88 இனச்செல்லாக்கம்
88 இனச்செல்லாக்கம் துகள் உண்டாகிறது. இது நியுக்ளியசின் முன் முனைக்கு அருகில் நிலை கொள்கிறது. இத்துகள் மென்மேலும் பெரியதாகி அக்ரோசோமாக மாறு கிறது. நுண் குமிழிகளின் சவ்வு அக்ரோசோமையும் நியுக்ளியசின் முன்பகுதியையும் ஒரு மகுடம் போலச் சூழ்ந்து கொள்கிறது. மீதமுள்ள கோல்கைப்பொருள் கோல்கை எச்சமாகச் செல்லிலிருந்து களையப்படு சில கிறது. அக்ரோசோமக் கூம்பு காணப்படுகிறது. அக்ரோசோமத் துகளுக்கும் நியுக்ளியசுக்கும் இடையில் நீள்வட்டத்தில் தோன்றும் குச்சி போன்ற ஓர் அமைப்பு அக்ரோசோமக் கூம்பாக மாறுகிறது. விந்தணுக்களில் மையத்துக்கள்கள் இரண்டும் நகர்ந்து சென்று நியுக்ளியசின் பின்பக்கத்தை அடைகின்றன. அவற்றுள் ஒன்று நியுக்ளியசின் பின் முனையிலுள்ள நுண் உட் குழியில் குறுக்குவாட்டத்தில் நிலைகொண்டு அண்மை மையத்துகளாக அமைகிறது. மற்றொன்று முன்னதற்குச் சற்றுப் பின்னால் நீளவாட்டத்தில் நிலைகொண்டு சேய்மை மையத்துகளாகிறது. இது அச்சிழைக்கு அடித்துகளாக அமைகிறது; அச்சிழை அதனின்று தோன்றிப் பின்னோக்கி நீளுகிறது. விந்தணுச் செல்லில் காணப்படும் மைட்டோகாண் டிரியங்கள் முதலில் சேய்மை மையத்துகளைச் சூழ்ந்து காள்கின்றன. பின்னர் அவை ஒன்றுடன் ஒன்று மைட்டோகாண்டிரியப் இணைந்து பொருளாக மாறி அச்சிழையின் அடிப்பகுதியைச் சுற்றி மிக நெருக்கமாக அமைந்து, விந்தணுவின் இடைப்பகுதி யில் தங்கிவிடுகின்றன. பாலூட்டிகளின் விந்தணுக் களில் மைட்டோ காண் ரியங்கள் இணைந்து அச் சிழையின் அடிப்பகுதியைச் சுற்றி ஒரு திருகு சுருளாக அமைகின்றன. சில விலங்குகளின் விந்தணுக்களில் பின்முனையின் இடைப்பகுதியில் ஒரு வளைய மையத் துகள் தோன்றுகின்றது. டி விந்தணுவாக உருமாறும் விந்தணுச்செல்லின் சைட்டோப்பிளாசம், விந்தணுவின் தலை, இடைப் பகுதி வால் ஆகிய பகுதிகளில் மெல்லிய படலமாக அமைகிறது. விந்தணுச்செல் குறுகி நீளும்போது தேவையற்ற சைட்டோப்பிளாசமும் எஞ்சியுள்ள மைட்டோகாண்டிரியங்களும், கோல்கைப்பொருளும் விந்தணுவிலிருந்து களைந்து எறியப்படுகின்றன. பெரும்பாலும் அனைத்து விலங்கு வகைகளிலும் விந்தணுவாக்கம் இது போலத்தான் நடைபெறும். ஆனால், விதிவிலக்காகச் சில விலங்குவகையில் மிகச் சிறு வேறுபாடுகள் காணப்படலாம். மூல சினையணுவாக்கம். விந்தகங்களிலுள்ள இனச்செல்கள் பலமுறை பிளவுற்று விந்தணு முதற் செல்களாக மாறுவனபோல், சினையங்களிலுள்ள மூல இனச் செல்கள் மீண்டும் மீண்டும் பிளவுற்றுச் சினையணு முதற்செல்களாக மாறுகின்றன. வளர்ச்சி நிலை. ந்தணு முதற்செல்கள் இரண்டு முதல் நான்கு ஊடங்கு அளவு வளர்ந்த பின்னர் முதல் நிலை விந்தணுச் செல்களாக மாறு கின்றன. ஆனால் சினையணு முதற் செல்களின் வளர்ச்சியின் அளவும் பெரிது. அதற்கு அவை எடுத்துக்கொள்ளும் காலமும் மிகுதி. பொதுவாக பத்து மைக்ரான் (மைக்ரான்=0.001 மி.மீ) விட்ட முள்ள சினையணு முதற்செல்கள் மனிதனின் நூறு மைக்ரான், தவளையில் இரண்டாயிரம் மைக் ரான். கோழியில் நாற்பதாயிரம் மைக்ரான்கள் அளவு விட்டமுள்ள சினையணுச் முதல்நிலைச் செல்களாக வளர்ச்சியுறுகின்றன. இவற்றின் வளர்ச்சி வீதமும் மிகக் குறைவானது. இவ்வளர்ச்சி தவளைகளில் மூன்று ஆண்டுகளிலும், கோழிகளில் ஆறு முதல் பதினான்கு நாள்களிலும் நடைபெறு கிறது. இவ்வளர்ச்சிக் காலத்தில் நியுக்ளியோலசில் மிகுதியாகக் காணப்படுகிறது. அது சைட்டோப்பிளா சத்தை அடைந்து அங்கு புரதச் சேர்க்கையில் ஈடுபடு கிறது. தவளை போன்ற சில விலங்குகளின் சினை யணு முதற்செல்லின் நியூக்ளியோலஸ் பல நியூக்ளி யோலசுகளாகப் பிளவுற்றுச் செயல்படுகிறது. முதிர்ச்சியுறு நிலை. முழுவளர்ச்சியடைந்த முதல் நிலைச் சினையணுக்கள் குன்றல் பகுப்பு முறையால் பிளவுற்று, ஒற்றைப்படைக் குரோமோசோம் எண் ணிக்கையுடைய இரு சேய்ச்செல்கள் உண்டாகின்றன. இவற்றில் ஒன்று தாய்ச் செல்லைப்போலப் பெரிய சிறியதாகவும் உள்ளன. தகாவும் மற்றது மிகச் முன்னதற்கு இரண்டாம்நிலை சினையணுச்செல் என்றும், பின்னதற்கு முதல் துருவச்செல் என்றும் பெயர். இரண்டாம் நிலைச் சினையணுச்செல், மறை முகப் பகுப்பு முறையால் பிளவுற்று இரு சேய்ச்செல் கள் உண்டாகின்றன. இவற்றிலும் ஒன்று தாய்ச் செல்லைப்போலப் பெரியதாகவும் மற்றது மிகச் சிறியதாகவும் உள்ளன. பெரிய சேய்ச்செல் சினை யணு ஆகும். சிறிய சேய்ச்செல் இரண்டாம் துருவச் செல் ஆகும். இதே காலத்தில் முதல் துருவச்செல் ஒத்த அளவுள்ள இரு செல்களாகப் பிரிகிறது. துருவச் செல்கள் யாவும் சினையணுவைப் போன்றே ஒற்றைப் படைக் குரோமோசோம்களுள்ள நியுக்ளியசைப் பெற்றுள்ளன. ஆனால் மிகக் குறைவான சைட்டோப் பிளாசமுடைய இச்செல்கள் செயல் திறமின்றி அழி வுறுகின்றன. ஒரு சினையணு முதற்செல்லிலிருந்து ஒரு செயல்படும் சினையணுவும், மூன்று செயல் திறமற்ற துருவச் செல்களும் உண்டாகின்றன. ஒற்றைப்படைக் குரோமோசோம்களுடைய சினை யணு நியுக்ளியசுக்குப் பெண் முன்னோடி நியுக்ளியஸ் என்று பெயர். சினையணுக்கள் எனப்படும் பெண் இனச்செல்கள் பொதுவாகப் பெரியவையாகவும் உருண்டை வடிவ முடையவையாகவும் காணப்படுகின்றன. ஆனால் கொசு, கரப்பான் பூச்சி போன்றவற்றின் சினை யணுக்கள் நீளுருளை வடிவமுடையவை. மேலும் சினையணுக்களில் கருவுணவு எனப்படும் பொருள் மிகுதியாக உள்ளது. சினையணுக்களிலுள்ள ஊட்டப்