவிலிருந்து சினையணு முதற்செல்கள் தோன்றுகின்றன. விந்தணு முதற் செல்களிலிருந்து விந்தணுக்கள் உண்டாவதை விந்தணுவாக்கம் என்றும், சினையணு முதற் செல்களிலிருந்து சினை யணுக்கள் தோன்றுவதைச் சினையணுவாக்கம் (spermatogenesis) என்றும், இவை இரண்டையும் பொதுவாகக் குறிப்பிடுமிடத்து இனச்செல்லாக்கம் (oogenesis) என்றும் கூறுவர். விந்தணுக்கள். விலங்குகளின் விந்தணுக்கள் உரு வத்திலும், பருமனிலும், அமைப்பிலும் பெருமளவு வேறுபடுகின்றன. இவை நீளிழை உடையவை, நீளிழையற்றவை என இரு வகைப்படும். உருளைப் புழுக்கள், பலகாலுயிரிகள், கடின உண்ணிகள் நண்டு, இரால் போன்ற ஒட்டுடலிகளில் நீளிழை யற்ற விந்தணுக்கள் காணப்படுகின்றன. பெரும் பாலான விலங்குகளின் விந்தணுக்கள் நீளிழையுடை பவை. நீண்டு குறுகிய உருவுடைய இவ்வகை விந்தணுக்களில் தலை, கழுத்து, இடைப்பகுதி,வால் என்னும் நான்கு பகுதிகளைக் காணலாம். தலை உருண்டையான அல்லது சற்றுத் தட்டை யான வட்டம், நீள்வட்டம் அல்லது வேல் போன்ற வடிவமுடைய தலையின் பெரும்பகுதி நியூக்ளியசால் நிரப்பப்பட்டுள்ளது. அக்ரோசோம் எனப்படும் தலைப்பாகை உச்சிப்பொருள் நியுக்ளியசுக்கு ஒரு போல அமைந்துள்ளது. இதில் புரத நொதிகளும் பல் சாக்கரைடுகளும் மிகுந்துள்ளன. இந்த அமைப்பு, கரு வுறுதலின்போது, விந்தணுவின் தலைச்சினையணுக் குள் செல்வதற்குப் பயன்படுகிறது. அக்ரோசோம், ஓர் அக்ரோசோமச் சவ்வினால் சூழப்பட்டுள்ளது. நியுக்ளியசின் பின்பகுதி நியுக்ளியக் கிண்ணத்தில் பொருந்தியிருக்கிறது. இக்கிண்ணம் நியுக்கிளியசுக்குப் பாதுகாப்பாகவும் தலைப்பகுதிக்கு வலிவூட்டும் சட்டமாகவும் செயல்படுகிறது. தலைக்கும் இடைப் பகுதிக்கும் இடையிலுள்ள குறுகிய சிறுபகுதி கழுத்தாகும். இங்கு இரு மையத்துக்கள்கள் உள்ளன. நியுக்ளியசின் பின்முனை யிலுள்ள நுண்ணிய உட்குழியில் அமைந்துள்ள மையத்துக்கள் அண்மை மையத்துகள் எனப்படுகிறது. அதற்குச் சற்றுப்பின்னால் அமைந்திருப்பது சேய்மை மையத்துக்கள் எனப்படுகின்றது. அண்மை மையத் துகள் கருவுறுதலின்போது விந்தணு நியுக்ளியசுடன் சினையணுக்குள் சென்றுவிடுகின்றது. சேய்மை மையத்துகள் விந்தணுவின் அச்சிழைக்கு அடித்துகள் களாகச் செயல்படுகின்றது. அன்மைத்துகள் குறுக்கு வாட்டிலும் சேய்மைத்துகள் நீளவாட்டிலும் அமைந் துள்ளன. சேய்மைத்துகளும் அதனைத் தொடர்ந்து பின்னால் அமைந்துள்ள பகுதிகளும் கருவுறுதலின் போது சினையணுவினுள் செல்வதில்லை; விந்தணு இடப்பெயர்ச்சி செய்து சினையணுவைச் சென்றடைய மட்டுமே இவை பயன்படுகின்றன. இடைப்பகுதி. அச்சிழையின் (axial filament ) அடிப்பகுதியே இடைப்பகுதியாக அமைகிறது. மைட் டோகாண்டிரியங்கள் இணைவதால் உண்டாகும் மைட்டோ காண்டிரியப் பொருள்கள் நெருக்கமாக அச்சிழையைச் சூழ்ந்து கொள்கின்றன. பாலூட்டி களில் இப்பொருள் ஒரு திருகு சுருளாக அச்சிழையைச் சுற்றி அமைந்துள்ளது. விந்தணுவின் இடப்பெயர்ச் சிக்குத் தேவையான ஆற்றல் மைட்டோகாண்டிரியத் திலிருந்து வெளிப்படுகிறது. இங்கு சேமித்து வைக்கப் பட்டுள்ள ஆற்றல் முழுதும் தீர்ந்த பின்னர் விந்தணு செயலிழந்து போகும். வால் வளைய வடிவமுள்ள மையத்துகள் ஒன்று சில விந்தணுக்களின் இடைப்பகுதிக்கும் வால் பகுதிக் கும் இடையில் காணப்படுகிறது. வால் பகுதி விந் தணுவின் மிக நீளமான பகுதியாகும். இந்த நீளிழைப் பகுதியில் அச்சிழையும் அதனைச் சுற்றி மெல்லிய படலமாக அமைந்த சைட்டோப்பிளாசமும், செல் சவ்வும் உள்ளன. அச்சிழையானது நடுவில் அமைந் துள்ள இரு உள் நுண்நார்கள், அவற்றைச் சுற்றி யமைந்த ஒன்பது நுண்நார்கள் ஆகிய பதினொரு நுண்நார்களால் ஆகியது. பாலூட்டிகளின் விந் தணுக்களிலுள்ள அச்சிழையில் ஒன்பது நுண்நார் களாலாகிய வெளிச்சுற்று நுண்நார்கள் வேறு உள்ளன. விந்தணுக்கள் வாலை அசைத்து நீரில் அல்வது உடல்நீர்மத்தில் நீந்திச் செல்கின்றன. வாலின் பின்நுனி மிக மெல்லியதாக உள்ளது. இதனை நுனிவால் எனக் குறிப்பிடுவர். இப்பகுதி யில் இரண்டாம் வெளிச்சுற்று நுண்நார்கள் இருப் பதில்லை; சைட்டோபிளாசப்படலம் மிக மெல்லிய தாகவுள்ளது.