100 இனப்பெருக்கத் துணை உறுப்புகள்
100 இனப்பெருக்கத் துணை உறுப்புகள் யாக வந்து இனப்பெருக்கத்துணை உறுப்புகளின் மேலுதடுகளில் இணைகிறது. ஆனால் சினையகம் இடுப்புக்குழியிலேயே தங்கிவிடுகிறது. இந்த குபர் னாக்குலம் அண்டாசய நாணாகவும் உருண்டை நாணாகவும் மாறி அமைந்துள்ளது. இடைச்சிறுநீரகக் குழல்களும், நாளங்களும் பொதுவாக மறைந்துவிடும். அவ்வாறு மறையர் விட்டால் விரிந்த நாணின் திசுக்களிடையே காணப் படும் சினையகத்தின் சிறப்புப் பணி, கரு முட்டையை யும் பெண் இனப்பெருக்க ஹார்மோன்களையும் உற்பத்தி செய்யும். 7 10' 2 11- ஆ.வாசுகிநாதன் 6 5 & இனப்பெருக்கத் துணை உறுப்புகள் பெண் இனப்பெருக்கத் துணை உறுப்புகளை வெளி உறுப்புகள், உள்ளுறுப்புகள் என இருவகையாகப் பிரிக்கலாம். கீழ் பெண் இனப்பெருக்கத் துணை வெளி உறுப்புகள். இதில் திரட்சிமேடு, பேருதடுகள், சிறுஉதடுகள். கிளைட்டோரிஸ், இடைகழி ஹைமன், யோனித்துளை சிறுநீர்த்துளை, துளையிடப்பகுதி ஆகியவை அடங் கும். இவ்வுறுப்புகள் முழுமையும் பெண்பாற் கரு வாய் (vulva) என்று குறிப்பிடப்படும். இடுப்பு எலும்பின் முன்னால் இருக்கும் எழுச்சியான பகுதியே திரட்சிமேடு ஆகும். பருவ வயதுக்குப் பிறகு இம் மேட்டில் முடி வளரும். இம்மேட்டிலிருந்து நோக்கியும், பின்புறமாகவும் பக்கத்திற்கொன்றாக இருதோல் நீட்சிகள் காணப்படும். இவை பேருதடு களாகும். இவை முன்புறம் முன் இணைப்பிலும் பின்புறம், மலத்துளைக்கு முன்புள்ள பின் இணைப் பிலும் இணைகின்றன. இவற்றின் வெளிப்பரப்பு. முடிகளால் மூடப்பட்டும், உட்பரப்பு முடிகளின்றி ரோஜா வண்ணத்தில் பல சரும மெழுகுச் சுரப்பி களோடும் இருக்கும். பருவமடையும்போது ஈஸ்ட் ரோஜன தூண்டலால் இவை நன்கு வளர்ச்சியடை கின்றன; இவை முதுமையில் சுருங்கத் தொடங் கும். கன்னிப் பெண்களிடம் இவ்விரு உதடுகளும் நடுப்பகுதியில் ஒன்றாக இணைந்து, யோனித் துளையையும், சிறுஉதடுகளையும் மூடிக்கொண் டிருக்கும். குழந்தைப் பிறப்புக்குப் பிறகு துளையிடப் பகுதியில் தசைகள் தளர்வதால் யோனித்துளை நன்றாகத் தெரியும். முதுமையில் மாதலிடாய் நின்ற பிறகும் யோனித்துளையை நன்கு காணலாம். இரண்டு பேருதடுகளையும் விலக்கிவிட்டுப் பார்க்கும்போது பக்கத்திற்கொன்றாக இரு சிறு உதடுகள் காணப்படும். இவற்றின் கீழ்ப்பகுதி ஒன்று சேர்ந்து கூட்டுமடிப்பை ஏற்படுத்துகின்றது. யோனித் பெண் இனப்பெருக்கத்துணை வெளி உறுப்புகள் 1.பிரிபியூஸ் 3. கிளைட்டோரிஸ் 3. பெருதடுகள் 4 . சிறுஉதடு கள் 5. இடைகழி 6. சிறுநீரகப்புறக்குழாயின் வெளித்துளை 7. யோனியின் முன்சுவர் 8. யோனி 9. நாவாயியக் குழி 10. கூட்டுமடிப்பு 11. துளையிடைப்பகுதி 12. மலத்துளை. துளைக்கும், கூட்டு மடிப்புக்குமிடையே உள்ள சிறு குழிவு நாவாயியக் குழி எனப்படும். வல்வாவின் முன்பகுதியில் இரு பேருதடுகளுக்கிடையே காணப் படும் நீட்சி கிளைட்டோரிஸ் என்று குறிப்பிடப்படு கிறது. இது ஆண் குறிக்கு இணையாகக் கருதப் படுகிறது. இரு சிறு உதடுகளுக்கு இடையே கிளை டோரிசுக்கும் ஹைமனுக்கு இடையே உள்ள உள்ள முக் கோணப் பரப்பு இடைகழி எனப்படும். இதன் நடுவில் சிறுநீர்க்குழாயின் வெளித்துளை உள்ளது. சாதாரண நிலையில் சிறுஉதடுகள் இதை மூடியிருக்கும். யோனித்துளையை அடைத்திருக்கும் சீதச் சவ்வின் வளர்ச்சியடையாத முழுமையான, தடுப்புச்சுவர் ஹைமன் எனப்படும். முதல் கலவியின்போது இது உடை ந்து விடுகிறது. குழந்தை பிறக்கும்போது ஹைமன் சிதைவுற்றுப் பல முனைகளாகக் காணப் படும். மலத்துளையின் முன் சுவருக்கும் யோனியின் பின் சுவருக்குமிடையேயுள்ள ஆப்புவடிலப் பகுதியே