உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இனத்தொகை மரபியல்‌

94 இனத்தொகை மரபியல் கூறுகின்றன. குடும்ப அளவினை இச்சூழ்நிலையில் வரையறை செய்யாமல் விட்டுவிட்டால் எதிர்காலத் தில் இனத்தொகை பெருகப் பல இடர்ப்பாடுகள் ஏற் படலாம். இரா. பக்தவச்சலம் நூலோதி.கோ. ஜெயராஜ் பாண்டியன், சூழ் நிலையியல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1978; E, P. Odum, Fundamentals of Ecology, W.B. Saunders Co., Philadelphia, 1971. இனத்தொகை மரபியல் உயிரியல் ஆய்வுகளில், மரபியல் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இனத்தொகை மரபியலின் பல்வகைப் பன் முறைகளால் விலங்கியல் சிறப்புப் பெற்றுள்ளது. இத்துறை பல் குறிப்பிடத்தக்க கோட்பாடுகளையும், விளக்கங்களையும் கொண்டு விளங்குகிறது. ஒரு சிறப்பினத்திலுள்ள அனைத்து உயிரிகளும் அந்த இனத்தின் இனத்தொகையை உருவாக்கு கின்றன. ஓர் இனத்தொகையிலுள்ள தனி உயிரி களின் மரபுப் பண்புகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு சென்றடைகின்றன என்பதைப் பற்றி ஆய்ந்தறிதல் இனத்தொகை மரபி யல் எனப்படுகிறது. இந்த ஆய்வு முறைகளில் புள்ளி யியல் முறைகள் பெருமளவுக்குப் பயன்படுத்தப்படு கின்றன. மெண்டலிய இனத்தொகுதி. சிறப்பான இனத் தொகுதிகளைச் சேர்ந்த தனித்தனி உயிரிகள் களுக்குள் இணைகூடிப் பால்வழி இனப்பெருக்கம் செய்கின்றன. இனத்தொகுதிகள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வாழ்கின்றன; அங்கே நெருக்கமாக வாழும் விலங்குகள் பால்விழைச்சுக் காலங்களில் இணைகூடி இ னப்பெருக்கம் செய் கின்றன. அதனால் நெருங்கிய உறவுள்ள உயிரிகள் கூட்டமாகக் குறிப்பிட்ட இடத்தில் வாழ்கின்றன. இத்தகைய இனத்தொகுதிகள் மெண்டலிய இனத் தொகுதிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவ்விலங்குகளின் பண்புகள் தோன்றுவதற்கான காரணிகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலை முறையை அடையும்போது மெண்டலின் அடிப் படைக் கோட்பாடுகளுக்கு ஏற்பச் செயல்படுகின்றன. ஜீன் தொகுதி. பெரிய இனத்தொகுதியைச் சேர்ந்த அனைத்து உயிரிகளும் ஒரே அளவில் சினையணுக் களைத் தோற்றுவிக்கும் திறன் பெற்றிருப்பதாலும் அவற்றிற்குள் தம் விருப்பப்படி இணையும் வாய்ப்பு கள் பெற்றிருப்பதாலும் குறிப்பிட்ட பண்புகளைக் கட்டுப்படுத்தும் காரணிகள் தொகுதிகளையும் ஜீன்களின் நிகழ்லெண்ணையும் எளிதில் கணக்கிட முடியும். எடுத்துக்காட்டாக, ஓர் இனத்தொகுதியில் Aa என்ற இரு அல்லீல்கள் இருப்பதாகக் கொள்ள லாம். இதில் A ஓங்குதன்மை உடையதாகவும் a ஒடுங்குதன்மை உடையதாகவும் உள்ளன. இவற்றுக் கிடையில் தம் விருப்பப்படி புணர்ச்சி நடைபெறு மானால் ஓங்குதன்மைக் காரணிகளின் நிகழ்வெண ஒடுங்குதன்மைக் காரணிகளின் நிகழ்வெண்ணை விடக் கூடுதலாக இருக்கும். ஏனெனில் இந்த ஜீன் களால் தோற்றுவிக்கப்படும் பண்பு தூய இனவழிப் பெற்றோர் தலைமுறையில் ஜீன் அமைப்பையும், அதன் நிகழ்வெண்ணையும் பொறுத்து அடுத்துவரும் தலைமுறையில் ஜீனின் அமைவும் நிகழ்வெண்ணும் மாறுபடும். இதனைக் கீழ்க்காணும் இனக்கலப்பு ஆய்வுகளால் அறிந்து கொள்ளலாம். பெற்றோர் தலைமுறை AA முதல் சேய்த் தலைமுறை A இரண்டாம் சேய்த AA Aa Aa தலைமுறை A a a ஓங்குதன்மை ஒடுங்கு தன்மையுடையன யுடையன ஹார்டி - வெயின்பர்க் விதி. இனத்தொகை மரபி யல் பற்றி மேற்கூறிய சில அடிப்படைப் பண்பு களைக் கொண்டு 1908 இல் ஹார்டி என்ற ஆங்கி லேயக் கணக்கியல் வல்லுநரும், வெயின்பர்க் என்ற ஜெர்மானிய மருத்துவரும் கீழ்வரும் கொள்கையினை வெளியிட்டனர். இதுவே ஹார்டி வெயின்பர்க் விதி என்றழைக்கப்படுகிறது. இவ்விதி தம் விருப்பப்படி புணரக்கூடிய, ஒரே அளவில் சினையணுக்களைத் தோற்றுவிக்கும் பெரிய இனத் தொகுதியில், ஜீன்களின் நிகழ்வெண்ணும், ஜீன் அமைப்பு நிகழ்வெண்ணும் பல தலைமுறைகளுக்கு மாறா என்று கூறுகிறது. ஆனால் அந்த இனத்தொகையில் இயற்கைத்தேர்வு தீடீர் மாற்றம் போன்ற காரணிகள் செயல்படாத நிலையில்தான் இந்த விதி பொருந்தும். இதனை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் எளிதாக அறியலாம். மனிதரில் நாவை நீளவாட்டத்தில் சுருட்டக் கூடியவரின் எண்ணிக்கை R அதற்குக் காரணமான ஜீன் நாலைச்சுருட்ட முடியாதவரின் எண்ணிக்கை -b அதற்குக் காரணமான ஜீன் I